Friday, July 27, 2007

 

கா.........ர இட்லிப்பொடி!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!

முத்துலெட்சுமி சொன்னாங்க 'தின்னே தீப்பாங்க திருநெல்வேலிக்காரங்க' ன்னு. ஒரு சிறு திருத்தம் 'உக்காந்து' என்று முதலில்
போட்டுக்கோணும். அதாவது வேலை வெட்டி செய்யாமல். எப்டி? ஸேம் ஸைடு கோல் போட்டுக்கிட்டேனா?

இது ஒரளவு உண்மைதான். பணக்கார அப்பா, பிள்ளைகளை செல்லமாக வளர்த்து விட்டுப் போய்விடுவார். அவர்கள் தலையெடுத்ததும்
ஒரு வேலையும் தெரியாமல், செய்தாலும் உருப்படியாக செய்யாமலும் தந்தை பாடுபட்டு சேர்த்த செல்வத்தை உட்கார்ந்து தின்றே
அழிப்பார்கள். பல குடும்பங்கள் இப்படி இடம் தெரியாமல் போயிருக்கின்றன.

இருந்தாலும் நாங்க மட்டும் வாய்க்கு ஒணக்கையாய் தின்னா போதுமா? அதனால்தான் நாம் தின்ன பேறு பிறரும் பெறவேண்டுமென
நா சப்புகொட்டும் சில இங்கே.

கா...........ர மிளகாய் பொடி. இட்லி, தோசைக்கு மேட்ச் ஆகும்.
ரெண்டு ஸ்பூன் மிளகு
150 கிராம் காய்ந்த மிளகாய்
மிளகாய்க்கு சமமாக கறிவேப்பிலை
7 அல்லது 8 உரித்த பூண்டு

கடாயில் தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகை போட்டு பொறிந்ததும், சிவப்புமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து மிதமாக
வறுக்கவும்.. பின் பூண்டு தவிர மற்றதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். இறுதியில் பூண்டு, உப்பு சேர்த்து ரெண்டு சுற்று சுற்றி
வாசம் போகாமல் பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைக்கவும்.

இந்தப்பொடி காரப்பிரியர்களுக்கு மட்டும். மற்றவர்கள் ருசித்துவிட்டு கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு
வந்தால் நான் பொறுப்பல்ல. இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும். கண்டிப்பாக எண்ணெய் அல்லது நெய் விட்டுக்கொள்ளவேண்டும்.
நெய்க்கு காரம் கொஞ்சம் மட்டுப்படும். பொடித்தவுடன் சாப்பிட்டால் வாசம் நல்லாருக்கும்.

Labels:


Comments:
இந்த இட்லி பொடி செய்முறை விளக்கம் சொன்னதிலிருந்து இது வரைக்கும் ஒரு முறை கூட இட்லி பொடி சுயமாக அரைத்தது இல்லை எனத்தெரிகிறது.

வெறும் மிளகாய்பொடி அரைத்து என்ன பயன் , கூடவே கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலையும் வறுத்து அரைக்க வேண்டும்!
 
வவ்வால்! பறந்து வந்து என் பதிவில்
தொங்கியதுக்கு நன்றி!
நான் சமையறைக்குள் நுழைந்த காலம் தொட்டு இட்லிப்பொடி சுயமாகத்தான் அரைத்துக்கொள்கிறேன்.நீங்கள் சொன்ன பருப்புவகைகள் சேர்த்த பொடி பொதுவாக எல்லோரும் அரைக்கும் பொடி. கடைகளிலும் கிடைக்கும். என் வீட்டில் இந்த இரண்டு வகை பொடிகளும் இருக்கும்.காரப்பொடி என்று சொல்லியிருக்கிறேனே. தயவுசெய்து செய்து பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள்.இல்லாவிட்டால் எல்லாம் தலைகீழாகத்தான் தெரியும்.
சரியா?விரைவில் 'சூப்பர்' என்ற கமென்டை எதிர்பார்க்கிறேன்!!
 
baley baley !vavvaalai oda oda viratti vitteerkaley....inimeyl vavvaal vanthu thonginaal jaakkirathaiyaakath thongum.super bathil.yekkaa!nellaikkaariyaa kokkaa!
anony -123
 
அப்படி போடு!
அனானி-ஒன் டூ த்ரி!
 
ரொம்ப காரமோ? இதுவரை செய்ததில்லை...நன்றிகள்.
 
வாங்க!வாங்க! தூயா!
கொஞ்சம் காரம்தான். ஆனால் கொஞ்சமாக தொட்டுக்கோ தொடச்சுக்கோ என்று தொட்டு சாப்பிட்டால் நன்றாகவேயிருக்கும்.
 
இட்லிப்பொடி விக்கறவன்

இப்படி எல்லாருமே வீட்லயே செஞ்சுகிட்டீங்கன்னா நா எப்டி யாவாரம் பன்றது.

இவரு குடுத்த பார்முலாபடி சாப்டீங்கன்னா, மக்கா புடிங்கிக்கும்
 
ஓ அப்படியா?
முயற்சி செய்து பார்க்கிறேன்.
பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும் :)
 
உங்க யாவாரத்துக்கு எந்த பங்கமும்
வாராது....பொடி வைக்கிறவரே! இல்லையில்லை..விக்கிறவரே!
செய்ய நேரமிலாதவர், தெரியாதவர்,
மனமில்லாதவர் போன்றோர் நிறைய
வாடிக்கையாளர்கள் உங்களுக்கு நிறைய உண்டு.கவலைப்படாதே சகோதரா!
 
அளவோடு உண்டால் புடுங்காமல்
வாழலாம்.
 
எதிர்பார்கிறேன். தூயா!
பல பேருக்கு உங்கள் பதில் இதமாக இருக்கும். என்னவொரு ந்ம்பிக்கை!!
 
திருனவேலிக்காரங்க பத்திச் சொன்ன்னீங்களே..அது உண்மை..பிள்ளைகளுக்கு ரொம்பச் செல்லம். தூத்துக்குடிக்காரனுக்குத் தெரியாதா திருனவேலிய.

நீங்க சொல்ற பொடிய நானும் சாப்பிட்டிருக்கேன். எய்யா சாமி...நாக்கு வெந்து போகும் மொத வாட்டீ. ஆனா சின்னப் பையனா இருந்தப்ப சண்டாளச் சட்டினியையே அல்வா மாதிரி தின்னவன். ஆகையால இந்தப் பொடியும் சுகந்தான்.

இது நல்லாயிருக்கும்னாலும் வேண்டாம். பின்னால...அதாவது வயசு கூடும் போது பிரச்சனையாகும். அதுல எண்ணெய் இல்லாம வறுத்த எள்ளையும் கூடப் போட்டு அரைச்சுக்கோங்க. அது நல்லாயிருக்கும். மணமாவும் இருக்கும்.
 
வாங்க, ராகவன் எப்ப வந்தீய!
நானும் சின்னதில் ரெண்டையும் அல்வா மாதிரி சாப்பிட்டுருக்கேன்.
இப்போ வயசாச்சில்ல...எப்பவாச்சும்தான்.
எள்ளு சேர்த்தால் அது எள்ளுப்பொடியாகிவிடுமே!
 
யாராச்சும் எங்கூர்காரங்க இந்த பொடியின் அருமை பெருமை பற்றி
சொல்லமாட்டீர்களா.....?பொடியின்
காரத்தைவிட கமெண்ட்டுகளின் காரம் தாங்கலேயே....!
 
நானானி நீங்க சொன்ன வகை ஓகே
மாத்தி மாத்தி பொருளைப் போட்டா ஒவ்வொரு சுவை.
ஆனா இது கறி வேப்பிலை பொடிபோல இருக்கும்

நாங்க செய்யும் முறை:

காய்ந்த மிளகாய்
தனியா[காய்ந்த மல்லி[இரண்டும் சம அளவு]
இரண்டும் லேசாக எண்ணை விட்டு வறுத்து பொடிச்சிட்டு பிறகு உரித்த பூண்டுபல் 10 அ 15 மிளாய்க்கு தகுந்தபடி போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து எண்ணை போட்டு இட்லி தோசைக்கு தொட்டுக் கொண்டால்.....
[இருங்க எச்சி ஊறுது]
டிரை பண்ணுங்க..இதும்பேரு பூண்டு மிளாகாப்பொடி
 
enga veetley podikalaikkooda aasaiyaa, chinna mulagaai podi ,periya mulagaai podinnu peyer vachithaan kooppiduvom.neenga sonna podi periya mulagaai podi. anony 123
 
நாலில் ஒரு பங்காக்கி செஞ்சு பாக்கலாம்னு இருக்கேன். ஆனா, இட்லி வேணுமே. சப்ளை பண்ணுறீங்களா?

அரிசி ஊறவைச்சு அரைக்கிறமாதிரி இல்லாம இட்லி ரெசிப்பி இருந்தா சொல்லுங்களேன்.

அடிக்கடி இப்படி ரெசிப்பி குடுங்க. அப்பப்ப திருநெல்வேலியின் மகிமைகளையும் எடுத்துவிடுங்க. ;)

-Mathy
 
// நானானி said...
வாங்க, ராகவன் எப்ப வந்தீய!
நானும் சின்னதில் ரெண்டையும் அல்வா மாதிரி சாப்பிட்டுருக்கேன்.
இப்போ வயசாச்சில்ல...எப்பவாச்சும்தான்.
எள்ளு சேர்த்தால் அது எள்ளுப்பொடியாகிவிடுமே! //

ஆமா எள்ளுப்பொடிதான். ஆனா நீங்க சொல்ற பொடியை விட இது கொஞ்சம் சாது. அதுனால ஓரளவுக்கு நல்லதுன்னு சொன்னேன்.

// நானானி said...
யாராச்சும் எங்கூர்காரங்க இந்த பொடியின் அருமை பெருமை பற்றி
சொல்லமாட்டீர்களா.....?பொடியின்
காரத்தைவிட கமெண்ட்டுகளின் காரம் தாங்கலேயே....! //

என்ன இப்பிடி வருத்தப்படுதீய..இருந்தாலும் நாங்க பழைய திருனவேலி மாவட்டந்தான....இந்தப் பொடிய எப்படித் திங்கனுந் தெரியுமா? நெல்லெண்ணையா நெறைய ஊத்தனும். அந்த எண்ணெய்யே செவசெவன்னு வழிஞ்சு வரும். அந்த எண்ணெய்ல இட்டிலிய மெத்து மெத்துன்னு ஒத்தி ஒத்திச் சாப்புடனும்...அடடா!
 
காரம் வயித்துக்கு ஆகறதில்லை.

படிச்சுப் பார்த்தே இப்ப வயிறு 'திகு திகு'ன்னு கிடக்கு (-:
 
இப்பத்தைக்கு, பின்னூட்டங்கள்தான் காரமாக இருக்கு...மிளகாய் பொடி சாப்பிட்ட மாதிரி..
 
சரியாச்சொன்னீக! ராகவன்!
காரப்பிரியர்களுக்கு என்று முதலிலேயே
சொல்லீட்டேன். ஆந்த்ராக்காரர்களுக்குப் பிடிக்கும்.
இதற்கு நெய், தயிர் எல்லாம் மானே,
தேனே, என்று போட்டுக்கொள்ளவேண்டும்.
ஆவக்காய் ஊறுகாய்க்கு நிறைய நெய் சேர்ப்பதுபோல். அப்பாடா!!
இன்னும் நான் 'புளிமிளகாய்' ரெசிப்பி
கொடுத்தால் கடித்து குதறி விடுவார்கள்.
 
கண்மணி!
ஒவ்வொரு கைக்கும் ஒரு பக்குவம்,மணம்.
வழக்கமாக நான் சொல்வது..கையில் கிடைத்ததையெல்லாம் அள்ளிப்போட்டு
தாளித்தால் அதுதான் சூப்பர் பதார்த்தம்!
உங்கள் பொடியை செய்துபார்த்து சொல்கிறேன். எச்சிஊறுதா பார்க்கலாம். கண்மணி..அன்போட பக்குவம் சொன்னதுக்கு நன்றி!
 
துள்சிம்மா!!!
ஐய்யயோ...இது நமக்கில்லை.
சிறுசுகளுக்கு.
 
டெல்ஃபைன்!
இதைத்தான் சொல்லீட்டேருக்கேன்.
நல்லவேளை துணைக்கு வந்தீர்கள்!
ரொம்ப நன்றி!
 
ithu poonudu serkkaalaleeyee pannalam. athuvum nallaa irukkum. puli milakay, inji serththum, serkkamalum seyyalaam, nallave irukkum, kadiththu kothara vendam, thairiyamaay podunga.
 
// நானானி said...
இன்னும் நான் 'புளிமிளகாய்' ரெசிப்பி
கொடுத்தால் கடித்து குதறி விடுவார்கள். //

புளிமெளகாயா...சூப்பர். எங்க வீடுகள்ள புளிமெளகா இல்லாம எந்த நல்லது கெட்டதும் நடந்ததில்லை. புளிமிளகாய்க்கு எனக்குத் தெரிஞ்ச ரொம்பப் பேரு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சம் அடிமை. :)
 
yaar adhu - enga tirunelveli podi-yai pathi kaarama comment viduradhu?

yedhaiyum alavodu saapitaal niraivodu vaazhalam - over kaaram endru ninaipavarkal, naanaani sonna madhiri thayir thottu saapittaal .... aaha amirtham.

naan try panniyaachu - idho certificate : sooooooooooooooper!!

RL
 
கீதா மேடம்! நன்றி!
எ..எ..எனக்கென்னா பயம்?
தை..தை..தைரியமாகப் போடுவேன்!

ஒவ்வொண்ணாப் போட்டு உண்டு இல்லைன்னு பண்ணிரமாட்டேன்?
 
முன்பு சொந்த-பின்பு அண்டை மாவட்டக்காரரே!!

ரொம்ப சந்தோசம்! பதிவு போடுமுன்
பின்னோட்டமிட்டதுக்கு! அதுவும்
நல்ல!!!!
 
வாங்க..வாங்க! ஆர்.எல்.!
உம்மைத்தான் தேடினேன்.
கைகொடுத்த தெய்வமல்லவா?
 
கண்மணி!!
உங்கள் மல்லிப்பொடி (சிறிது கறிவேப்பிலை சேர்த்து)செய்து பார்த்தேன்...ருசித்தேன்.
'நல்லாத்த்தான்..இருக்கு!' இப்படி எங்கள்வீட்டில் சொன்னால்.. போனால்
போகிறது என்று சொல்வது. ஆனால் நிஜமாகவே நல்லாருக்கு. அதிலும் பொடித்து உடனே சூடான இட்லியுடன்.
கைக்குக்கை பக்குவம் வேறுபடும் என்பது எவ்வளவு உண்மை!!!
கண்மணிக்கு நன்றி!
 
நானானி, அருமை. இன்னிக்கு மருமக கையில ரெசிபி கொடுத்துட்டேன். அவங்களுக்குக் காரம்னா உசிருதான்.
ராகவன் சொல்ற மாதிரி இப்பத்தான் நமக்குக் காரத்தோட ஒட்ட முடியலை. முன்னாலே ஆவக்காய் சாதம் இல்லாம சாப்பாடே துவங்காது,.
சும்மா சொல்லக்கூடாது ,வாசனை தூக்குகிறது. நல்லா இருக்குப்பா. புளிமிளகாய் உங்க வீட்டுப்பக்குவம் சொல்லுங்க.காத்துட்டு இருக்கேன்.
 
வாங்க, வல்லி! இப்பத்தான் வழிதெரிஞ்சுதா?
மருமகளுக்கு பிடித்திருந்ததா?
நீங்களும் ராகவன் சொன்னாமாதிரி
பொடியில் வழிந்து வரும் எண்ணெய்
தொட்டு சாப்பிடலாம்.
 
எப்போதும் stock வைத்திருப்பேன். காரம் மட்டுப் பட நீங்கள் சொல்லியிருக்கும் அளவுடன் 4 tb.sp கடலைப் பருப்பு, 1 ts.sp உளுத்தம் பருப்பு வறுத்துச் சேர்ப்பேன். சட்னி சாம்பார் செய்ய நேரமில்லையா, அவசரத்துக்குக் கை கொடுக்கும் இந்தக் காரப் பொடி!
 
கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு சேர்த்தால் அது சாதாரண இட்லிப்பொடி ஆகிவிடும், ராமலக்ஷ்மி!
இது ஸ்பெஷல் காரமாய் வேண்டுவோர்க்கு. காரம் மட்டுப்பட
நீங்கள் செய்த்தும் ஓகேதான்.
 
செஞ்சு பார்த்துட்டு வந்து சொல்ல தாமதமாகிவிட்டது!

எனக்கு மிகவுமே பிடித்தது!
நெல்லெண்ண சேக்கச் சொன்ன ஜி.ரா.வுக்கு நன்றி!
:)
 
வீஎஸ்கே! லேட்டாக வந்தாலும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வந்துவிட்டீர்கள். இதில் கெட்டித்தயிர் சிறிது சர்க்கரை தூவியும் அல்லது நெய் ஊற்றியும் சாப்பிட்டுப்பாருங்கள்.டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் போல் 'சூஊஊஊப்பர்' என்பீர்கள்.
தயிர் காம்பினேஷன் என்னோட பேவரைட்.
 
இந்த செய்முறையை முயற்சிக்க ஆசையாவும் இருக்கு..பயம்மாவும் இருக்கு
 
தூயா!
பொடி ரொம்ப டேஸ்டாக இருக்கும்.
இதோடு நெய் அல்லது கட்டித்தயிர்
சேர்த்து சாப்பிட்டால்...சூப்பர்தான்.
எதுக்கும் மிதமாக சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்! விட்டுவிடாதீர்கள்! சேரியா?
 
Genial dispatch and this mail helped me alot in my college assignement. Thank you seeking your information.
 
அனானி,
உங்கள் அசைன்மெண்டுக்கு இப்பதிவு எவ்வகையில் உதவியாயிருந்தது என்று சொன்னால் ரொம்ப சந்தோசப்படுவேன்.

பழசெல்லாம் தேடிப் படிப்பது உற்சாகமயிருக்கு. நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]