Tuesday, July 3, 2007

 

இப்பமே...இப்பமே...!

'அம்மா!..எனக்கு இப்பமே வேணும்!' பிடித்தாள் அடம்,பிரியா. என்ன வேணுமாம் அவளுக்கு? செடியிலிருந்து அப்பவே பறித்த பிஞ்சுவெண்டைக்காய்...நறுக்..நறுக் கென்று கடித்து சாப்பிட. அம்மா வேலைக்
காரனை தோட்டத்துக்கு அனுப்பி பறித்துவரச்சொன்னாள். சுமார் அரைக்கிலோ
வெண்டைக்காயும் நறுக்..நறுக்கென்று மென்று தின்றாள். கணக்கு நன்றாக
வருமாமே......யார் கண்டது?
அடம் பிரியா..ஆமாம்! பிரியாவுக்கு 'அடம் பிரியா' என்று அவள் அண்ணன்மார்
பிரியமாக வைத்த பெயர்தான் 'அடம் பிரியா!'
இரண்டு நாள் கழிந்திருக்கும். 'அம்மா.......ஆ..ஆ!' ஆரம்பிச்சுட்டாயா...ஆரம்பிச்சுட்டாயா...என்றவாறே அம்மா அருகில் வந்தாள்.
ஹோம்வொர்க் செய்கையிலேயே உள்ளே பல்பு எரிந்திருக்கிறது. 'எனக்கு
காட்பெரீஸ் சாக்லெட் வேணும்...இப்பமே!' கேட்ட நேரம் இரவு ஒன்பது மணி!
'கடையெல்லாம் பூட்டியிருப்பார்களே..பிரியா! காலையில் வாங்கிக்கொள்ளலாம். கண்ணுல்ல?' எட்டு வயது குந்தாணியை...ஆமாம்
அம்மாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் திட்டுவாள், இடுப்பில் தூக்கி
வைக்காத குறையாக கொஞ்சினாள். ' ஹுஹூம்..இப்பமே வேணும்...' அழவாரம்பித்தாள். 'அம்மா! அடத்துக்கு இடம் கொடுக்காதே!' அவள் அண்ணன்
அடுத்த அறையிலிருந்து கூவினான். நோ யூஸ்! பணத்தை கொடுத்து
வேலைக்காரனை ஏதாவது மெடிக்கல் ஸ்டோர் திறந்திருக்கும் அங்கே போய்
வாங்கிவரச்சொன்னாள். 'அம்மா...! நாலு ஃபைவ் ஸ்டார்!'....... ஹுக்கும்! இதுகொண்ணும் கொறச்சலில்லை.

பிரியா பள்ளியிறுதித்தேர்வு எழுதி முடித்தாள். ரிசல்ட் வந்தது.....கணக்கில்
நூற்றுக்கு நூறு! துள்ளிக்குதித்தாள். 'ரொம்பத்தான் குதிக்காதே! நீ மொசுக்குன
வெண்டைக்காய்க்கு இது கூட வாங்கலேனா எப்படி...?' இது அண்ணனோட
பின்னோட்டம். அம்மாவுக்கு சந்தோஷம்! 'உனக்கு என்னடா வேணும் செல்லம்!' அதானே! சும்மாவே ஆடும்...நீ வேப்பிலை வேற அடி!' அண்ணனின்
முணுமுணுப்பு. 'அம்மா! அம்மா! என் friend சிங்கப்பூரிலிருந்து ஒரு வாட்ச்
வாங்கியிருக்கிறாள். எனக்கும் அதுமாதிரி வேணும்.' நேரம் பார்த்து அடித்தாள்.
அவளிடம் இன்னொரு செட்டும் இருக்குதாம்.உனக்கு வேணுமா என்று கேட்டாள்.
சிங்கப்பூர் வாட்சா? ரொம்ப விலை இருக்குமே! 'அம்மா.......அதில் டிரெஸுக்கு
மாட்சாக ஸ்ட்ராப் கலர்கலராக இருக்கும் மாத்திமாத்தி போட்டுக்கலாம்.அம்மா..,ப்ளீ.........ஸ்!' கொஞ்சினாள்.
'சரி...சரி வாங்கிக்கோ.' 'என் செல்ல அம்மா! நாளைக்கே அவளிடம் சொல்லி
வாங்கிக்கிறேன்!' ' ஏன் இப்ப மட்டும்....இப்பமே!!! இல்லையோ? அண்ணன்
கலாய்த்தான்.
இப்படியே பிரியாவின் ஆசைகளெல்லாம் 'இப்பமே..இப்பமே..என்று
நிறைவேறிக்கொண்டிருந்தது.

ஆயிற்று! ஒரு நல்ல நாளில் பிரியாவுக்கும் ராமுவுக்கும் திருமணம் நடந்தேறியது. புதுக்குடித்தனம் போட்டாச்சு. ஒரு மாதம் கழிந்திருக்கும்.
ஒரு சண்டே மதியம் ,'ராம்! ஈவ்னிங் பீச்சுக்குப் போவோமா? ஆசையாயிருக்கு.'
சாரிம்மா! உனக்கு இன்னிக்கு சண்டே, ஆனா எனக்கு இன்னிக்கு ரெஸ்டே!
ரொம்ப டயர்டா இருக்கு இன்னொருநாள் போலாம்டா செல்லம்!'
இன்னொருநாள் புதுப்படத்துக்கு ரெண்டு டிக்கெட் ஓஸியில் கிடைத்தது.
காலையில் ராமிடம் அதைக்காட்டி ,'போலாங்க! சாங்காலாம் சீக்ரமா வாங்க!'
'ஓகே....'என்று டாட்டா காட்டிவிட்டு ஆபீஸ் போய்விட்டான்.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகி காத்திருந்தாள்.
மணி அஞ்சாச்சு...ஆறாச்சு...ஏழும் ஆச்சு. ஏழரை மணிக்கு வந்துசேர்ந்தான்.
இவள் அலங்கரித்து நிற்பதைப் பார்த்ததும்தான் சினிமா ப்ரோக்ராமே..ராமுக்கு
வந்தது. 'வேலை மும்முரத்தில் மறந்துட்டேண்டா! இன்னொரு லீவு நாளில்
போவோம்டா ப்ளீஸ்! சிரிடா!' வெறென்ன செய்வது இப்படி குழைபவனிடம்?
சிரித்தாள் சோகையாக. வாழ்கை என்பது 'இப்பமே' என்பதில் இல்லை...எப்பவும் சிரித்து சந்தோஷமாக இருப்பதில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட சிரிப்பு அது!!!!

அடம் பிரியா கொஞ்சம் திரும்பிப்பார்த்தாள்.....அவளது அடமும் 'இப்பமே' யும்
பறந்தே........போச்சு...எப்பமே!!!!!!!!!!!!!!!!!!

Labels:


Comments:
Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.
 
Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.
 
இப்பமே படிச்சு இப்பமே பின்னூட்டம் போட்டாச்சு. இனிமே அடம் பிடிக்க மாட்டீங்கதானே!! :))
 
அடப்பாவமே...சரிதான்..அம்மா வீட்டுலாவது அவளைத் தாங்குதாங்குன்னு தாங்கினாங்களே..
 
கெளம்பீட்டாங்கையா...
கெளம்பீட்டாங்க..இன்னொரு புரியாத
மொழி!!
rodrigo!!!உங்களுக்கு தமிழ் புரியுமெனில் தமிழிலேயே பின்னோட்டமிடலாமே? அல்லது ஆங்கிலத்தில். நானும் நேரடியாகப் படித்து சந்தோஷப் படுவேன்
அல்வா? எனினும் நன்றி!!gracias!!
 
இப்பமே படிச்சாச்சு..சரி!பின்னோட்டமும் போட்டாச்சு அதுவும் சரி! கொத்ஸ்! ஆஜர் மட்டும் கொடுத்தால் போதுமா? எப்படியிருந்த்து
என்று இப்பமே சொல்லோணும்.
 
ஆமாம்! முத்துலெட்சுமி!
கொஞ்சம் பாவம்தான். ஆனால் அதையே நினைத்து வாழ்கையை நரகமாக்கிக்கொள்ளாமல் சுயமாக சிந்தித்து சரிசெய்து கொண்டாளே!
அதற்காக பாராட்டலாம்!
 
appamey appamey sonnaanga periyavunga,ippamey ippamey solrathai vittaakkaa,eppamey eppamey santhoshanthanga.nananikku anony[4]
 
நன்றே செய்..இன்றே செய்..அதுவும்
இன்னே செய்! என்றும் அதே பெரியவங்கதான் சொல்லிக்கீறாங்கோ!
நானானிக்கு அனானி!!!!
 
Naanaani,
This time rodrigo portugese-la comment eluthi irukkaar. :)

Exact translation sariyaa varalai but you get the point from this auto-translated text:

"Hello, I found your blog from google tá well interesting I liked this post. When to give gives passed for mine blog, is on personalized t-shirts, shows step by step as to create a well personalized t-shirt way. Until more"

In addition to praising your site, pohira pokil avar site-ayum advertise panittu poi irukkaar. Click on the site link in the comment to see his site.... :)

Official-aa unga translator-aa maaridalaamnu iruken. enna solreenga?

-RL
 
indha perusugaley suththa mosanga ....oru vaatti onnu solrathu aduththa vaatti maaththi solrathu...ippadi nammazhai vaatti vaatti edukkraangaley...ethaik keykrathu ethai udrathu?sollumma nanani!anany's reply
 
நானானி, 'இப்பமே'ன்னு அடம்பிடிப்பவர்கள் திருமணத்திற்கு பிறகு 'டக்'கென்று மாறுவது கடினம்தான். அதுவும் அம்மா வீடு- கணவர் வீடு என்று ஒப்பீடு பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கை நரகம்தான். இருப்பதை வைத்து ப்ரியா திருப்தியடைந்தார்கள் போலிருக்கு அப்பமே ;-)
 
hai!! RL! chooo nice of u to tranlate rodrigo's comment.
and here is ur appointment order to work as my tranlater forever.
wht about pay..? pay..!peppayyyyy!!
anbu,anbu,anbuthaan!
 
ஒப்பீடு வரும்போதுதான் வாழ்கையில்
அபஸ்வரம் ஒலிக்கவாரம்பித்துவிடும்.
ஜெஸிலா! சரியாகச் சொன்னீர்கள்!
 
"இப்பமே இப்பமே"
என்று வளர்ந்த
இளசுகள் எல்லாம்
இல்லறம் இனிதாய் விளங்க
எப்படி எப்படியெல்லாம் தம்மை
மாற்றிக் கொள்கிறார்கள்
என்பதே ஒரு
இனிய கவிதைதான்..
இல்லையா?
-Ramalakshmi
 
என் சிறிய கதையை இனிய கவிதையாக்கிய ராமக்ஷ்மிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள், அல்லது
வாழ்த்து கலந்த நன்றிகள்!!!
 
என் சிறிய கதையை இனிய கவிதையாக்கிய ராமக்ஷ்மிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள், அல்லது
வாழ்த்து கலந்த நன்றிகள்!!!
 
பெரிசுக எல்லாந்தான் சொல்வாக
நமக்கு எப்பபோ எதெது சரியோ
அத்தை எடுத்துக்கோணும்!
இடம் பொருள் ஏவல்-ன்னு
கேட்டதில்லையா? அனானி(?)
 
நானானி,கும்குமம் பத்திப் பதிவு எங்கே.
நான் திருப்பதிப் பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தையும் காணோம்.
இந்தப் ப்ரியா பொண்ணு மாதிரி எத்தனை பெயர்கள் இருப்பார்களோ.

மாறினாளொ நல்லதாப் போச்சு.
இப்பமாவது பின்னூட்டம் வருதானு பார்க்கிறேன்.
 
நானானி,கும்குமம் பத்திப் பதிவு எங்கே.
நான் திருப்பதிப் பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தையும் காணோம்.
இந்தப் ப்ரியா பொண்ணு மாதிரி எத்தனை பெயர்கள் இருப்பார்களோ.

மாறினாளொ நல்லதாப் போச்சு.
இப்பமாவது பின்னூட்டம் வருதானு பார்க்கிறேன்.
 
வல்லி!!!!!!!!!!
குங்குமம்,இப்பமே,திருப்பதி அல்லாத்துக்கும் உங்கள் பின்னோட்டங்கள் காணுமே..காணுமே
என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
எங்கே தொலைத்தீர்கள்?
 
வல்லி!
scotlandyard-மாதிரி switzerlandyard
இருந்தால் அங்கு சொல்லி கண்டுபிடிக்கச்சொல்லுங்கள்! என்ன?
 
i felt like reading my own story... adam priya alavuku 100%adama ellanallum...50% antha mathiri than... a very good eye opener.. thanx mam...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]