Friday, July 20, 2007

 

முந்திரி.....உன் பிந்திரி!

சென்ற மாதம் ஒரு மினி திருக்கோயில்கள் உலா வந்தோம். மதுரையிலிருந்து என் நாத்தனார் குடுப்பத்தோடு கிளம்பினோம். முதலில் பிள்ளையார்பட்டி, பிறகு சுவாமிமலை.....இதோடு அறுபடை வீடுகளும் பாத்தாச்சு, அப்புரம்
திருமணஞ்சேரி. ஆமா! இத்தெய்வங்களெல்லாம் அழைத்தார்கள். தவறாமல் சென்று தரிசித்தோம்.

அப்படி தரிசனம் முடிந்து வரும் வழியில்

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை செல்லும் வழியெங்கும் ஒரே முந்திரிக்காடு. சாலையோரத்தில் சின்னச்சின்ன பந்தல்கள்.
அதனடியில் பெண்கள் என்னவோ செய்துகொண்டிருந்தார்கள். ஆவல்மிக நாங்கள் சென்ற டாக்ஸி டிரைவரிடம் கேட்டேன்.
'முந்திரிப்பருப்பு வறுத்து விக்கிறாங்கம்மா!' என்றார். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஒரு பந்தலருகில் சென்று
பார்த்தேன். ஓடு பிரிக்காத முந்திரிக்கொட்டையை இரும்புக்கடாயில் போட்டு அடுப்பில் வறுத்துக்கொண்டிருந்தார்கள்
.இருபெண்கள். மற்றுமிருவர் வறுத்த கொட்டையை சிறு கல் கொண்டு உடைத்து பருப்பை தனியாக எடுத்து பாக் செய்து கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் ஒரு பெஞ்சில் அரைகிலோ பாக்கெட் பாக்கெட்டாக வறுத்த முந்திரிப்பருப்பு. அங்கேயே டேஸ்ட் பார்க்க நாலைந்து கொடுத்தார்கள். மொறு மொறுவென்று நன்றாக இருந்தது. அத்துடன் கடுகு சைசில் க்ரான்னூல்சாக
கிடைக்கும் முந்திரியும் பாக்கெட்டில் இருந்தது. அது எதற்கு என்றேன். மசாலாக்களில் அரைப்பதற்கு....ஓட்டல்காரர்கள் வாங்கிச்செல்வார்கள்.என்றார்கள். வீட்டு மசாலா என்ன பாவம் பண்ணியது? முழுமுந்திரி இரண்டு கிலோவும் மசாலாவுக்காக தூள் முந்திரி ஒரு கிலோவும் வாங்கிக் கொண்டோம். அவர்களுக்கு ஒரே சந்தோஷம்!

அப்பெண்கள் கொட்டையை உடைக்கும் விதம் பார்த்து எனக்கும் உடைக்கும் ஆசை வந்தது. 'நானும் உடைக்கவா..?'
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஐயையோ!!! அம்மா! உங்களால் முடியாது. எங்கள் கைகளைப்பாருங்கள்!' என்று
கைகளை விரித்துக்காட்டினார்கள். கடவுளே!!!! உள்ளங்கைகளெல்லாம் வெந்து புண்ணாகி காய்த்து கருகருவென்றிருந்தன.
கொட்டையை வறுத்து உடைக்கும்போது வெளிவரும் ஒருவகைப் பால் பட்டு கைகள் புண்ணாகிவிடுமாம்!! பாவம்!!
நாம் நெய்யில் வறுத்து பாயசம், மற்ற இனிப்புகளில் சேர்த்தோ அல்லது அப்டியேவோ மொசுக்கும் முந்திரிப்பருப்புக்கு
பிந்திரி உள்ள சிரமங்கள்தான் எத்தனை?
என் காமிரா காரில் வைத்துவிட்டு அங்கு போனதால் படமெடுக்க முடியவில்லை...ரொம்ப வருத்தம் எனக்கு. இனி கழுத்தில் மாட்டிக்கொண்டே செல்வது என்று முடிவெடுத்தேன்.

Labels:


Comments:
நீங்கள் முந்திரி, முந்திரி என்றதும் அவர்கள் எந்திரி, எந்திரி என்று சொல்லிவிட்டார்களா?
 
ஆமாம்! சகாதேவன், நானும் உடைக்கிறேன் என்றதும் அப்படித்தான்
சொன்னார்கள்.
 
முந்திரியைப் பார்த்தமா
முந்தானையில் கட்டினோமா
முகத்தை ஏறிட்டும் பாராமல்
காசை விசிறி விட்டு
போயிட்டே இருந்தமா...ன்னு
இருக்கிற பல பேர் மத்தியில்
நீங்க தனிச்சு நிக்கறீங்க நானானி!
[எப்பவும் உங்க வழி
"தனி... வழிதான்"கிறீங்களா..?]
வசிக்கும் இடம்
ருசிக்கும் உணவு
அணியும் உடை-என
அனுபவிக்கும்
அத்தனைக்கும் பின்
எத்தனை எத்தனை பேரின்
உழைப்பு உள்ளது என்பதை
சிந்திக்க தூண்டுகிறது
"முந்திரி.. உன் பிந்திரி"
 
// இனி கழுத்தில் மாட்டிக்கொண்டே செல்வது என்று முடிவெடுத்தேன்.//

எதை? முந்திரியையா?

ச்சும்மா:-))))

பாவம்தாங்க அந்தப் பொண்ணுங்க. கைக்கு க்ளவுஸ் மாதிரி ஒண்ணு போட்டுக்கலாம்.
ஆனா அதுக்கும் செலவாகுமே(-:
 
நீங்கள் சொன்னது ரொம்பச்சரி!
என் வழி எப்போதுமே தனீஈஈஈஈ வழிதான்.
எந்தத்துறையிலுமே உழைத்தவனுக்கு
அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை
இடையிலிருப்பவர் சுரண்டிக்கொள்வர்
இதுதானே நம் நாட்டின் சாபக்கேடு!
 
துள்சிம்மா...?
முந்திரியை கழுத்தில் மாட்டிகொண்டு
சென்றால்....நானே கொறிச்சிட்டே
போய்டேருப்பேனே..ஹி..ஹி..
 
ungalathu intha post(munthiri pinthiri), poonga-vila vanthirukkee patheengala?
 
பார்த்தேன்..ரசித்தேன்..
நன்றி! அனானி!
 
முந்திரி உடைப்பதில் மட்டுமில்லை - எந்தத் தொழிலிலும் உழைப்பும் உழைப்பின் வின் உள்ள துயரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
 
சீனா,
நீங்க சொல்லவது முற்றிலும் சரி.

‘காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா..’ என்ற பாட்டிலே ஒவ்வொருவர் உழைப்பின் பின் உள்ள துயரங்களை பாட்டில் அழககாக சொல்லியிருப்பார் பாடலாசிரியர்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]