Friday, August 10, 2007

 

கிண்ணம் நிறைய அழுக்கு-அதில் நெழியும் வண்ணவண்ண புழுக்கள்.....சாப்பிடத்தான்!!

THANK GOD IT'S FRIDAY !!

அமெரிக்காவில் இது ஒரு பிரபலமான ரெஸ்டொடண்ட். பெயரிலேயே அதன் உற்சாகம் தெரியுதா?

வாரம் முழுதும் வேலைவேலை என்று மூழ்கி விட்டு கொஞ்சம் மூச்சு வாங்க வாரஇறுதியை எப்படி கழிக்கலாம் என்ற நினைவிலேயே
வெள்ளிக்கிழமையே வீக்கெண்ட் மூடுக்குப் போய்விடுவார்கள். அன்று அலுவலகம் செல்வது எல்லாம் ச்சும்மா! மதியமே வீடுநோக்கி
ஓடிவிடுவார்கள் மாலையில் போக்குவரத்து பார்க்கவே சுவாரஸ்யமாயிருக்கும். கார்கள் விஷ்க்விஷ்க் என்று பறக்கும்.

காரில் மொத்தகுடும்பமும்...அதன் தலையில் ஒரு சின்ன போட் கவுந்திருக்கும், இன்னொருகார் ட்ராலியில் ஒரு பெரிய போட்-கோத்து
இழுத்துக்கொண்டுபோகும். மற்றொரு காரில் எத்தனை உருப்படிகள் உள்ளதோ அத்தனை சைஸ்களில் சைக்கிள்கள் ட்ரங்கின் பின்னால்
க்ளாம்ப் மாட்டி உருளும். இன்னும் வாட்டர்-ஸ்கூட்டர் மோட்டர்பைக் எல்லாம் போகும். எப்படிஎப்படியெல்லாம் விடுமுறையை அனுபவிக்கப்போகிறார்கள் என்பது இதிலிருந்தே நமக்குப் புரிந்துவிடும். அதைப் பார்க்கும் போதே நமக்கும் அதே உற்சாகம் தொத்திக்கொள்ளும்.

செயிண்ட்லூயிஸில் தங்கியிருந்தபோது ரங்கமணியின் பிறந்தநாள் வந்தது. அண்ணன் மகளும் மருமகனும் எங்களை ஈட்டவுட்
என்று வெளியில் அழைத்துச்சென்றார்கள். முதலில் நாங்கள் சென்ற இடம் -க்ரிஸ்பிகிரீம்- டோநட்! கண்ணாடி தடுப்புக்கு உள்ளே
டோநட்டுகள் தயாராவதை, அது ஒவ்வொரு பகுதியாக கடந்து வெளிவருவதைப் பார்க்கலாம். பார்க்கவே சுவை...வடைமாவு போல் டௌ
தயாராகி டோநட்களாக பிழியப்பட்டு கொதிக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்டு....பின் மறுபக்கம் திருப்பி போடப்பட்டு பின் சாக்லெட்
சாஸில் மற்றும் சர்க்கரைப்பாகில் டிப் செய்யப்பட்டு அவ்வளவும் மெஷினில்.... அழகாக கன்வெயரில் வரும் போது நாவில் எச்சிஊறும். அது புரிந்தோ என்னவோ
ஆளுக்கொரு டொநட் டிஷ்யு பேப்பரால் கவ்வியெடுத்து சுடச்சுட கொடுத்தார் அங்குள்ள பொறுப்பாளர். அப்புரம் வாங்காமல் வரமுடியுமா? ஒரு டஜன் வாங்கிக்கொண்டு நாங்கள் சென்றவிடம்தான்...TGI FRIDAY!

யூஎஸில் பெரிதும் ரசித்த ஒரு விஷயம்....எந்த ரெஸ்டொரண்ட் குழந்தைகளோடு போனாலும் ஆர்டர் செய்யதவைகள் வரும்வரை
குழந்தைகள் பொறுமை இழக்காமலிருக்க அவர்கள் கவனத்தை சுவாரஸ்யமாக்க ஸ்டூவர்ட்ஸ் முதலில் பொம்மைகள் படம்போட்ட பேப்பரும் சில கரையான்களும் அல்லது சின்னச்சின்ன புதிர்கள்...பொம்மைகள் என உற்சாகப்படுத்திவிடுவார்கள்!!!

வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். முடிவில் ப்ரஷ் ஜூஸ் வந்தது. குழந்தைகளில் பெரியவன் தனக்கு 'cup of dirt' வேண்டுமென்றான். என்.....னது? அழுக்கா..? அதுவும் கப்பிலா..? ஐய....!

அழுக்கு வந்தது அதுவும் கலர்கலராக புழுக்கள் நெழிய...! கொஞ்சம் அறுவெறுப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவன் ரசித்து சாப்பிடவிதம் அழுக்கையெல்லாம் துவைத்து காயப்போட்டாற்போல் பளிசென்று இருந்தது. சின்னவன் அதையே உர்ர்ர்ர்ரென்று
பார்த்துக்கொண்டிருந்தான்.

பின்னர் அந்த டெசர்ட் பத்தி தெரிந்துகொண்டேன். சாக்லெட் சாஸும டார்க் ப்ரௌன் சாக்லெட் புட்டிங், கருப்பு கலரில் கிடைக்கும் ஒரியோ பிஸ்கட்டும் கலந்து களிமண் போல் தயாரித்து அதில் நெழியும் புழுக்களாக 'gummy worms candy'..அதாங்க..ஜுஜூப்ஸ்!

கலர்கலராக நம்மூரில் கிடைப்பதை விட கொஞ்சம் ஹார்டாக இருக்கும். கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்.


சாப்பிட்டு முடிந்தவுடன், மருமகன் எழுந்து போய் ஸ்டூவர்டுடன் ஏதோ பேசிவிட்டு வந்தான். என்னவென்றதுக்கு, இந்த ரெஸ்டொரண்டில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஸ்டூவர்ட்ஸ் எல்லோரும் அவரை சூழ்ந்து நின்று
'ஹாப்பி ப்ர்த்டே டு யூ!' பாடி சின்ன கேக் கொண்டுவந்து வெட்டவைத்து மகிழ்விப்பார்களாம். ஆனால் இப்போது அப்பழக்கத்தை..
என்ன காரண்மோ?...விட்டுவிட்டார்களாம் என்றார். அதானே பாத்தேன்! இது நம்ம ராசியல்லோ!! அவசரமாக போணும் என்று ஆட்டோ பிடித்தால் அப்போதுதான் அவன் பெட்ரோல் பங்கில் கொண்டு நிறுத்துவான்..... ஆனால் அன்று எங்களுக்கு கொஞ்சோண்டு அதிர்ஷ்டம் இருந்தது போலும், சிறிது நேரத்தில் எங்களுக்கு பரிமாறியவர் வந்து ஒரு சிவப்பு மணிமாலை
ஒன்றை ரங்கமணி கழுத்தில் அணிவித்து ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்து 'ஹாப்பி ப்ர்த்டே!' என்றும் வாழ்த்தினார். அட்டையில்..
'அடுத்தமுறை சாப்பிடவரும்போது $5 கழித்துக்கொள்வார்களாம்!' வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடினோம்.
நாமோ ரெண்டுநாளில் கிளம்புகிறோம்...எனவே ட்ஸ்கௌண்ட் அட்டையை மருமகனிடம் கொடுத்தோம். ஆனால் அவன், இங்கு
வந்து பிறந்தநாள் கொண்டாடிய ஞாபகமாக வைத்துக்கொள்ளுங்கள், என்று கொடுத்துவிட்டான். உண்மையிலேயே நல்ல நினைவு
வாழ்த்து அட்டை! அமெரிக்க விஜயத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை.....மறக்கமுடியாதவை!!!!!!!!!!!

Labels:


Comments:
ரங்கமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். லேட்டானாலும் சொல்லிவிடுங்கள்.
அமெரிக்கா பற்றிய உங்கள் பயணக் கட்டுரைகள் படிக்க சுவையாக இருக்கிறது.
சகாதேவன்.
 
ரங்கமணிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அமெரிக்காவில் எந்தவொரு உணவகத்துக்குப் போனாலும், இதே மாதிரி ஜன்க் ஃபுட் கிடைக்கும்! எல்லாமே நினைக்க முடியா அளவுக்கு சக்கரை கலந்து! க்ரிஸ்பி க்ரீம் என்பது உச்சகட்ட ஜன்க் ஃபுட்! இங்கு எல்லாமே வெறும் பெயருக்கு மட்டும்தான். சக்கரை இங்கு எல்லா உணவு வகையிலும் கலந்து இருப்பார்கள். TGIF இன்னொரு ஜன்க். அங்கு எல்லாமே பெரிய அளவில் தருவார்கள். மொத்தத்தில் சக்கரை மட்டும்தான் நாம் உட்கொள்ளும் உணவு!!!
 
நன்றி! சகாதேவ்!
ரங்கமணியிடம் சொல்லிடறேன். ஆனாலும் இவ்ளோ லேட்டாவா..?
ப்ரவாயில்லை. ரங்கமணி wish u the same very short belated சொல்லச்சொன்னார்.
 
உங்கள் வாழ்த்துக்களையும் ரங்கமணிக்கு தெரிவித்தேன். எங்கிருந்தெல்லாமோ எனக்கு வாழ்த்துக்கள் வருதே..என்று சந்தோஷப்பட்டார்.
நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான்
தஞ்சாவூராரே!! அங்கு சாப்பிடும் ஐட்டங்கள் எல்லாம் பெரிய அளவிலேயே கிடைக்கும்தான்.
 
ப்புழுக்களானு அதீர்ந்தேன்.

இப்படிக்குட ஒரு உணவு வகையா.
ஏபடியோ ஒருத்தராவது ரங்கமணியை வாழ்த்தினார்களே.

நல்லா இருக்கணூ.
இப்போ பிடியுங்கள் நானும் எங்க வீட்டு சிங்க்கமும் அனுப்பும் வாழ்த்துக்களை. அழகா எழுதறீங்க நானானி..
நல்லா இரூந்தது.
 
குழந்தை முகத்தில் என்ன ஒரு சந்தோஷம் அந்த புழுவைக்கையில் வைத்துக்கொண்டு.... :)
 
வல்லி!
உங்கள் இருவரின் வாழ்த்துக்களையும்
கன்வே பண்ணிட்டேன்...காலரைத் தூக்கிவிடாத குறைதான்!வழிந்தது..வேறென்ன? பெருமைதான்.
சிங்கம் அவர்களுக்கும் உங்களுக்கும்
நன்றி!!!!
 
நானானி தலைப்பு பார்த்து உவ்வேன்னு இரூந்தது. படிச்சபிறகுதான் இது சாப்பிடன்னு புரியுது
 
குழந்தைகளை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே ஒரு சந்தோஷம்தானே!!
 
பிறந்தநாள் வாழ்த்துகள் ரங்கமணிக்கு.

கப்பு பாக்கவே அழகா இருக்கே. இங்க ஒன்னு பார்சல். ஆனா இனிப்பு நெறைய. ஆகையால வேண்டாம்னு ஒதுக்கீர்ரேன்.
 
Hello Nanani ,A jolly blog u have here .... desert with worms in it !!! wat a concept .looked mmm wat can i say .A very intresting blog u have rolling here .I toast u !! Cheers !!!!
 
முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது கண்மணி!!
 
ரங்கமணீயின் நன்றி..உங்களுக்கு ராகவன்!!
நல்லவேளை வேண்டாமென்று
சொல்லிவிட்டீர்கள்! இல்லாவிட்டால்
இங்கிருந்துகொண்டு பார்சலுக்கு நானெங்கே போவது? அதுக்கும் நன்றி!
 
hello! ramkumari! thank you for your cheerful comments and for your toast. go thro my other posts also. thankQ
 
ennam niraiya vishyangazh,athil pookkum vanna vanna katturaigazh.anbudan vaazhthuppaa punaiyum
nunivaal
 
நம்மூர்லே அடுத்த பொறந்த நாளைக் கொண்டாட வரும்படி அழைக்கிறேன். மறக்காமல்
பொறந்த தேதி குறிப்பிட்டிருக்கும் ஐடியை கொண்டு வாங்கப்பா. ட்ரைவிங் லைஸன்ஸ்ன்னாலும்
பரவாயில்லை. அதுலே இருக்கும் போட்டோவைப் பத்திக் கவலையை விட்டுறலாம். அது என்னவோ
ட்ரைவிங் லைஸன்ஸ்க்கு மட்டும் அப்படி ஒரு கலை (கொலை)அம்சம். போதாக்குறைக்கு மூஞ்சுமேல்
ஸ்டாம்ப்:-))))

ஹாங்.......... சொல்லமறந்துட்டேனே. பர்த்டே பாய்/கேர்ள்க்கு சாப்பாடே இலவசம்:-))))
 
ரொம்ப சந்தோஷம்!!துள்சிம்மா!
எங்க ரெண்டு பேர் பி/நாட்களும் ஜூலை,ஆகஸ்டில் வரும். ரெண்டு மாசம் நியூசியில் ஸ்டே!!சூப்பர்!!
உங்களையும் ஊரையும் பார்க்கலாம்.
பிறந்தநாள் மட்டும்தான் இலவச சாப்பாடா? மற்ற நாட்கள் எல்லாம் நாங்க இன்னா செய்றது..ஹூம்?
நான் ஆசைப்பட்டால் என் 'அம்மா'
நடத்தித்தருவாள்.
ஆ...மா....டிக்கெட் வாங்கி அனுப்பிவிடுவீர்கள்தானே! ஹி..ஹி..!
 
நுனிவால்!
தூர் வாராமல் கிடந்த கிணறு போல்
இருந்தது. எத்தைவேணாலும் எழுதலாம் ப்ளாக்கில் என்று தூர் வாரியதும் குபீரென்று பீரிட்டு எழுந்தன
அனுபவங்களும் நிகழ்வுகளும்.
மணிமேகலையின் பாத்திரம் போல் என் விஷயபாத்திரம் இன்னும் காலியாகவில்லை.
உங்கள் வாழ்த்துப்பாவுக்கு பொன்முடி
கொடுக்க நான் சங்க கால மன்னியில்லை கலிகால மானிடி!!ஹி..ஹி..ஆனாலும் நன்றிசொல்லலாமில்லையா?
 
அட! பேரன் ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுவதைப் பார்த்த பின்பும் அதை try பண்ணும் தைரியம் கடைசி வரை வரவேயில்லையா நானானி?
 
அவன் சாப்பிடும் அழகை ரசித்ததில் நான் ருசிக்க மறந்தேபோச்சு! ராமலக்ஷ்மி!
 
அவன் சாப்பிடும் அழகை ரசித்ததில் நான் ருசிக்க மறந்தேபோச்சு! ராமலக்ஷ்மி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]