Tuesday, June 26, 2007

 

எட்டுக்கு எட்டி எட்டினேன்...ஆஹா! அந்தப்பழம் இனித்தது!

வல்லியம்மா முதலாவதாக என்னை எட்டிட அழைத்தமைக்கு நன்றி!
ஆனால் எட்டாவதாக பதிகிறோமே என்று ஒரு குறுகுறுப்பு.


எட்டு போட்டு காட்டாமலேயே லைசென்ஸ் வாங்கியவள். யோசித்து யோசித்து எட்டிவிட்டேன் எட்டு. ஒவ்வொருவர் வாழ்கையிலும் மறக்கமுடியாத எத்தனையோ எட்டுகள் உண்டு. நல்லவைகளும் அல்லாதவைகளும் கலந்ததுதானே வாழ்கை!! தத்துவம்...?

ஒரு பெண்ணுக்கு தாயின் அருகாமை தேவையான 15-வது வயதில்


அவர்களை இழந்தது....அதற்காக அழக்கூடத்தெரியாமல் மிரளமிரள விழித்தது


மறக்க முடியாதது.

படிப்பில் சுமார்தான். ஆனால் பள்ளியிறுதித்தேர்வில் எதிர்பாராத க்ளைமாக்ஸ்!!! கணக்குப் பரீட்சை! கணக்குகள் போடப்போட விடைகள்


அல்வாத்துண்டுகள் மாதிரி (மண் வாசனை ஹி..ஹி..) சரியாக சரியாக வந்து விழுந்தன. அப்போதே தெரிந்து விட்டது...நூற்றுக்கு நூறு!

பள்ளியிலும் காலேஜிலும் எல்லா விழாக்களிலும் என்னோட வீணை


ப்ரோக்ராம்தான் முதலில் இருக்கும். அதோடு உல்லாசப்பயணங்களிலும்


காமிராவும் கையுமாக அலைவேன். காலேஜை விட்டு வெளிவரும்போது


ஜூனியர்ஸ் கொடுக்கும் பார்ட்டியில் சீனியர்ஸுக்கு பேர் வைத்து அழைத்து


சிறு பரிசு கொடுப்பார்கள். அதில் எனக்கு 'sound of music' என்று வைப்பதா?


இல்லை, 'college photographer', என்று வைப்பதா என்று குழம்பினார்கள்!!!

வீணையை தொடுவதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டுமென்


பார்கள். நான் கொஞ்சம் தடவுவதற்கும் பாக்கியம் செய்திருக்கிறேன்.


திருமணத்துக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து


எங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் நடந்த ஆராதனை விழாவில் நானும்


வாசிக்க வேண்டும் என்று அண்ணியின் ஆசை. கைவிட்டுப்போச்சே முடியுமா


சபையில் அல்லவா வாசிக்கவேண்டும் என்று தயக்கம். அங்கு வாசிப்பவர்களைப் போய் பார்..உன்னால் முடியும் என்றார்கள். பார்த்தேன்.


நம்பிக்கை வந்தது. நான்கு நாள் சாதகம். ஐந்தாவது நாள் தியாகப்ரம்மத்தை வணங்கி மேடையேறினேன். நான் வாசித்த,'சக்கனிராஜ..., நின்னுவினா..' இரண்டுக்கும் சபையில் எழுந்த கைத்தாளமும் இறுதியில் தட்னாங்க பாருங்க! மெய்சிலிர்த்துப்போனேன்.


தன்யளானேன்!

எங்கள் வாழ்கையோடு கலந்துவிட்ட ஒரு ஜீவனில்லாத ஜீவன். எங்கள்


குடும்பத்தில் நடக்கும் நல்லது அல்லது எல்லாவற்றிலும் அதற்கு பங்கு உண்டு. என் தந்தை அதில் கம்பீரமாக ஏறி அமர்ந்து போவதே ஓர் அழகு!


புரியவில்லையா? எங்கள் எல்லோரது அன்புக்குப் பாத்திரமான தந்தையின்


கார் தான் அது 1947 மாடல் செவர்லெட். பச்சை கலரில் சிங்குச்சா...என்று


கப்பல் போல் மிதக்கும். 79 வயதில் தந்தை காலமாகும் வரை பழுதில்லாமல்


உழைத்து இறுதியில் தந்தையில் உடலை மருத்துவமனையிலிருந்து வீடு


கொண்டு வந்து சேர்த்து தானும் தன் ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொண்டது. இது பற்றி தனி பதிவே போட இருக்கிறேன். எங்கள்


குடும்பத்தின் மறக்கமுடியாத ஓர் உறுப்பினர்.

இரண்டாவதாகப் பிறந்த மகன் அவனுக்கு இரண்டரை வயதாகும்


போது பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் வளையல் வாங்கிக்கொண்டிருக்கும்


போது நழுவி தளர் நடை போட்டு சிறிது தூரம் சிறிது நேரம் காணாமல்


போய்விட்டான். பதறி ஆளுக்கொரு திசையில் தேடினோம். நான் சென்ற


திசையில் எதிரில் ஒரு நல்ல உள்ளத்தின் கைகளில் மகன்! பதறி வரும்


என்னைப் பார்த்து,'இவன் உங்கள் குழந்தையா?' என்று கேட்க, நான் பதில்


சொல்லவேண்டிய அவசியமின்றி என்னிடம் தாவி வந்தான் குழந்தை.


உடலும் மனமும் அதிர வாரியணைத்த அந்த கணம்!!! அம்மம்மா! மற்க்கமுடியுமா? அந்த நல்லவருக்கு நன்றி!

என் மகள் முதன்முறையாக அமெரிக்கா சென்ற போது அவளை


வழியனுப்பிவிட்டுத் திரும்பும்போது....சும்மா விளையாட்டாக நாமும் இது


போல் ஏர்போர்டில் ட்ராலியை தள்ளிக்கொண்டு போகமுடியுமா? என்று


நினைத்துக்கொண்டே வீடுபோய் சேர்ந்தேன். நம்பமாட்டீர்கள்!! சரியாக


இரண்டு மாதம் கழித்து ஏர்போர்ட்டில் ட்ராலியை தள்ளிக்கொண்டு கலிபோர்னியாவிலிருக்கும் மகள் வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். காரணம் என்


மகன். எங்களை வற்புறுத்தி அனுப்பிவைத்தான். இல்லாவிட்டால் நாங்கள் எங்கே கிளம்ப..? அது மட்டுமா? அக்காவுக்கு போன் செய்து,'அம்மா வரா..


ஆயா வேலைகல்ல! நல்ல ரெஸ்ட் கொடுத்து ஊரெல்லாம் சுற்றிக்காண்பி!'


என்று உத்தரவு வேற! ரெண்டாவது முறை ஆயா வேலைக்கும் போனேன்!


இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்ற பாக்கியசாலிதானே..?

நான் ஈன்ற போது பெரிதுவந்தேன். அதையும் விட பெரீ......தும் உவந்தேன்


மகள் ஈன்றபோது. ஒரு ஜனனத்தின் தரிசனம் கண்டேன்!!


பேரனைக் கைகளில் வாங்கிய போது இமயத்தின் உச்சியிலிருந்தேன்!!!

எட்டு போட்டுவிட்டேன். கொஞ்சம் பெரிய எட்டோ? அதாவது காபிடல்


எட்டோ? எதுவாகினும் சரி! இனி நான் அழைக்கவேண்டியவர்கள் யயர் யார்?

எனக்கு எத்தனை பேரைத்தெரியும்? தெரிந்த சிலபேர் எட்டிவிட்டடர்கள்.

ஓஓஓகே! நான் பின்னோட்டமிட்டவர்களும் எனக்கு இட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில்......1) அரவிந்தன்

2) ஜெஸிலா

3) மங்கை

4) டுபுக்கு

5) பாலபாரதி

6) பொன்ஸ்

7) குட்டிபிசாசு

8) கடோத்கஜன்


உங்கள் எட்டு பேரையும் அன்போடு எட்டிட குங்குமம் நீட்டி அழைக்கிறேன்.
ஏற்கனவே பதிந்திருந்தால்....க்ரெடிட் கார்ட் பேமெண்ட் ரிமைண்ட்ர் போல்
ஜஸ்ட் இக்னோர் இட்!


விளையாட்டின் விதிகள்:

1) ஆடுபவர் தன்னைப்பற்றிய எட்டு தகவல்களை எழுதவேண்டும்.
அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2) தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
அவர்களுக்கு இந்த அழைப்பைபற்றி அறியத் தர வேண்டும்.

3) தொடர்பவர்கள் இதேபோல் எட்டு தகவல்களையும் விதிகளையும் எழுதி
வேறு எட்டு பேரை அழைக்கவேண்டும்.

நன்றி!!!!Labels:


Comments:
@ நனானி அம்மா(அக்கானு கூப்பிடுரத விட அம்மானு கூப்பிடுரேன்),

தங்கள் மனத்தை எங்களோட பகிர்ந்ததற்கு நன்றி!! என்னை எட்டு போட அழைத்ததற்கு மேலும் நன்றி! நான் ஏற்கனவே எட்டு போட்டுட்டேன். வாழ்த்துக்கள்!!
 
நன்றி, நானானி.

எட்டு அன்பவமும் எட்டு விதம்.
மகன்,மகள் எல்லோரோடும் நன்றாக மகிழ்ந்து வாழுங்கள்.
 
இனிக்கும் 'பழம்'தான்.:-))))

வாழ்த்து(க்)கள்.
 
அழைப்பை அன்போடு மறுத்ததுக்கு
நன்றி! மகனே!
 
ஆசிக்கு நன்றி! வல்லியம்மா!
 
எனக்கு இனித்த பழம் உங்களுக்கும்
இனித்ததா..? ஊதி ஊதி அல்லவா
தந்திருக்கிறேன்!!
 
உங்க பதிவு படிக்கும் போது எப்போது வீணை இசை கேட்கும் ஏன்னு இப்போதுதான் புரிகிறது ;-)

அன்று மகனை தொலைக்காமல் இருந்ததால்தான் இன்று காலிபோர்னியா ;-)

அழைப்புக்கு நன்றி இன்றுதான் எட்டுப் போட்டேன் அது உங்களுக்காகவும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
 
ஆஹா யெக்கா..நீங்களும் கூப்பிட்டுருக்கீங்களா .இப்பத் தான் சமீபத்துல இந்த எட்டுல சாதனைன்னு போட்டுக்கிற மாதிரி ஒன்னுமில்லைன்னு போட்டேன் - http://dubukku.blogspot.com/2007/06/blog-post_22.html

மத்த படி நம்ம பதிவு எல்லாமே என்னை பத்தி தான்....

தப்பா எடுத்துக்காதீங்கக்கா...(எடுத்துக்க மாட்டீங்கன்னு நம்புறேன்...ஏதோ சின்னப் பையன் பார்த்து செய்யுங்க)
 
நீங்கள் சொன்னது மிகவும் சரி ஜெஸிலா! எனக்கும் சேர்த்து எட்டு
போட்டதற்கு சந்தோஷம்!
 
தப்பாவே எடுத்துக்கலை, டுபுக்கு!
சீக்கிரமே எட்டுலே என்ன பதினாறிலே
சாதனைகள் போட வாழ்த்துக்கள்!!!
 
நானானி உங்க எழுத்து நடை படிக்க படிக்க ரொம்ப சுவாரஸ்யமா கலகலகலனு இருக்கு!! நகைச்சுவை,நெகிழ்ச்சி என்று எல்லாமே கலந்து இருக்கு..
 
நன்றி! சினேகிதனே!!
 
அட என்னாங்கோ..நம்மளயும் இத்துல இழுத்து வுட்டீங்கோ? நமக்கு சாப்பாடு ரொம்ப ஜாஸ்தியாகிப் போச்சு, அதான் 'என்ன பண்ணப்போறேன்?'ரே கணக்கோட பதிவுல நிக்குறேன்..

என்னமோ, பெரியவங்க ஆசைப்பட்டு கூப்பிட்டிருக்கீங்க..எதுனாச்சும் எழுதிடேறேனுங்கோ!

நீங்க சகலகலாவல்லிதான் போங்கோ..கேமிராவும் புடிக்கிறீங்கோ..வீணையும் வாசிக்கிறீங்கோ..சாப்பாடும் போட்டுத்தாக்குறீங்கோ..சூப்பருன்கோ!
 
வருக! கடோத்கஜன்!
ரொம்ப நாளா காணோம்?
சாப்பாடு ஜாஸ்தியானதால் தான்,
உங்களுக்காகவே பதிந்த 'அவசர சமையல்' பார்க்கவில்லையா?
உங்களுக்கு எட்டும்படிதான் இருக்கு.
எட்டிட வந்ததுக்கு சந்தோஷம்!
 
அருமையான எட்டு - நல்வாழ்த்துகள்

மகனும் மகளும் பேரன் பேத்திகளோடு நன்றாக மகிழ்வுடன் வாழ நல்வாழ்த்துகள்
 
மிக்க நன்றி சீனா!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]