Monday, April 9, 2007

 

வியர்டு...அப்டின்னா?ஐய....இது கூடத் தெரியாதா? எது செய்தாலும் எடக்கு மடக்காக செய்வது..அப்டித்தானே? அப்போ அடிச்சு மொழக்கிடுவோம் !!
தயிர்சாதம்+ரசம் எனக்கும் பிடிக்கும்.இன்னும் சில காம்பினேஷன்கள் சொல்லவா? வெல்லப்பாயாசம் மேலே கொஞ்சம் சாதம்....வாழைப்பழம் தொட்டுக்க சட்னி, இட்லிப்பொடி. விசேஷங்க்களுக்கு சரணபவன் சாப்பாடு வரும். அதில் பழப்பச்சடி வைப்பார்கள் தயிர்சாதத்துக்கு சூப்பராயிருக்கும். அதையே ஐஸ்கிரீமோடு கலந்தடிப்பேன். என்னைப்பார்த்து எல்லோரும் கலந்தடிப்பார்கள்
18-வயதுக்கு கீழே இருந்தகாலத்தில் கார் ஓட்ட பைத்தியமாயிருப்பேன்(இப்போதும் அப்படிதான்.சமீபத்தி லேக் தாகு போனபோது அங்கு ஸ்னோ மொபைல் ஓட்டி எல்லோரையும்-அமெரிக்க இன்ஸ்டரக்டர் உட்பட் அசத்தினேன்)
வெளியூர்களுக்கு செல்லும் போது, என் அண்ணாச்சி ஊர் தாண்டியவுடன்
எனக்கு ஸ்டீயரிங்கை கொடுப்பார்கள். நான் ஓட்டும்போது சிறுவூர்களைத்தாண்டும் போது சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு சிறுவர்கள், "ஏ.. ஏ,,பொம்பளை ஓட்றா டோய்!" என்று பின்னாலேயே சிறிது
தூரம் ஓடிவருவார்கள். அந்த பின்னோட்டம் கேட்க மிகவும் பிடிக்கும்.
ஒரு சின்ன ரிப்பன்(இப்போது ஏது!) வாங்கிகொண்டு அதுக்கு மேட்சாக
புடவை, ஜாக்கெட் என சகல ரதகஜ துரகபதாதிகள் எல்லாம் தேடித்தேடி வாங்குவேன். குஷ்பு ஜாக்கெட் மாதிரி (ஜன்னலெல்லாம் கிடையாதுங்க) எங்கள்
டெய்லரை பாடாய்படுத்தி தைத்துக்கொள்வேன். பின்னாளில் என் மகள்,"நீ இப்படியெல்லாம் செய்வாயாமே? பெரியம்மா சொன்னார்கள்." நானே சொல்லியிருந்தால் என்னாவது?
ஜிமிக்கியை எல்லோரும் காதில் தான் அணிவார்கள். அதையே நானும்
செய்தால் என் இம்மேஜ் என்னாவது? அதை செயினில் மாட்டி டாலராக போட்டுக்கொள்வேன். மாட்டலை வாட்ச் ஸ்ட்ராப்பாக ஆக்கிக்கொள்வேன்.
பரிசுப்பொருட்கள் கொடுப்பது அதையும் அழகாக கிஃப்ட்ராப் செய்வது பிடிக்கும். உள்ளிருக்கும் பொருள் எதானாலும் சுற்றிக்கொடுக்கும் விதம் பற்றி
பெரிய எதிர்பார்பிருக்கும்.
துக்க வீடுகளுக்குப் போகும் போது அங்கு ஃரீஸர் பெட்டியில் படுத்திருக்கும் உடலைப் பார்க்கையில் நாமும் (எல்லோரும்தான்) ஒரு நாள் இப்படித்தானே
படுக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்....நினைப்பதுமட்டுமல்ல
அது போல் கற்பனையும் செய்துகொள்வேன்...கால் பெருவிரல் கட்டி..மூக்கில்
பஞ்சு வைத்து.....என்ன பயந்துவிட்டீர்களா?...கொஞ்சம் பயங்கர வியர்டு இல்ல? கற்பனைக்கென்ன காசா பணமா.......!

சங்கீதம்! ஒரு அற்புதம்,ஆனந்தம். ஒரு சாகரம்! அதில் அலை ஓரம் காலை
மட்டும் நனைத்தவள். நல்லகுரல் வளத்தோடு பாடவேண்டும் என்று ஆசை!
கொஞ்சம் சபைக்கூச்சம்! விளைவு, வீட்டில் யாரும் இல்லாதபோது ஷெல்ஃப்
கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தலையை உள்ளே வைத்துக்கொண்டு
வாய்விட்டுப் பாடுவேன்! என் குரல் எனக்கே கேட்கும்!!!
அடுத்த ஜன்மத்தில் ஒரு எம்.எஸ்.எம்மாவாகவோ, பி.சுசீலாவாகவோ பிறக்க
வேண்டும் என்று ஆஆஆசை!!! ஆசைக்கும் என்ன காசா பணமா...! ஹி..ஹி

இறுதியாக...
டெலிபோன் ஒலித்தால் அது உறவுக்காரர்களாயிருந்தால்,"ஹலோ! யார் பேசுவது?" "நான் தான் பேசுகிறேன்" என்று என் குரல் மூலம் கண்டுபிடிக்கவேண்டும் ஒரு திமிர்! நிறைய பின்னோட்டங்கள் "நான், நான்"
என்று போட்டு நான் "நானானி" ஆனது கூட இப்படித்தான்!
ரொம்ப வியர்டி விட்டேனோ? டயர்டாகியிருப்பீர்கள்! இத்தோடு விடுகிறேன்
பிழைத்துப்போங்கள்!!!!!!!!!!

Labels:


Comments:
தயிர்சாதத்துக்கு பழப்பச்சடியா? வியர்டுனால நிறைய புதிய தயிர்சாதம் காம்பினேஷன்கள் கிடைக்குது..ம்ம்..

சூப்பருங்க, அழைப்புக்கேற்ற மாதிரி வியர்டிட்டீங்க..
 
நன்றி குருவே!
வசிஷ்டர் வாயால்.........
வாங்கிவிட்டேன்!
 
//வெல்லப்பாயாசம் மேலே கொஞ்சம் சாதம்....வாழைப்பழம் தொட்டுக்க சட்னி, //

நெஸமாவா? ஐயய்யே! :)
 
நானானி,
வியர்டுவிலேயே நீங்க தனி வியர்டுதான்.

மாட்டலைக் கையிலேயா?
அப்பொ கொலுசு?
சரியாப் போச்சு.
கிறுக்குகள் உலகத்துக்கு வெல்கம்.:-)
 
என்ன..ஐயய்யே?
சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அப்புரம் வாழைப்பழத்தை வெறுமே சாப்பிடமாட்டீர்கள்!!
 
வருகைக்கு நன்றி! வல்லி!
கொலுசு எனக்குப் பிடிக்காது....இதுவும் ஒரு வியர்டுதானோ?
 
தமிழ்மணத்தில உங்கள் பதிவை இன்னைக்குத்தான் பார்க்கிறேன். தமிழ்வருசப் பிறப்பில், நல்ல தமிழ் படிக்க முடிகிறது நானானி. கலக்குங்க
 
புத்தாண்டு வாழ்த்துக்கள்! அனானி!
என் தமிழைப் பாராட்டியதற்கு நன்றி!
 
மாமி சூப்பர்!!! இன்னைக்கு தான் உங்க பிளாகிற்கு வந்தேன்..கல கல கல னு ஒரே ஜாலியா இருக்கு.... வாழ்த்துக்கள்....
 
கலாபாரதி!!
லேட்டாக வந்தாலும் லக்க லக்க லக்க
லக்க...என்று வந்துவிட்டீர்கள்!!
நன்றி!!!!
 
போட்டோ போட்டாச்சு
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]