Monday, July 30, 2007

 

புளிமிளகாய்... பிழி மிளகாய்..!.ரெண்டு வகை!!

சன்னிவேலில் இருக்கும்போது ஒரு நாள் புளிமிளகாய் செய்திருந்தேன். எப்போதும் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு நிறைய
செய்வேன். அன்று சாப்பிடவந்திருந்த உறவினன், அவனும் ஒரு காராசாமி....கார ஆசாமி! சப்புகொட்டி இட்லியோடு ஊற்றிஊற்றி சாப்பிட்டுவிட்டு, 'GLAD' டப்பாவில் ரொம்ப க்ளடாக டுகோ பண்ணிக்கொண்டு 'டாட்டா!' காட்டிவிட்டுப் போய்விட்டான். அதிலிருந்து என்ன
செய்தாலும் அவ்னுக்கும் ஒரு டப்பா தனியாக எடுத்து வைக்கவாரம்பித்தேன்.

10-12 பச்சை மிளகாய்....சின்ன எலுமிச்சையளவு புளியை கரைத்த கரைசல் --2 கப், 5-6 சின்னவெங்காயம், பெருங்காயம் கொஞ்சம்,
உப்பு, மஞ்சள்பொடி, கடுகு.உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க.


மிளகாயை காம்போடு வால்பக்கம் கொஞ்சம் கீறிக்கொள்ளவும், வெங்காயத்தை ரெண்டாக நறுக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய்
ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உ.பருப்பு காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும். ரெண்டும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கொஞ்சம் வத்தியதும் கொத்தமல்லி தூவி
சூடான இட்டிலியோடு பரிமாறலாம். விரும்பினால் இதில் சிறிது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிடும் முறை....மிளகாயோடு ஊற்றி பின் அந்த மிளகாயை இட்லிமேல் பிழிந்துவிட்டு பின் அதை தனியே வைத்துவிட்டு தின்னலாம்.

இன்னொருமுறை, மிளகாயையும் வெங்காயத்தையும் தனியே வதக்கி மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, தாளித்து புளிக்கரைசலோடு
அரைத்தவிழுதோடு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கலாம். இதில் என்ன சௌகரியமென்றால் மிளகாயை.....பாவம்!....பிழியத்தேவையில்லை.

இதும் கார ஆசாமிகளுக்கு மற்றும் ஜுனியர் சிடிசன்களுக்கு. மேலும் எச்சிஊறுபவர்களுக்கும் தான்!!!!!

Labels:


Comments:
ஆகா ஒரே காரமா வருதே அடுத்தடுத்து...செய்து பாத்துடரேன்.
 
கூல் டவுன் ப்ளீஸ்.

எதுக்கு இப்படி காரமா(வே) இருக்கீங்க? :-)
 
ஆஹா, எங்க அம்மாகூட இது செய்வாங்க. பேரை படிச்சதுமே நாவில் நீர் சுரக்க ஆரம்பிச்சாச்... இந்த வாரக்கடைசில செஞ்சு பாத்துட வேண்டியதுதான்... செய்முறைய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றிங்க.
 
Super item. Reminded of mom's cooking.
Another variation to this - instead of green chillies, use capsicum (green pepper) to make pulimilagai (this is my original idea, unless I am mistaken :-)).
 
முத்துலெட்சுமி..! அதான் வெல்லம் போட்டுக்கலாம் என்றேனே!!!
கட்டாயம் செய்யவும்.
 
டீச்சர் சொன்னா சர்தான்,
ஓகே! கூல்ட் டௌன்.
இனிமே இனிப்பாகவே இருக்கேன்.
 
லக்ஷ்மி!
அம்மாவின் ரெசிப்பிகள் எப்பவுமே
அருமை! நீங்களும் செய்து பாருங்கள்.
ஹாப்பி மேக்கிங் அண்ட் ஈட்டிங்!
 
hello sri!
i am sooo happy that i make everyone to remember their moms!!!
i too prepare this with multi-coloured capsicums & spring onions, which is mild hot.
we think alike, is'nt it?
 
ஒரு வழியாக தமிழ் font install பண்ணியாச்சு....

எல்லோர் வீட்டுக்கும் காரசார விருந்து வைத்தாயிற்று - அடுத்து இனிப்பு சமாச்சாரங்களா ? eagerly waiting..... :)

-RL
 
கூட்டாஞ்சோறில் ஆரம்பித்துப் புளி மிளகாய் வரை "நாம் பெற்ற பேறு பெருக இவ் வையகம்" என bolg மூலமாக நமது திருநெல்வேலி special-களை நிஜமாகவே வையகம் எல்லாம் சொல்லி தூள் கிளப்புறீங்க. காரம் தாங்காதவங்க கொஞ்சம் ஓரமா நின்னு ஏங்கட்டுங்க! அதற்காகக் குளிர்ந்து இனிப்புக்குத் தாவிட வேண்டாம். கொடுத்த வாக்கை மறந்திடாதீங்க. அதாங்க, சொக்க வைக்கும் சொதியின் செய்முறையை இன்னும் சொல்லவேயில்லையே!
 
ஆர்.எல்., ராமலக்ஷ்மி!!
இப்ப நான் என்ன செய்ய..?
இப்ப நான் என்ன செய்ய..?

எல்லாருக்கும் உண்ட மயக்கம் கொஞ்சம் தீரட்டும். விரைவில் உங்கள் விருப்பம் ப்ளாக் திரையில்!!!
 
ஆகாரமா இல்லை ஆ..ஆ..ஆ..காரமா?
மெனுவை கொஞ்சம் மாற்றுங்கள் ப்ளீஸ்.
சகாதேவன்.
 
சகா!
பொறுங்க, வாரேன்.
வெச்சா குடுமி அடிச்சா மொட்டை!!
 
அட கொஞ்சம் ஃப்ரீயா வுடுங்கப்பா நானானிய - அதான் போஸ்ட்லயே போட்டுட்டாங்களே காரப் பிரியர்களுக்கு மட்டும்னு.

RL
 
புளிமிளகாய்க்கு இணை எதுவுமில்லை. புளியும் வெங்காயமும் சேக்குற அளவைப் பொறுத்து உறைப்பு சிறப்பாக இருக்கும். நல்லா மெளகா புளியில வேகனும். அப்பத்தான் ஒறப்பு சீராப் பரவும். ஆனாக் கொஞ்சமாத் தொட்டுக்கனும். இட்டிலிக்கு நல்லாயிருக்கும். ஆனா சோத்துக்குத்தான் சூப்பர். அதுலயும் கெட்டித் தயிரை வெட்டி எடுத்து...
வெந்து குழைந்த சோறில் பிசைந்து
தட்டில் வைத்து புளிமிளகாயும் சேர்த்து விட்டால்
அது களகளவென்றே தொண்டையில் இறங்கும் சொர்க்கமடா!
 
RL!
இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா?
இன்னும் காரகாரமாக வருவேன்.
 
ragavan,
super! pulimozaka paattu.
enakkum kattiththiyir vettiyetukkap pitikkum.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]