Friday, July 27, 2007

 

கறுப்புதான் எனக்குப் பிடித்த தோசை!!!!

தோசையம்மா தோசை அரிசிமாவும் "முழு" உளுந்தமாவும் கலந்து சுட்ட தோசை!! அதென்ன நடுவில் அரைகுறையாக ஒரு 'முழு'
வந்து விழுந்திருக்கிறதே?

சாதா தோசையில் வெள்ளை உளுந்து சேர்த்து அரைப்பார்கள். இது உளுந்தின் கறுப்பு நிறத் தோலோடு சேர்த்து அரைக்கும் தோசை.
புழுங்கல் அரிசி மூன்று கப்-- கறுப்பு உளுந்து ஒரு கப் என ஊறவைத்து அரைத்து(விரும்பினால் வெந்தயம் சேர்க்கலாம்) புளிக்கவைத்து
மறுநாள் தோசை வார்த்தால் மணம் அக்கம்பகமெல்லாம் நம் வீடு நோக்கி இழுக்கும்!!


எனக்கு இந்த தோசையோடு சாமரம் வீசவேண்டிய சேடிகள் யாரெல்லாம் தெரியுமா? வட்டவட்ட கறுப்பு தோசை... மேலே வெங்காயச்சட்னி, தேங்காய்,காய்ந்தமிளகாய்,பூண்டு சேர்த்தரைத்த சிகப்பு சட்னி.....கறுப்புதோசை-சிகப்பு சட்னி!! எந்த கட்சியிலும்
சேராத காம்பினேஷன்!!....பக்கத்தில் கட்டித்தயிர் மேலே சர்க்கரை தூவி! இது போக ஒரு கார மிளகாய்ப்பொடி!!

சாப்பிடுவது என்னவோ ரெண்டு தோசைதான் ஆனாலும் என் தட்டு எனும் கொலுமண்டபத்தில் இத்தனை பேரும் வீற்றிருக்கவேண்டும். இல்லையெனில் மகாராணியார் எழுந்து போய்விடுவார், ஒரு காலத்தில். ஹி...ஹி...


தோசையின் நிறம் சிறிது கறுப்பாக இருப்பதால் நாங்கள் செல்லமாக இடட பெயர் 'கறுப்பு தோசை'. மெத்மெத்தென்று ஊற்றி ஜோதிகா
மாதிரி சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்தால் சூப்பர் தோசை!

இந்த தோசை மாவில் ஒன்றிரண்டாக பொடித்த சீரகம். மிளகு கலந்து வார்த்தெடுத்தால் பெருமாள்கோயில் பிரசாதமான 'வங்கார'
தோசைதான்!!

சமீபகாலங்களில் 'தோசா மேளா' என்று சில ரெஸ்டொரண்டுகளில் ஐம்பது வகைதோசை! அறுபதுவகை தோசை! என்று கூவிகூவி
பரிமாறினார்கள். இத்தனை வகைகளா! என்று நுழைந்தால்....ப்பூ!!!!!!!!! தோசையில் பொடி தூவினால் 'பொடி தோசை', காரட் தூவினால்
'காரட் தோசை', வெங்காயம் தூவினால் ;வெங்காய தோசை', தக்காளி தூவினால் 'தக்காளி தோசை', இப்படி கீரை, துருவிய கோஸ்,
முந்திரிப்பருப்பு, பீட்ரூட், இப்படியே இருக்கிற காய், கீரை வகை பருப்பு வகை என்று தூவிதூவி விற்றால் ஐம்பது என்ன...நூறு வகை தோசைகள் சுடலாம். கொஞ்சநாள் பரபரப்பாக இருந்தது. ஒரு நாள் லொடக்கென்று படுத்துவிட்டது. ஏன் சொல்கிறேனென்றால் இத்தனை
வகை தோசைகளில் என்னருமை கறுப்பு தோசை இல்லவேயில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!


மேலே சொன்ன வெங்காயச்சட்னி, தேங்காய்சட்னி, கா.....ரமிளகாய்பொடி பற்றிய விபரங்கள் அடுத்து வரும் பதிவில்.

Labels:


Comments:
அருமை...தின்னே அழிப்பாங்க திருநெல்வேலிக்காரங்கன்னு சொல்லுவாங்க..எத்தனைவிதமான சப்புகொட்டும் அயிட்டம் இருக்கு ...எடுத்துவிடுங்க...நம்மளது எல்லாம்.எனக்கும் முழூஉளுந்து தோசைன்னா பிடிக்கும் ..அதுலயும் ஒரு ரோஸ்ட் வேணும் கடைசியில்.
 
சரியாத்தான் சொன்னாங்கோ.
ஆனாலும் கட்சீல இப்டி வாரிட்டீங்களே?
 
//..அதுலயும் ஒரு ரோஸ்ட் வேணும் கடைசியில்.//
முழு உளுந்து தோசையில் ரோஸ்ட் போட முடியாது.
 
innikki thaan unga ella pathivayum padichen...
romba nalla irukku...
niraya vishayangal paarambariyatha ninaivootradha irukku...
idhu pondra vishayangal niraya eludhunga...
vaazhthukkal...
 
முத்துலெட்சுமி!...கட்சீல மடையன் உங்களை வாரீட்டாரே!
நன்றி! மடையன்!என் பதிவுக்கு வந்ததுக்கு.
 
ஏன் இந்தப் பெயர்? மயன்?
 
அனானி! ரொம்ப மகிழ்ச்சி! எல்லா பதிவும் ஒருசேரப் படித்த்துக்கு.நன்றி!
 
நானானி,

எனக்கு ரொம்ப புடிச்ச பெயர் அது. ஆனாக்க இங்க அது ரொம்ப பொருந்தும். ஏன்னா "மடையன்"னா சமையல் காரன்ன்னும் ஒரு அர்த்தம் இருக்கு. மடைப்பள்ளி அப்படின்னா சமையம் கூடம்.
 
முடியாது என்பதே இல்லை நானானி..
நான் எப்போதும் ஒரு ரோஸ்ட் அதுல செய்து கடைசியில் சாப்பிடுவேனே...
நல்லா வருமே...தட்டையான கரண்டியை வச்சு சுட்டா சூப்பரா இருக்கும்.டேஸ்ட் அப்படியே ரொம்ப நேரத்த்துக்கு இருக்கும் வாயிலியே.
நீங்களும் ரோஸ்ட் செய்து பாருங்களேன்.
 
'மடையன்', இப்போ பேர் லல்லாருக்கு.
 
ருசி, நாக்குக்குநாக்கு மாறுபடும்தானே?
முத்துலெட்சுமி! ரோஸ்ட் நன்றாகவே
வரும். ஆனாலும் சிறிது கனமாக
ஊற்றினால்தான் சுவை.
 
இப்படியும் தோசை செய்வார்களா? செய்து பார்ப்பதாக முடிவு பண்ணிட்டேன்.
இங்கு குளிர்காலம் ஆகவே 24 மணித்தியாலங்களுக்கு புளிக்க வைக்கவா?
 
இப்படியும் செய்வார்கள். 24 மணித்தியாலங்கள் அதிகமென்று நினைக்கிறேன். எதற்கும் அதிகம் பொங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
 
வதக்கிய பூண்டுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு வைத்து அரைத்த சட்னியும் இந்த தோசைக்கு super combination ஆக இருக்கும்.
 
வெங்காயம் வேண்டாமா..? ராமலக்ஷ்மி?
மறந்துவிட்டீர்களா? அல்லது இப்படியேதானா? சொல்லுங்கள்.
 
வெங்காயம் தேவையில்லை. அது தனிச் சட்னி. இது உங்கள் சிகப்பு சட்னி வரிசையில் 3வது சேடி.
 
அப்ப சரி! ராஷ்மி!
செய்து பார்க்கிறேன். ஆனால் இது உங்க சட்னி! ஒகே? இல்லேனா...அதாலேயே எனக்கு முகத்துக்கு பாக் (face pack)போட்டுவிடுவார்கள்!!!!!!!!
 
முன் ஜாக்கிரதை
முத்தண்ணாவின்
மூத்த சகோதரியோ?
கவலைப் படேல்
காலை வாராது
பூண்டுச் சட்னி!
 
ஓகே..ஓகே! செய்துபாக்க நேரமில்லடி
ராஜாத்தி!!!
சீக்கிரம் செய்துவிட்டு சொல்கிறேன்.
 
நடத்துங்க நடத்துங்க உங்க தோசை சட்டினி சாம்ராஜ்ஜியத்தை. படம் போட்டீங்களா. இல்ல எனக்குத் தான் தெரியலையா.

வாசனை பசி கூட்டுதே..
 
valli,
appellaam padam pooda theriyaathu.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]