Friday, April 20, 2007

 

என் சமையலறையில்...நான் யார்?

உப்பா...சர்க்கரையா......கடுகா...உளுத்தம்பருப்பா...இல்லை எல்லாமேதானா..?
திருமணத்துக்குமுன் சமையலறையே எட்டிப்பார்க்காத நான் அண்ணி
உதவியோடு play school போவது போல் basic language (உம். சாம்பார், வத்தல்குழம்பு கூட்டு, பொரியல்) மட்டும் கற்றுக்கொண்டு களம் புகுந்தேன்..
புகுந்தவீட்டுக்குள்ளும்தான்.
வெந்தயத்துக்கும் சீரகத்துக்கும் வித்தியாசம் தெரியாது. செய்முறைகள்
எழுதி வைக்கப்பிடிக்காது. கண் பார்ப்பதை கை செய்யவேண்டும். ஆகவே
சின்னச்சின்ன பாகெட்டுகளில் தனியா, க.பருப்பு, உ.பருப்பு, சீரகம், காய்ந்த
மிளகாய் என்று mini-proportion-ல் போட்டு ஸ்ட்ராப்பில் செய்து 'சாம்பார்'
என்று எழுது வைத்துக்கொள்வேன். இதே போல் வத்தல்குழம்பு, ரசம்
முதலியவற்றுக்கும் பாக்கெட்டுகள் தயார் செய்து கொண்டேன். தேவைப்படும்
போது தேவையான பாக்கெட்டைப்பார்த்து தெரிந்து கொள்ளலாமில்லையா?
எப்படி..?ஐடியா..?

தனிக்குடித்தனம் வந்தாச்சு. சமையலில் அறை குறை அறிவோடு தண்ணீரில் தள்ளிவிட்டார்கள்!!! கையை காலை உதைத்து நீந்தி கரையேறியது சுவாரசியமான நிஜம்!

முதல் நாள் சாம்பார், கூட்டு, பொரியல் என்று அட்டகாசமாக சமைத்து
ரங்கமணிக்காக காத்திருந்தேன். வந்தார்...உண்டார்...சென்றார். ஒரு பின்னோட்டமுமில்லை. நான் சாப்பிட்டபோது சாம்பார் ஒரே.....புளிப்பு!
ஏன் சொல்லவில்லை என்றதற்கு 'நீயே இப்போதுதான் கற்றுக்கொள்கிறாய்
எல்லாம் போகப்போக சரியாகிவிடும்.' என்றார். என்ன ஒரு பொறுமை!
போனால் சரி.

அடுத்தநாள் புது குக்கரைப்பிரித்து அதிலுள்ள செய்முறைகளைப் படித்து
புது சாதம் செய்ய-first opening- செய்தேன். அளவாக த்ண்ணீர் ஊற்றி, அரிசி களைந்து பாத்திரத்திலும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட்டையும் போட்டேன். மூன்று விசிலுக்குப்பிறகு அடுப்பையும் அணைத்தேன். வெந்த சாதத்தை உடனே எடுக்க அவசரம்! மூடியை என் பலம் முழு...க்கப்பிரயோகித்துத் திறந்தேன்!

டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! பாம்ப்ளாஸ்ட்..!! மூடி ஒரு பக்கம் தெறித்து விழுந்தது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்களைத்தான் பார்த்திருப்பீர்கள்.
வானம் முழுதும் நட்சத்திரங்களாகப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன்
அன்று!! அடுப்படி சிம்னியை அண்ணாந்து பார்த்தேன்...கரி படிந்த சிம்னி முழுதும் சோற்றுப்பருக்கைகள் அப்பியிருந்தன!! மீதி நட்சத்திரங்கள் தரையெங்கும் சிதறியிருந்தன. அன்றும் ரங்கமணி மெளன்மாக வெளியேறினார் பாவம்.

இப்படியாகத்தானே......முட்டி மோதி இப்போது ஓரளவு 'தில்லாலங்கடி'
ஆகியிருக்கிறேன்.

சுத்த சைவப்பிள்ளையாகிய.....அதுவும் திருநெல்வேலி சைவப்பிள்ளையாகிய நான் எப்படி அசைவப்பிள்ளையாகினேன்? எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்? ரங்கமணி தாராளமன சிக்கனப்.... சாரி
சிக்கன் பிரியர்(கல்லூரி ஹாஸ்டல் வாசம் காரணம்). இது தெரிந்த பக்கத்து
வீட்டு சகோதரி சிக்கன் செய்யும் போதெல்லாம் இங்கேயும் வரும். ரங்கமணிக்காக. அவரே வாங்கி...அவரே சாப்பிட்டு....அவரே பாத்திரத்தையும்
கழுவி வைத்துவிடுவார்! அந்நாளில் நான் அவ்வளவு மடி!...ஹி..ஹி!

பின்னாளில் இரண்டாவது மகன் பிறந்து அவனுக்கு நாலைந்து வயதாகும்
போது கீழ்வீட்டுத் தோழி அவனை தூக்கி வைத்துக்கொண்டு சிக்கனை ஊட்டி
விட...என்னவென்று தெரியாமலே குழந்தை விரும்பி சாப்பிட.. அவனுக்காகவே அசைவக் களத்திலும் புகுந்து புறப்பட்டேன். முதலில் வேலைக்காரி வாங்கி வந்து அவளே சுத்தம் செய்து தர...நான் கை படாமல்
சமைக்கத் தெரிந்துகொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலும்
தில்லாலங்கடி ஆனது புரட்சிகரமான நிஜம்! ஆம்! எங்கள் குடும்பத்தில்
நான் ஒருவள் தான் அசைவம் சமைப்பவள். தில்லாலங்கடி என்றால்
என் பொண்ணு பாஷையில் expert- என்று அர்த்தம்!

என் அக்கா, தங்கை, அண்ணன், நாத்தனார்..பிள்ளைகள் எல்லோரும் சிக்கன்
விரும்பிகள். chicken get-to-gether ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்தேன்.
மொத்தம் பன்னிரெண்டு பேர்.

பெரிய்...ய குண்டான் நிறைய சிக்கன்குழம்பு(கிரேவி), புலாவ், தயிர்சாதம், சிப்ஸ்! சிம்பிள்-கிராண்ட் மெனு! வந்த பிள்ளைகள் முகத்தில்தான் என்ன ஒரு
பிரகாசம்!..சந்தோஷம்..! குண்டான் காலி! தயிர்சாதம் சீந்துவாரில்லை.

'சித்தி! பெரியம்மா! அத்தை!' என்று பலவாறு அழைத்து ,'ஹோட்டலில் நாங்கள் கிள்ளி கிள்ளித்தான் வாங்கி சாப்பிடுவோம். இங்கு அள்ளி அள்ளிப்
போட்டு சாப்பிட்டோம்!' என்ற போது மனம் நிறைந்தது!! இதைவிட வேறென்ன
வேண்டும்?

அடிக்கடி இது போன்ற விருந்துகள் நடக்கும். முக்கியமாக என் மகன் பிறந்த
நாளன்று கண்டிப்பாக இருக்கும். பிள்ளைகளும் ஓடோடி வருவார்கள்.
இன்று...காக்கை கூட்டில் கல்லெறிந்தது போல்.... எல்லோரும் வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில்!!! விருந்துகளும் குறைந்துவிட்டது.

இவ்வளவு அளந்துவிட்டு recipes ஏதும் தராவிட்டால் என்னை கொத்துபரோட்டா போட்டுவிடமாட்டீர்களா? பொறுமை! அடுத்த பதிவில்
சைவம் ஒன்று அசைவம் ஒன்று ஓகேவா?

Labels:


Comments:
//உப்பா...சர்க்கரையா......கடுகா...உளுத்தம்பருப்பா...//

ஓ! பாட்டு பாடுறீங்களா? :-)
 
//ஏன் சொல்லவில்லை என்றதற்கு 'நீயே இப்போதுதான் கற்றுக்கொள்கிறாய்
எல்லாம் போகப்போக சரியாகிவிடும்.' //

உங்க ரங்கமணி தங்கம்ங்க.. தங்கம்.. :-)
 
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், கடைசியில் சமையலில் டாக்டரேட் பட்டம் வாங்கிட்டதை பார்த்ததால் பெருமைய இருக்கு இந்த தங்கச்சிக்கு! :-)

வாழ்த்துக்கள்!
 
இந்த தலைப்புதானே பொருத்தம்!
த்ங்கமணி படித்தால்...
பட்டமெல்லாம் எனக்கு நானே கொடுத்துக்கொண்டது.
வரிசையாக கமெண்ட்கள் கொடுத்துப்
பூமாரி பொழிந்து விட்டாய்! நன்றி!
தங்கையே!
 
நானானி,
கலக்கப் போறீங்களா.

எல்லாரும் அவங்க அவங்க சமையலறை அனுபவங்கள்
வினோதம்தான்.
ஆனால் சுவாரஸ்யம்.
அடுத்த பதிவு எப்போ.
 
சிக்கன் விருந்தா?

அடுத்தமுறை நம்மையும் இன்வைட்டிடுங்க ப்ளீஸ்

:))))))))))
 
Ada..receipe kudungo... sappittu, comment solrenungo..
 
Good Post...recipe ku naangalum waiting..
 
சமயலறையைப் பார்த்துப் பயப்படக்கூடாது. இப்போ நானும் என் பையனுக்காக நான்வெஜ் சமைக்க முற்படலாம் என இருக்கிறேன். உங்க குறிப்புகள் எல்லாம் ரொம்ப உபயோகமாக இருக்கும். :)
 
அட..நீங்களும் ரெசிப்பி கொடுக்கிறீயளா? கொடுங்க..கொடுங்க..சீக்கிரம் போடுங்க..
 
என் சமையலறையை எட்டிப்பார்த்ததற்கு நன்றி வல்லி!
விஸ்கான்சின் முழுதும் சுற்றி விட்டீர்களா?
 
கட்டாயம்! சர்வேசன்! நீங்கள் இல்லாமலா...?
 
அனானி!
ரெசிப்பியை நான் தருகிறேன். ஆனால்
அதை சாப்பிடமுடியாது. நீங்களே செய்து பார்த்துத்தான் சாப்பிடவேண்டும். மறக்காமல் கமெண்ட் சொல்லவும்
 
தூயா! வருகைக்கு வணக்கம்!
பொறுங்கள்! சீக்கிரம் பதிகிறேன்.
 
அப்படித்தான்! கொத்ஸ்!பயப்படவே கூடாது. கையில் கிடைப்பதையெல்லாம் அள்ளிப்போட்டு
வறுத்தோ பொறித்தோ அல்லது தாளித்தோ பரிமாறினால் அதுதான் சூப்பர் டிஷ்!!
 
அம்மாடி...! பெயரைப் பார்த்தாலே
பயமாயிருக்கிறதே! கடோத்கஜன்!
உங்களுக்கேத்த ரெசிப்பி கொடுக்கமுடியுமா? இருந்தாலும்
முயற்சிக்கிறேன். நன்றி!!
 
நானானி உங்க ரங்கமணிக்காக அசைவம் செஞ்சீங்க சரி.உங்க அக்கா,தங்கையெல்லாம் எப்படி மாறினார்கள்?மொத்தத்தில் ரங்கமணிகள்தான் புரட்சிக்கு வித்திடுகிறார்கள்.போகட்டும் அல்வா செய்யத்தெரியுமா?இல்லைன்னா எங்க நெய்பர் அம்புஜம் மாமிகிட்ட கேட்டுக்கோங்க.[இருட்டுக்கடை அல்வாவைவிட பேமஸாக்கும்]
 
கண்மணி!
அக்கா,தங்கையெல்லாம் மாறவில்லை.
அவர்களது பிள்ளைகள்தான்!! புரட்சிக்கு வித்திட்டது என் மகன்தான்!
அடுத்தாத்து அம்புஜம் மாமியை
அறிமுகப்படுத்துங்களேன்!!
 
கொக்கு சைவக் கொக்கு
சிக்கன் பிரியம் கொண்டு,
அசைவம் ஆன கதைய
சிரிக்க சிரிக்க
விவரித்திருக்கும் விதம்
ரொம்ப ரொம்ப ஜோரு!
-ராமலக்ஷ்மி
 
'என்ன சமையலோ எதிர்த்து கேட்க நாதியில்லை' என்று உங்க வீட்டவர் பாடம விட்டிருக்கிறார் என்று பெருமிதமெல்லாம் வேண்டாம். அதற்கு காரணம் 'நீங்க வந்து செஞ்சுக் காட்டுங்க பார்ப்போம்னு' நீங்க சொல்லிட்டா? அதற்கு பயந்துதான் ;-)
 
நன்றி! ராமலக்ஷ்மி!
சமையற்கலையை விட எல்லோரையும் சிரிக்கவைப்பது அதைவிட சிறந்த கலை!
 
'செஞ்சு காட்டுங்க' என்று சொல்வதற்குத்தான் காத்திருக்கார்.
செய்யவும் செய்வார்.அதற்குப் பிறகு
கிச்சன் மேடையை சுத்தம் செய்வது யாராம்? அதற்கு நம்பளே சமைத்துவிடலாம்!
 
நன்றி! ஜெஸிலா!
 
தேடிப்பிடிச்சுச் சாப்டாச்சு...ஐமீன் படிச்சாச்சு.

இப்படித்தான் எங்கியாவது எதுக்காவதுன்னு மாற்றங்கள் வந்துருது:-)))))

கொக் கொக் கொக்
 
கொக் கொக்....சுடச்சுட இருந்துச்சா?
துள்சி!!!செஞ்சு எவ்ளோ நாளாச்சு.
ஆனாலும் என் கைப் பக்குவமல்லோ?
சூடாத்தானிருந்திருக்கும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]