Sunday, July 8, 2007

 

உங்கள் வோட்டு யாருக்கு? கிருஷ்ண்மூர்த்திக்கா...?விக்னேஷுக்கா...??

சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டி அமர்களமாக நடந்து முடிந்து, முடிவின் எல்லையை தொட்டு நிற்கிறது. அம்மம்மா.......!!!!!குழந்தைகள் எல்லோரும்
என்னமா...பாடிவிட்டார்கள்!!
ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்து, போகப்போக சூடுபிடிக்கப்பிடிக்க
சுவாரஸ்யம் கூடவாரம்பித்தது.
ஒவ்வொரு பாடலுக்கும் பாடியவர்கள் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையோ சந்தித்து பயிற்சி எடுத்து, ஆசி பெற்று தங்களை
மெறுகேற்றிக் கொண்டவிதம் பராட்டப் படவேண்டியது. இளம் தலைமுறையினர் பழமையை மறக்காமல் பங்கேற்றது மிகச் சிறப்பு.
எல்லாவற்றையும் விட பெற்றோர் முகத்தில் பொங்கி வழிந்த சந்தோஷத்தைப் பார்க்கவேண்டுமே!!! எதிர்பார்ப்பும்..தவிப்பும்...வேண்டுதலும்..
சந்தோஷமும்...பூரிப்பும்...துள்ளிகுதிப்பதுமாக மாறிமாறி அவர்கள் காட்டிய
பாவங்கள்!!!! ஈன்ற பொழுதில் பெரிதுவுந்த நேரமது
ஆரம்பத்திலேயே என்னைக்கவர்ந்தவர்கள்...கிருஷ்ணமூர்த்தியும் விக்னேஷும்தான். அவர்களது வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக
தெரிந்த்து எனக்கு.
அது போலவே அவ்விருவரும்தான் இறுதிச்சுற்றில் வந்து நின்றார்கள்.
எனக்கே உற்சாகமாயிருந்த்து!! அவர்கள் பெற்றோருக்கு எப்படியிருந்திருக்கும்?
இப்போது உங்கள் வோட்டு யாருக்கு? அவர்களுக்காக வோட்டு சேகரிக்க
வந்திருக்கிறேன். என்வோட்டு.....? இருவருக்கும்தான்!!
இருவருக்கும் உள்ள ஒற்றுமை. நல்ல மெருகேறிய குரல்வளம்...,கடுமையான உழைப்பு...உற்சாகம்...சிறப்பாகப்பாடி அனைவரையும் கவர்ந்தவிதம் எல்லாம் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியும்
விக்னேஷும் தான் சூப்பர் சிங்கர் போட்டியில் முதலிடத்தைப் பெறவேண்டும்
என்பதே என் நியாயமான ஆஆஆசை!!!!என்ன? சரிதானே!

Labels:


Comments:
யாராவது சிக்குவாங்களான்னு தான் தேடிட்டு இருந்தேன்..

குழந்தைகள் அனைவரும் அருமையாக பாடுகிறார்கள்.. அவர்களுக்கு ஒரு மேடை, வெளிச்சம் போட்டு கொடுத்தது வரவேற்கத்தக்கதே...


ஆனால் அப்படி குழந்தைகளோட திறமையை மட்டும் சோதிக்கும் நிகழ்ச்சி இல்லை இது... SMS ஒட்டுக்களும் பங்காற்றியிருக்கின்றன... ஏர்டெல் நிறுவனம் மக்கள் போட்ட ஓட்டுகளை வைத்து நல்ல காசு பார்த்து விட்டது...

போதாத குறைக்கு இராப்பிச்சைக்காரர்கள் போல பெற்றவர்களின் கூப்பாடுகளையும், கூழை கும்பிடுகளையும் காண்பித்து நல்ல நிகழ்ச்சியை கேலிக்கூத்தாய் ஆக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது...
 
கண்டிப்பா என் ஓட்டு கிருஷ்ணமூர்த்திக்கு தான்.
 
நல்ல நிகழ்ச்சி..ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் பார்க்கத் தோன்றியது..

ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை பேசிய பேச்சு கொஞ்சம் வருத்தை வரவழைத்தது..கிருஷ்ண மூர்த்தி கூட தந்தை அழுததுசரியில்லை என்றே கூறினான்..

நனானி என்னுடய வாக்கு கிருஷ்ணமூர்த்துக்குத்தான்..

அன்புடன்
அரவிந்தன்
 
நானானி, இந்த நிகழ்ச்சி பற்றிஎனக்கு எதுவும் தெரியலை.

ஒரு தந்தை தொலைக்காட்சி கேமிரா முன்னால் அழவேண்டிய அவசியம் என்னவோ. மகன் வெற்றிபெற வேண்டும் என்பதற்கா.

அமெரிகன் ஐடல் மாத்ரி நிகழ்ச்சியோ.
அங்கதான் இந்த மாதிரி டிராமாக்கள் நடக்கும்.:(((
 
நீங்கள் அழைத்தபடி எட்டு போட்டுள்ளேன்..

பார்த்து உங்கள் கருத்தினை சொன்னால் மிக்க மகிழ்ச்சியடைவேன்
 
அருமையாகப் பாடும் குழந்தைகளை
ரசிப்பது மட்டுமே என் விருப்பம். வியாபார நோக்கம் இல்லாத ஒன்று
ஏதாவது இருக்கா? லாபத்துக்கு சமமாக
செலவும் செய்திருப்பார்களே? எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கும் கிரிக்கெட் மாட்ச் கூட விதிவிலக்கல்ல. நீங்கள் குறிப்பிட்ட
'கேலிக்கூத்து' எனக்கும் ரசிக்கவில்லை. மாயன்! ஓடோடி வந்து சிக்கவைததுக்கு நன்றி!
 
ஜோ!
என் வோட்டு இருவருக்கும்தான்!
இருவரில் ஒருவர் ஏமாறுவதில் சம்மதமில்லை. பார்ப்போம்.
 
அரவிந்தன்!
ஜோவுக்கு சொன்னதுதான் உங்களுக்கும். வெற்றி மேடையில்
இருவரும் நிற்பதுதான் சரி!
அழைப்பை ஏற்று எட்டு இட்டதற்கு
நன்றி!
 
வல்லி!
கொஞ்ச நாட்களாக விஜய் டிவி-யில்
கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி
இது.குழந்தைகளை அவர்கள் திறமைக்கேற்ற துறைகளில் ஈடுபடுத்துவது இப்போது மும்முரமாக
நடைபெறுகிறது. இசைத்துறையில்...
ராம்ஜியின், 'இசை மழலை' தான் இதற்கு ஆரம்பம்.
 
//அமெரிகன் ஐடல் மாத்ரி நிகழ்ச்சியோ.
//

அந்த மாதிரி ஒரு reality show-தான் இது.

இந்தியாவில் முதன்முறையாக சோனி டிவி 'super singer' என்று போட்டி வைத்து இந்திய அளவில் இருவரை தேர்ந்தெடுத்தார்கள்.

தொடர்ந்து ஸ்டார்-விஜய் மற்றும் ஏர்டெல் நிறுவனம் இனைந்து தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

தற்பொழுது நடப்பது சிறுவர் / சிறுமியருக்கானது.

தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த போட்டி இது. பல ஸ்டேஜ்கள், பல நீதிபதிகள் பங்கேற்றனர். ஏர்டெல் நிறுவனம் மெயின் ஸ்பான்ஸராக இருக்கின்றது. SMS ஓட்டு என்பது இப்பொழுது எல்லா போடிகளுக்கும் நேயரின் பங்கேற்பை கூட்டுவதற்கான ஒரு சாதனமாகிவிட்டது. இதில் ஏர்டெல் நிறுவனம் பணம் அள்ளியதா இல்லையா என்று தெரியாது, ஆனால் நேயர்கள் எந்த மொபைலிலிருந்தும் ஓட்டளிக்கலாம் என்று தெரியும்.

இந்த மாதிரி ரியாலிட்டி போடிகளில் சில சாதகமான அம்சங்கள் என்னவென்றால் போட்டியாளர்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவம் வாய்ந்த பாடகர்கள் மூலம் coaching-ம் கிடைக்கின்றது. அந்த அனுபவங்கள் போட்டியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது.

பார்வையாளர்களின் பங்கேற்பு ஒரு புதிய பரிமாணத்தை தருகிறது. முதலில் நடத்திய சோனி டிவியின் போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களால் நிராகரிக்கப் பட்ட போட்டியாளர் பார்வையாளர்கள் போட்ட SMS ஓட்டினால் மீண்டும் மீண்டும் போட்டியில் நுழைந்து (wild card entry போல ஒரு போட்டி விதி இருந்தது) கடைசிச் சுற்றில் வெற்றி வாகை சூடினார்.

தற்போதைய போட்டியின் இறுதி சுற்றுக்கு வந்த இரு சிறுவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிரமாதமாக பாடினார்கள்.

அனுபவம், குரல் வளம் மற்றும் அதை வெளிப்படுத்தும் திறமை போன்றவைகளில் கிருஷ்ணமூர்த்தி முன்னனியில் இருக்கிறார்.
 
தெரியாதவர்களுக்காக மட்டும்.

ஆமாம் அமெரிக்கன் ஐடல் தழுவிய நிகழ்ச்சிதான் இது. எப்படி அமரிக்க இந்தியர்களின் SMS, Online வாக்குகளினால் சஞ்சயா முன்னேறினாரோ, அதே போல்தான் பல வெற்றிகளில் SMS இன் பெரிய பங்கு உள்ளது. பல வேறு இந்திய மற்றும் ஆசிய தொல்லைக்காட்சிகளில் இது போன்ற பெரியவர்களுக்கான நிகழ்ச்சி வெளிவந்து, இப்போது குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
 
வணக்கம்! ஸ்ரீதர் வெங்கட்!
என் வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்! மாயனுக்கும் வல்லியம்மாவுக்கும் தேவையான
விளக்கங்களை அழகாக கொடுத்துவிட்டீர்கள்! நன்றி!!
 
ஸ்ரீதர் நல்ல விளக்கமா சொல்லியிருக்கீங்க.. நன்றி.. எந்த மொபைல் போன்ல இருந்து நீங்க ஓட்டு போட்டலும் அந்த ஓட்டு போய் சேரும் Destination Data Bank ஏர்டெல் தான்... அவங்களுக்கு கண்டிப்பா ஒரு கமிஷன் உண்டு.. தாஜ்மகாலுக்கு ஓட்டு போடுங்கள்னு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கிற விஷயத்துக்கும், இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...

ஆனால் இத்தனை குழந்தைகளுக்கு மேடை அமைத்து கொடுத்திருப்பது நிச்சயமாக வரவேற்கதக்க நல்ல விஷயம்..
 
ppattian!
நல்ல விபரங்கள் சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி!
 
மாயன்!
இப்போது திருப்தியா?
உங்கள பின்னோட்டதின் கடைசி வரிகள் என்ககும் சம்மதமான்வை!!!
ஸ்ரீதருக்கும் நன்றி!!
 
my vote is for krishnamoorthy,
this is vivek from Trivandrum
 
பாலசாரங்கன் அவுட்டானதும் எனக்கு இனிம யாரு ஜெயிச்சா என்னன்னு ஆயிரிச்சி.
 
விவேக்!
சொன்னாமாதிரி வோட்டுப்போட்டீர்களா?
பதிவுக்கு வந்ததுக்கு நன்றி!
 
தருமி!
அவரது பாட்டில் எவ்வளவு பிழைகள்
இருந்ததோ..?
அதற்கு தகுந்தாற்போல் எல்லாம்
குறைத்துக்கொள்ளமாட்டார்கள்.ஹி.ஹி.!
 
//பாலசாரங்கன் அவுட்டானதும் எனக்கு இனிம யாரு ஜெயிச்சா என்னன்னு ஆயிரிச்சி.
//
பாலசாரங்கனின் தம்பியை ஒரு முறை காட்டினார்களே பார்த்தீர்களா? so cute they are :-)

மாயனுக்கும் நானானிக்கும் நன்றிகள்.

sms வோட்டு இல்லாமல் இப்பொழுது போட்டிகளே கிடையாது என்ற அளவிற்க்கு ஊடகங்கள் வளர்ந்து விட்டன.

ஷாருக்கானோடு 'சூடான இருக்கை'யில் உக்கார நானும் கூட சில SMS அனுப்பியது உண்டு. பைசா பெயர்ந்ததுதான் மிச்சம். வேறு ஒன்றும் பெயரவில்லை :-))
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]