Tuesday, July 3, 2007

 

நயாகரா....என் நெஞ்சினிலே...! - மீள் பதிவு

>
குற்றால அருவியையும் பாத்திருக்கேன்..பாபநாச அருவியையும் பாத்திருக்கேன்...மணிமுத்தாறு அருவியையும் பாத்திருக்கேன்..திற்பரப்பு அருவியையும் பாத்திருக்கேன்...ஒக்கனேக்கல் அருவியையும் ஜோக் அருவியையும் பார்த்திருக்கேன் என்வீட்டில் நானே செஞ்ச fountain falls-ம் பார்த்தேயிருக்கேன்...பாத்தாலும் பாத்தேன் நயாகரா....நான் வொன்னப் போலப் பாக்கல...கேட்டாலும் கேட்டேன் உன் ஓசை போல
கேக்கல.

சென்ற முறை அமெரிக்க விஜயத்தின் போது ஒரு ஐந்தாறு மாகாணங்கள் + கனடா வரை சுற்றியிருப்போம். அதில் நிறைய சுற்றியது, ரங்கமணியின்
சகோதரர் குடும்பத்தோடுதான். நயாகரா, சுதந்திரதேவி சிலை, ஹவுஸ் ஆன் தி ராக், மில் வாக்கி மியூசியம் முக்கியமான்வை.
நயாகரா போவது முடிவாகியதும் முதல்வேலையாக எங்கள் இருவருக்கும் கனடியன் விசா வாங்கிவிட்டார்கள். குறிப்பிட்ட நாளில்
அதிகாலை விமானம் பிடித்து எருமைமாட்டில்.....மன்னிக்கவும் baffello-வில் இறங்கினோம். முன் ஏற்பாட்டின் படி வாடகைக் கார்
சகோதரர் பேர் , பார்க்கிங் லாட் எண் முதலியவை போர்டில் குறிப்பிடபட்டிருந்தன. கவுண்டரில் சாவி வாங்கிக்கொண்டு காரை அடைந்தோம். புத்தம்புது போர்ட் கார்!

நேரே கனடியன் பார்டரை அடைந்து விசா ஸ்டாம்பிங் செய்து வாங்கிக்கொண்டு அருவிக்கரையை......ஐயய்யோ!! கரையிலெல்லாம்
இல்லை.. அருவியின் உச்சியிலிருந்து விழும் அழகைப் பார்க்கலாம். வெறும் வார்த்தையில் சொல்லிவிட்டேன்! கோயிலுக்குப்போய்விட்டு
சுவாமி தரிசனம் திவ்வியமாயிருந்தது என்போமே... அதைப்போல் ஒரு 'ப்ரம்மாண்ட தரிசனம்.....திவ்யம்!!!

படகு சவாரியில் அருவியின் அடிவாரம் வரை அழைத்துப்போகிறார்கள்.அருகே செல்லச்செல்ல.... முருகா..! தேவர்கள் பூமாரி தான்
பொழிவார்கள். எங்களுக்கு நீர்மாரி பொழிந்தார்கள்!!!! அப்பப்பா!!...என்ன சுகம் என்ன சுகம்!!!

அன்று முழுதும் கனடியன் பக்கத்தை முழுசாக அளந்தோம். பார்க்கப் பார்க்க பரவசம்! ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு நானும்
என் சகோதரியும்....ஓர்ப்படி?...யும் அருவியின் அழகையும் அதன் பேரோசையையும் கண்கொட்டாமல் காதும் மூடாமல் ரசித்துக்கொண்டேயிருந்தோம் எங்களை மறந்து. ரங்கமணிகள் வந்து ,'என்ன? அடுத்த இடம் போக வேண்டாமா..?' என்றதும்தான்
நகர்வோம் மனமில்லாமல்.

என் காமிரா கவரை படமெடுக்கும் சுவாரஸ்யத்தில் ஓரிடத்தில் மறந்து வைத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். திடீரென்று நினைவு
வந்ததும் ஓடினோம். அமெரிக்காவில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கும் யாரும் தொடமாட்டார்கள் என்று கேள்விப்
பட்டிருக்கேன். அந்த நம்பிக்கையில் போனோம். ஆனால் அது கனடா! அங்கு அப்படி கேள்விப்படவில்லை. எனவே கவர் அங்கு இல்லை!
பலவகையான மக்கள் கூடுமிடம் அல்லவா? கவர் தொலைந்த வருத்தமிருந்தாலும் நயகராவின் பேரழகு அதை மறக்கடித்தது!!!

கொண்டுபோயிருந்த சாப்பாடு வகைகளை அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கா....லி செய்துவிட்டு behind the falls பார்க்கச்சென்றோம்
வார்த்தையி சொல்லவொண்ணா திகிலடிக்கும் காட்சி!! போகும் வழியிலெல்லாம் அருவியில் சாகசம் செய்தவர்கள்....அதில் உயிரிழந்தவர்கள் பற்றி சுவற்றில் விவரித்திருந்தார்கள். படிக்கப்படிக்க உடம்பெல்லாம் சிலிர்த்தது!! சாகசம் செய்யபோனவர்கள் எல்லாம் அநியாயமாக உயிரை
விட்டிருக்கிறார்கள்.....ஆனால் தவறி விழுந்த சிறுவனொருவன் உயிரோடு
மீட்கப்பட்டிருக்கிறான்!!!! விதியின் சேட்டையைப் பாருங்கள்!!!!

இரவு அருவியின் மேல் ஒளிக்காட்சி! வண்ணவண்ண கோலங்களில் மிளிர்ந்தது நயகரா!! கண்கள் கொள்ளுமட்டும்
அள்ளிஅள்ளி விழுங்கி விட்டு புக் செய்திருந்த விடுதிக்குத்திரும்பினோம்.

நானும் என் ஓர்ப்படியும் ஒரே மாதிரி வேறு வேறு கலரில் புடவைகள் எடுத்திருந்தோம். ஆனால் என்று ஒன்றாக உடுத்துவது என்று
பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் அவரவர் அறைகளிலிருந்து ரெடியாகி வெளிவந்தோம். இருவரும் அதே புடவைகளைத்தான் உடுத்தியிருந்தோம். 'ஆஹா! என்ன ஒற்றுமை!' என்று ரங்கமணிகள் கலாய்த்தார்கள்.
>அன்று கனடாவிலிருந்து அமெரிக்கப்பக்கம் அருவி பார்க்கச்சென்றோம். காலை உணவை அங்குள்ள பார்க் பக்கம் போய் சாப்பிட்டோம்
காரை பார்க் செய்த இடத்தில் எங்கள் காரைத்தவிர வேறு காரேயில்லை. ஆனால் வேறொருவகையான பார்க்கிங் அங்கு இருந்தது!
ஆம்...! மீதியிடத்திலெல்லாம் கடல் புறாக்கள் கூட்டம்கூட்டமாக பார்க் செய்திருந்தன. அமைதியாக அமர்ந்திருந்த அவைகளை நாங்கள்
அவற்றின் குறுக்கே ஓடி ஓடி கலைத்து சிறிதுநேரம் குழந்தைகளாக மாறி விளையாடினோம்!!! மறக்கமுடியாத நிகழ்வு!
புறாக்களை தொந்திரவு செய்ததற்கு பரிகாரமாக மீதியிருந்த 'கடலை, மற்ற கொறிக்ஸ் எல்லாத்தையும் நொறுக்கி அவைகளுக்கு
வாரியிறைத்தோம். பறந்து பறந்து அவை கொத்தித்தின்ற அழகே அழகு...!!!!!
அதன் பிறகு அவள் என்னை கூட்டிச்சென்ற இடம்தான் என்னைப்பொறுத்தவரை முக்கியமானது. 'நிறைய பேருக்கு இது தெரியாது
அடிக்கடி வருவதால் தனக்குத்தெரியும்' என்று அழைத்துச்சென்ற இடம்! நயாகரா......அருவியல்ல... ஆற்றின் கரையோரம்!!!!!
ரொம்ப நெருங்கிவிடாதபடி சிறு சிறு பாறைகள் தடுப்பு போல் அமைந்திருந்தயிடத்தில் அப்பாறைகளில் அமர்ந்து கொண்டு ஆற்று
நீரை அள்ளிஅள்ளிப் பருகினோம். கால்களை நனைத்தோம்...புனிதநீராக தலையில் தெளித்துக்கொண்டோம். இரண்டடி தள்ளி ஆறு
கூர்மையான கத்தி போல் ஓடுகிறது. கையை விட்டால் துண்டாக நறுக்கிவிடும்....காரணம் சில அடி தூரத்தில் ஆறு..அருவியாக
இறங்குகிறது!!!!

காணக்கிடைக்காத காட்சிகளெல்லாம் காணவைத்த ரங்கமணியின் சகோதரர் குடும்பத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!!!

கடைசியில் பார்த்தால் இவ்வளவு காட்சிகளையும் நான் என் காமிராக் கண்கொண்டு தான் பார்த்திருக்கிறேன்!!
என் மகன் சொன்னமாதிரி....அடித்து முழக்கியிருக்கித்தானிருக்கிறேன்!!!!!!!!!!!!!!

Labels:


Comments:
நயாகரா இன்னும் என் லாதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது நானானி.
அதென்ன இரைச்சல். அந்த ஐமாக்ஸ் பாத்தீங்களா.

நாங்கள் போனது அக்டோபர்.அதனால் போட்டில் போகவில்லை. வெள்ளியிலிருந்தே ரசித்தேன்.
பெற்றோரோடு போவதற்கும் மாப்பிள்ளை,பெண்ணோடு போவதற்கும் நிறைய வித்தியாசம்.
அவங்க கிட்ட இன்னும் கொஞ்சம்னு அடம்பிடிக்கலாம். இவங்ககிட்ட ஷெட்யுல் பிரகாரம்செய்யணும்:)))
 
வரணும்!
நாங்கள் முந்தின தலைமுறையோடும்
போகவில்லை, பிந்தின தலைமுறையோடும் போகவில்லை.
சக தலைமுறையோடு போனதால்
சகஜமாக 'பக்கும் பக்கும் கடல்புறா..'என்று விளையாடி..நீரில்
காலாடி...எஞ்சாயினோம்!!வல்லி!
 
innum konja neyram padiththirunthaal nayagara falls appadiye yen veettukkuzh paayinthirukkum endru ninaikkireyn......appadi oru layippaik kondu vanthu vitteerkazl.
ANONY-mouse 10 clik seyikirathu
 
Wow!.. I agree.. We went with my daughter and SIL. It was mid-summer and as we approached the place,the mist was raising and gave such a joy.. But going in the boat and standing near the falls was an unforgettable experience. Shrieking and yelling and getting sprayed with the mist.. Oh my.. the "maid of the mist" was the best in the trip..The photographs with all of us looking like some blue giants in the bellowing wind..The facilites and the atmosphere was very good.


Recently read one novel based in Naigara Falls. Very good one..

Thanks for bringing it all back.,
 
aakaa அருமை அருமை

நயாகராவினைப் பற்றிய பதிவு மிஅக் அருமை. நேரிலேயே பார்ப்பது போன்ற நினைவு. காமிராக்கண் கொண்டு கலைநயத்துடன் பார்த்த பார்வை அழகு.

கடற்புறா - சிறு குழந்தையாய் சகோதரி(ஒர்ப்படி) - யுடன் மனதிற்குப் பிடித்த புடவையினில் - மொ(கொ)றுக்ஸினை வாரி இறைத்து மனம் மகிழ்ந்தது - அருமை அருமை.

இப்படி எல்லாம் எழுத நானானியினால் மட்டுமெ முடியும்.

நல்வாழ்த்துகள்

(இப்பத்தான் வந்தேன் வலைச்சரம் மூலமாக)
 
அப்போ, யூ ஆர் த லாஸ்ட்- ஆ
சீனா?
 
அன்பின் நானானி

லாஸ்ட் என்பது ஒரு absoloute term இல்லை - பருங்களேன் - இன்னும் ஆயிரம் மறு மொழிகள் வரும். அது இந்த அருமையான பதிவின் பெருமை. தங்கள் நகைச்சுவை அப்படியே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ( உங்களுடைய ஆறாவது மறு மொழிக்காக ஆறு ஹா )என மனம் விட்டுச் சிரிக்க வைக்கிறது.

தங்கள் பதிவுகள் இன்னும் நிறைய படிக்க வேண்டும் - படிக்கிறேன் - மறு மொழி இடுகிறேன். துளசிக்கு வேறு வாக்குக் கொடுத்திருக்கிறேன்
 
மீண்டும் படித்துவிட்டேன் நானானி. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்க்கள்.
 
நீங்க சொன்னது ரொம்ப சரி@ சீனா!
பார்ருங்கள்! வல்லி, நயாகராவை நன்றாகப் பார்த்துவிட்டு வந்து பதிலளித்திருக்கிறார்கள்!!
 
வாங்க.வாங்க..வல்லி!
நயாகராவை முழுவதுமாக ரசித்துவிட்டு வந்து எழுதியதுக்கு அதிலும் முதலும் பிறகுமாக(கடைசி என்றால் சீனா கோபித்துக் கொள்வார்)
எனக்கு நிறைய பின்னூட்டங்கள் வரணும் என்பது அவரது ஆசை.அதற்கு என் நன்றி! சீனா!)
இந்த முறை நன்கு ரசித்திருப்பீர்கள்,
அப்படித்தானேப்பா!!
 
அன்பின் நானானி

இன்னும் மறு மொழிகள் வரும் - நான் எப்பொழுதுமே ரசிப்பவன் தங்களீன் நகைச்சுவையை
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]