Wednesday, June 20, 2007

 

வா வாத்யாரே வூட்டாண்டே- நீ வராவிட்டால் நான் விடமாட்டேன்

'ஏம்மா! எம்மா நேரமா கூவிக்கினேகீரேன். தொடப்பம் எத்து கொடும்மா..நா பெருக்கிபோட்டு அடுத்த வூடு போகத்தாவல...?'
முனியம்மா எதற்கு இப்படி தாவுகிறாள்...கத்துகிறாள் என்று எண்ணியபடியே,'என்ன முனியம்மா! நீ என்ன
ரயிலா குயிலா கூவுவதற்கு? தொடப்பமா? அப்படியென்றால்?'என்று கேட்டாள் பட்டம்மாள்.
சிங்காரச் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கும் டீச்சர்!
'யம்மா உனோட படா பேஜாராப்போச்சு.....எத்தினி தபா யே பேரு மினிம்மா..மினிம்மான்னு சொல்லிக்கீறன்..வூடு கூட்டி பெருக்கிறதில அத்தான்.'
'ஓ! வாரியலா..?' என்றபடியே பெருக்குமாறை எடுத்துக்கொடுத்தாள்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த இந்த ஒரு வாரமாக முனியம்மாவோடு ஒரே மொழிப்போர்தான். நெல்லைத்தமிழுக்கும் சென்னைத்தமிழுக்கும்
கடும் போட்டி.
தமிழாசிரியரான பட்டம்மாள் சுத்தத் தமிழிலேயே பேசவேண்டும். என்ற கொள்கை உடையவள்.முக்கியமாக வகுப்பில் தன் மாணவர்கள் நல்லதமிழில்தான் பேச வேண்டும்
அப்போதுதான் தமிழறிவு வளரும் என்பதில் பிடிவாதமாக இருப்பவள்.அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறாள். ஆனால் இந்த முனியம்மாவிடம்தான் படாத பாடு படுகிறாள்
பட்டம்மாள்! இவள் பேசும் செந்தமிழும் சரி நெல்லைத்தமிழும் சரி அவளுக்குப்புரியவில்லை. அவள் பேசும் சிங்காரச் சென்னைத் தமிலும் இவளுக்குப் பிரிலை.
ஒரு நாள்...போர்களத்தின்..உச்சக்கட்டம்..குளியலறை வழுக்குகிறது ப்ளிச்சிங் பெளடர் போட்டு கழுவு என்று தெரியாமல் சொல்லிவிட்டாள். அவ்வளவு தான்...
'இன்னாம்மா பாத்ரூம்பு இம்மா கலீஜா போட்டு வெச்சிருகே.. அப்பப்போ கழுவத்தாவல?
கலீஜா? அப்படி எதைப் போட்டு வைத்தோம்?...குளியலறையை எட்டிப் பார்த்தாள்.
முனியம்மாவைப் பார்த்து 'கலீஜ் எங்கே? என்றாள் அப்பாவியாக! கலீஜ் என்றால் ஒரே அழுக்கும் குப்பையுமாக என்று அர்த்தம் என்று முனியம்மாவின் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டாள்.
'இத்தெல்லாம் என்னாலே ஆவறதில்ல...நா போய் ஏ வூட்டுக்காரர இட்டாரேன்,
அவரு க்ரீட்டா செய்வார்.' என்றவாறு வூட்டுக்காரர இட்டாரப் போய்விட்டாள்.
'இட்டார..?' புரியவில்லை பட்டம்மாளுக்கு. 'இட்டார் பெரியோர்..இடாதார்...'என்பதுபோல்
முனியம்மாவும் ஏதாவது வெண்பா இயற்றுகிறாளா....? தமிழாசிரியை அல்லவா! நினைப்பு அப்படி போச்சு. பக்கத்துவீட்டு மீனாவிடம் அர்த்தம்
கேட்டாள். 'இட்டார என்றால்...கூட்டிவர என்று அர்த்தம்! ஓ! அவள் புருஷனை கூட்டிவரப்
போய்யிருக்கிறாளா?
வந்த முனியம்மாவின் கணவன் மாரி வெகு நேர்த்தியாக வேலையை முடித்தான்.
முனியம்மா பட்டம்மாவிடம் வந்து ,'எம்மா! அதுங்கிட்ட ஒரு ஐம்பது ரூபா கொடு. ஒரு
குவார்ட்டர் வாங்கி ஊத்திக்கினு வூட்டாண்ட போய் கம்முனு படுத்துக்கும். ஐம்பது ரூபா கொடு
என்று மட்டும் சொல்லியிருந்தால் கொடுத்திருப்பாள். ஆனால் மது அருந்த என்றதால்
கொடுக்க மறுத்து விட்டாள். மாரி..காளியானான்,'டாய்! மினிம்மா! மருவாதையா செஞ்ச
வேலைக்கு கூலியை வாங்கி குடு! இல்லேனா தாராந்துபூடுவே..ஆக்காங்!என்று மில்லி
அடிக்காமலே துள்ளி ஆடவாரம்பித்தான். பயந்து போன பட்டம்மாள் ஐம்பது ரூபாயை
முனியம்மாவிடம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்து மூச்சு வாங்கினாள்
இதே தலைவலியோடு பள்ளிக்குச் சென்றாள். வகுப்பில் நுழைந்ததும் வழக்கம்
போல் மாண்வர்கள்,' காலை வணக்கம்! அம்மா! நேற்று நீங்கள் சொன்ன கட்டுரையை
எழுதிவிட்டோம். படித்துவிட்டு மதிப்பெண்கள் போடுங்கள்!'என்றார்கள்.
'ஆமா! நானே ஒரே கலீஜா கீறேன். இத்தெல்லாம் ஆவறதில்லை. எங்கீட்டே ஏன்
இட்டாரீங்க? மருவாதையா அல்லாரும் ஒரு குவார்ட்டர் வாங்கி ஊத்திக்கினு வூட்டாண்ட
போய் கம்முனு படுங்க! இல்லினா தாராந்துபூடுவீங்க!' என்றாள் தன்னை மறந்து. அன்று
அவள் கற்றுக்கொண்ட பாடங்களை மாணவர்களிடம் ஒப்பித்தாள்.
மாணவர்கள் இதற்கு என்ன மதிப்பெண்கள் போடுவதென்று திகைத்து நின்றார்கள்!!!

Labels:


Comments:
ஒரே மழக்கமா கீது. இன்னா ஒரியாட்டம்மா இது..-)))
 
இத்தெல்லாம் தம்மா துண்டு மேட்டரு..பிரியிதா?
 
"சென்னை செந்தமிழ் அறிந்தேன் உன்னாலே; சென்னை செந்தமிழ் 'அருமை' அறிந்தேன் உன்னாலே...
நெல்லை நாட்டு நங்கையே நன்றீ...
சென்னை செந்தமிழ் அறிந்தேன் உன்னாலே!"
-ராமலக்ஷ்மி
 
சென்னைத்தமிழுக்கு ஒரு கோனார்
நோட்ஸே போட்டுடலாம்...உங்களுக்காக..
ராமக்ஷ்மி! உபயம்-தமிழ் சினிமா.
 
தலப்ப தப்பயில்ல எய்தி கீரீங்க!!

வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்!!னு எய்தனும்!! :)))

@நளாயினி அக்கா,

எங்க ஊரு மொழி உங்களுக்கு கிண்டலாக இருக்குதா? :)))) உங்க தலைப்பு பாட்டுக்கு ஒரு புகழ் உண்டு, ஒருமுறை வானொலிபேட்டியில் பாலமுரளிகிருஷ்ணா இந்த பாடலை மிக பிடித்த பாடலாகக் கூறியிருந்தார். பாடியவர் நம்ம ஆச்சியே தான்.
 
நம்ப கிட்டியே ராங் காட்ரியே! இத்தானே வோணாண்றது...
கரீடாதா எய்திகீறேன்.
மொதோ பாதி ஏ தமில்..அப்பால மீதி
பாதி நல்ல தமிழ். ரெண்டுக்கும் வுடுர
சண்டைக்காகசொல்லோ அந்த தலீப்பு.
சர்தானா நைனா?
ஆச்சி அருமையாகப் பாடியிருப்பார்..
நைனா....என்று ஓர் இழுப்பு தம் கட்டி இழுப்பாரே..!
 
மொதோ பாதி ஏ தமில்..அப்பால மீதி
பாதி நல்ல தமிழ். ரெண்டுக்கும் வுடுர
சண்டைக்காகசொல்லோ அந்த தலீப்பு.//

சர்தான்ம்மா!! :))
 
ஆங்...அது!
குட்டி பிசாசே!
 
நான் நளாயினி இல்லை.
நா..னா..னி!
 
சும்மா சென்னை தமில உட்டு கலாச்சிட்டியேக்கா. ஜரூரா தினத்துக்கும் எழுதாட்டா பேஜாரா பூய்டுவ அக்காங்.
 
rikshaakkaranga allaam unnaandey pichai edukkanumma summaa poondhu vilaiyaaditeymmaa kannu.
anonymous-3
 
ஜெசிலா!
தெனத்துக்கும் எழுதரதுன்னுன்னா....
அம்மாடி! அப்ப மத்த வேலை ஆரு
பாக்கிறதாம்? பேஜாரல்லாம் வோணாம்.
 
சர்தான் வாத்தியாரே!
 
அனானி-3
பிச்சை போட ஒரு ரிக் ஷாகாரரும்
கண்ணில் படவில்லையே..?
அவர்கள் எல்லோரும் நல்ல தமிழ்
கற்றுக்கொண்டு மாறிவிட்டார்கள்.
அவ்ர்கள் தமிழை நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்!!!!ஹி..ஹி..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]