Friday, May 4, 2007

 

,பெட்டகத்தைதிறந்து விடையை அள்ளித்தருக

புத்தம் புதிய படங்களிலிருந்து நிறைய பதிவர்கள் க்விஸ்கிறார்கள். ஆனால் நமக்கு தோது
'தங்கமான பழசு' தான்.

இங்கே சில புதிர்கள்...விடைகள் உங்கள் கையில்.

வாழ்கை படத்தில் வைஜயந்திமாலா பாடிய பாடல்களுக்கு அவரே பின்னணி பாடியுள்ளதாக
ரெக்கார்டுகளில் உள்ளது. ஆனால் உண்மையில் பாடியது வேறோருவர். அவர் யார்?

மாமியார் மெச்சிய மருமகள் படத்தில்'இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை
ஆச்சே...'என்ற இந்த பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? பாடியவர் யார்?

ஒருவர் இசையமைப்பில் மற்றொரு இசையமைப்பாளர் பாடுவது இப்போது சர்வசாதாரணம்.
ஆனால் அக்காலத்தில் மிகப் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் மற்றொரு மிகப்
பிரபலமான இசையமைப்பாளர் பாடியுள்ளார். அதுவும் கதாநாயகனுக்காக அல்ல.
ஒரு குதிரைக்கு!!!! குதிரை பாடுவதுபோல் அமைந்த அந்த பாடலுக்கு பின்னணிப்
பாடியுள்ளார். அந்த பிரபல இசையமைப்பாளர்கள் யார் யார்? பாடலின் பல்லவி என்ன?

ஒளவையார் படத்தில்,'கன்னிப்பருவம் போதும்போதும்' என்று விநாயகரிடம் முதுமையை
வேண்டிய அந்த குமாரி ஒளவை...யார் (க்ளு கொடுத்துவிடேனோ?)
செய்யுளின் ஈற்றடியை முடிக்கமுடியாமல் திணறிய புலவரின் வெண்பாவை...
'நின்று தளரா வளர்தெங்கு தாளுண்டநீரைத்-
தலையாலே தான் தருதலால்!' என்று நிறைவு செய்த அந்த பால ஒளவை..யார்?

விடைகள்...நீங்களேதான் சொல்லுங்களேன்...!முடியவில்லை என்றால் பார்க்கலாம்.
நிறைய தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள்.

இத்தோடு விடமாட்டேன்! இன்னும் வரும்.

Labels:


Comments:
குமாரி ஔவை குசல குமாரி என நினைக்கிறேன்.
பால ஔவை குமாரி சச்சு என்பது நிச்சயம.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
ஔவையார் திரைப்படம் குறித்த பதிவு ஒன்றினைப் பின்வரும் சுட்டியில் படித்தேன் :-)

http://www.mayyam.com/hub/viewtopic.php?start=120&t=1560

மற்றபடி கதாநாயகனே இல்லாத திரைப்படங்களில் அதுவும் ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
3 குசலகுமாரி ?
 
வருக! ராகவன்!
மிகச் சரியான விடை.
சரி...மீதி ரெண்டும்..?
 
வாங்க..வாங்க..கீதா!
கதாநாயகன் இல்லாத படமட்டுமல்ல.
அதன் கதாநாயகிதான் தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக
ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகவாங்கியவர் என்ற பெருமைக்குரியவர்!!!
 
கீதா!
சரியான விடை.
மற்றதையும் முயற்சியுங்களேன்.
 
akkau super pinnitiye...niraiya ezhuthu padikka naanga ready
 
kootaanjoru kungumam varuttha kozhi thiruvattaathinnu ellaaththaiyum thotta neenga enga manasaiyum thottutteenga
 
உங்கள் புது பதிவு எதுவும் காணுமே என்று பார்க்கையில் பழசை கொஞ்சம் பார்த்தேன். உடனே பின்னூட்டமிடாத இந்த கேள்விகளுக்கு இன்று பதில் எழுத நினைத்தேன்.
1.வாழ்க்கை படத்தில் வைஜயந்திக்கு பாடல் பின்னணி எம்.எஸ்.ராஜேஸ்வரி. நேற்று டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்கள். பாபநாசம் சிவன், தான் எழுதிய "பாரத நாட்டுக்கிணை பாரத நாடே" பாட்டை எம்.எல்.வசந்தகுமாரி பாடினால் நல்லா இருக்கும் என்றாராம். ஏ.வி.எம் அவர்கள் சிவனிடம், நாங்கள் இந்த பாட்டை ரிகார்டு செய்து வைத்திருக்கிறோம், கேட்டுப் பாருங்கள் என்றாராம். சிவனின் பாராட்டு பெற்ற ராஜேஸ்வரிக்கு அப்போது 14 வயதாம்.
2.அது சோகப் பாட்டாக இருப்பதால் முகாரியோ?
3."எஜமான் பெற்ற செல்வமே, என் சின்ன எஜமானே,
பசும் பொன்னே என் கண்ணே,
அழாதே அழாதே.."
அல்லி பெற்ற பிள்ளை -படம். கே.வி.மகாதேவன் இசையில் ஜி.ராமநாதன் பாடியது.
4. குசல குமாரி, பேபி சச்சு
பதில்கள் சரியா?
 
சகாதேவன்,
அழுகைக்கு முகாரி போல் சோகத்துக்கு ‘சுபந்துவராளி’
சோகத்துக்கு சுபமாம்! எப்படி இருக்கு?
 
How Are Drug Absorbed
kamagra kaufen
Jedoch konnen Sie auch junger sein und Probleme haben.
[url=http://www.galleriadipadova.com/]kamagra bestellen[/url]
Trotzdem sollten Sie sich an die von Ihrem Arzt empfohlene Dosierung halten und bei Nebenwirkungen oder anderen Problemen in Rucksprache bleiben.
http://www.galleriadipadova.com/ - kamagra online kaufen
 
மிக்க நன்றி...அனானி!
பழைய பதிவுகளைத் தேடி படித்ததுக்கு. ஆனால் உங்க பின்னூட்டத்தை புரிந்து கொள்ள நான் எந்தப் பெட்டகத்தைத் திறக்க?
 
Hi, I've enjoyed reading this post and I'm gonna read some more! kamagra oral
 
Hi, Neat post. Тheгe is a problem togetheг wіth yοur wеb sіte іn internet exρlorer, cοuld check this?
ΙE ѕtill is the marketρlаce lеaԁеr аnd a good сomponent of
othеr folks wіll leavе оut your wonderful writing because оf
thiѕ problеm.
Feel free to visit my page - mdfinstruments.De
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]