Wednesday, March 7, 2007

 

வானொலி வர்த்தகஒலிபரப்பு

கேட்ட ஞாபகம் இல்லையோ..?
'இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு..உங்கள் அறிவிப்பாளர் மயில்வாகனன்...' என்று தன் அன்பான, இனிமையான குரலில் நேயர்களைக்
கட்டிப்போட்ட அந்த ஒலிபரப்பு இப்போது எங்கே? ஏன் இப்போது தென்தமிழ்நாட்டில் கேட்பதில்லை? டிவிக்களை நினைத்தும் பார்க்கமுடியாத ,All India Radio-வும் சொதப்பிக்கொண்டிருந்த காலத்தில் தன் சுவையான நிகழ்ச்சிகளால் அன்பு நேயர்களை கவர்ந்த அந்த ஒலிபரப்பு காற்றிலே கரைந்துவிட்டதா.......நமக்குத்தான் எட்டவில்லையா?
தமிழை கொத்துபரோட்டா போடும் தற்போதுள்ள FM மற்றும் மிளகாய் மசாலாக்கள் தமிழ் பேசவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் அங்கே
கற்றுக்கொள்ளவேண்டும்.

அறுபதுகளில்(என் வயதைச்சொல்லவில்லை-வருடங்களை) பள்ளியிலிருந்து
வந்தவுடன் காதுகளைப் பிய்த்து ரேடியோவில் சொருகிவிடுவேன்.
'இசையும் கதையும், அன்றும் இன்றும், ஜோடிமாற்றம், போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள்!!! அவைகளை மீண்டும் கேட்கமுடியுமா?

அன்று பேசிய தமிழ் காதில் தேன் பாய்ச்சியது
பாடல்கள் தெளிவாக நல்ல அர்த்த்துடன் உச்சரிக்கப்பட்டன
இசையும் நெஞ்சை வருடிச்சென்றது. இன்றோ?
தமிழ்...... தமிழ்தானே?!... நம்மைப் பிறாண்டுகிறது,
இசை தூக்கிவாரிப்போடுகிறது
என் உறவில் மகனொருவன் தன் புதுக்காரில் என்னை ride கூட்டிச்சென்றான்.
புது கார்....சுகமாகயிருந்த்து. திடீரென்று தன் காரில் மாட்டியிருந்த 'ரதகஜதுரக
பதாதி'களை ஆன் செய்தான். அவ்வளவுதான் அலறிவிட்டேன்! நிறுத்து நிறுத்து! என்று கீழே இறங்கிவிட்டேன். 'மவனே! என் முதுகில் மொத்மொத்தென்று மொத்தவேண்டுமென்று எத்தனை நாள் காத்திருந்தாய்?'
'இல்லை பெரியம்மா! இதையும்தான் கொஞ்சம் கேளுங்களேன்!'
வேண்டாமடா சாமி!....நீங்கள் எல்லாம் எங்கே சுற்றினலும் ஒரு நாள் என்
வட்டத்துக்குள் வந்துதான் ஆகவேண்டும்'-என்றேன்.
சொன்னாற்போல்...... இப்போது re-make...re-mix..என்ற பெயரில் பழசை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சுட்டு சுட்டு அலுத்துவிட்டதா?.......கற்பனை வற்றிவிட்டதா?

Labels:


Comments:
நானானி!!
அறுபதுகளில் பாட்டுக் கேட்டது
பெரியம்மா என அழைக்கும் பிள்ளை நானானி=பாட்டி ஓகே காட் இட்
நீங்களும் அறிவும் அனுபவமும் முதிர்ந்தவர் சரியா?வயசான்வங்க என்பதை அப்டி பாலிஷாச் சொன்னேன் ஹி..ஹி
 
கண்மணியின் பார்வையில் முதலில்
பட்டதற்கு மகிழ்ச்சி!!!!
என் வயதைக்கண்டு பிடித்தற்கு அவ்வளவு சந்தோஷமா?
நாந்தான் தைரியமாக ..பாலிஷ்டாக
சொல்லியிருக்கிறேனே..!
அனுபவமும்..அறிவும் பற்றித் தெரியவில்லை..ஹி..ஹி,,
 
இன்னைக்குத்தான் உங்க பதிவ பாத்தேன்..
//'இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு..உங்கள் அறிவிப்பாளர் மயில்வாகனன்...' என்று தன் அன்பான, இனிமையான குரலில் நேயர்களைக்
கட்டிப்போட்ட அந்த ஒலிபரப்பு இப்போது எங்கே? ஏன் இப்போது தென்தமிழ்நாட்டில் கேட்பதில்லை? டிவிக்களை நினைத்தும் பார்க்கமுடியாத ,All India Radio-வும் சொதப்பிக்கொண்டிருந்த காலத்தில் தன் சுவையான நிகழ்ச்சிகளால் அன்பு நேயர்களை கவர்ந்த அந்த ஒலிபரப்பு காற்றிலே கரைந்துவிட்டதா.......நமக்குத்தான் எட்டவில்லையா?
தமிழை கொத்துபரோட்டா போடும் தற்போதுள்ள FM மற்றும் மிளகாய் மசாலாக்கள் தமிழ் பேசவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் அங்கே
கற்றுக்கொள்ளவேண்டும்.//

சத்தியமான வார்த்தைகள் :(

சென்ஷி
 
வாங்க சென்ஷி! நன்றி!
என் கேள்விக்கென்ன பதில்...?
 
நானானி,
இன்னோரு பாட்டியா. வரவேண்டும். நல் வரவு
சுஸ்வாகதம்.
என்னப்பா மயில்வாகனனைத் தேடுகிறீர்கள். அவர் தமிழ்நாட்டுக்குக்கூட வந்திருந்தாராம்.
அவ்வளவே தெரியும். இப்போ இலங்கை வானொலி என்கிற பேரிலொன்றுமே சென்னையில் கேட்பது இல்லை.
எந்த ஊரு நானானி நீங்க?
நான் அனானியா.னானா நீயா. நானா நானியா?:-0
பதில் சொல்லவேண்டும். வலையில் ஒரே ஒரு பாட்டியாக வலம் வரும் என்னுடன் தோழமை கொள்ளவந்த கலிஃபோர்னியா அம்மணி நன்றி.
 
en blogkkuku vanthu neengga pinnooddam iddu vanthu oru vaaram akiddathu.. aanal, innaikkuthaan ingke vara santharppam kidaithathathu. Oru puthu pen nanbar kidaiththathil intha .:: MyFrind ::.'kku romba santhosham anaani..

ungke marra postkkalai ippo padikka poren. ;-)
 
வாங்க...வல்லிசிம்ஹன்..இப்பத்தான்
வந்தீகளா..? புரிந்திருக்குமே? பக்கா
திருநெல்வேலிக்காரி!
நான் ஒரு புத்தம்புதுப்பாட்டி.அமெரிக்க
விஜயமும் அதற்காகவே! வந்த இடத்தில் பொழுது போக்க(பேரன் வேலைகளை முடித்துவிட்டுத்தான்)
ப்ளாக்கில் மேயவாரம்பித்தேன்...செம் தீனி. என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றார்கள்.
சும்மாவிடலாமா..? தனிக்குடித்தனம்
வந்துவிட்டேன்! புதுப்புது அறிமுகங்களும் நட்புகளும் கிடைக்க
மனதுக்கு ம்கிழ்ச்சியாயிருக்கிற்து
நன்றி!
 
dear 'my friend'
nantri! ungal or un..? arimukam+natppukku!
22=60+ kaikokkalaam naan ready! appa niingka?
 
60களில் இலங்கை வானொலி கேட்டவரா? அதே நினைவில் இருங்கள். இப்போது மறந்தும் கேட்டு விடாதீர்கள்:)
 
உங்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்களும் இப்பொழுது நல்ல தமிழ் ஓலிபரப்பு இல்லாமல் வருந்துகின்றோம். நல்ல தமிழ் பாடல்கள் திரைக்கு வருவது குறைவு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குட்டிச் சுவராகிவிட்டது. தமிழர்களே ஊரைவிட்டு அகதியாக ஓடும்போது நல்ல ஒலிபரப்பு எப்படிச் சாத்தியமாகும்?


ஒரு ஈழத் தமிழன்.
 
உங்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்களும் இப்பொழுது நல்ல தமிழ் ஓலிபரப்பு இல்லாமல் வருந்துகின்றோம். நல்ல தமிழ் பாடல்கள் திரைக்கு வருவது குறைவு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குட்டிச் சுவராகிவிட்டது. தமிழர்களே ஊரைவிட்டு அகதியாக ஓடும்போது நல்ல ஒலிபரப்பு எப்படிச் சாத்தியமாகும்?


ஒரு ஈழத் தமிழன்.
 
அனானி! இன்றும் அதே நினைவுகளில்தான் திழைத்துக்கொண்டிருக்கிறேன்!
 
//இசையும் கதையும், அன்றும் இன்றும், ஜோடிமாற்றம், போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள்!!! அவைகளை மீண்டும் கேட்கமுடியுமா?//

வலைப்பதிவுலகில் சில இளைய ஈழத்தமிழ் பதிவர்கள் இசையும் கதையும் பாட்டுக்கு பாட்டு போன்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு சில இசையும் கதையும் நிகழ்ச்சிகள் வெளியாகி விட்டன.
நீங்கள் விரும்பும் தமிழை வரும் காலங்களில் வலைப்பதிவுகளில் தாராளமாகக் கேட்கலாம்
 
நானானி, இதுவும் ஒரு வியர்டு பதிவா என்ன? காலம் மாறிப்போச்சுங்க! நம்மளும் அதற்கு தகுந்தாப்போல போய்க்க வேண்டியதுதான். இல்லைன்னா, ஒருத்தர் காதை ஒருத்தர் பிடித்துக்கொண்டு, 'உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு' ஒப்பாரி வெச்சினு காலத்த கழிக்க வேண்டியதுதான்.

அதுசரி, உங்க ப்ரொஃபைல்ல நிழற்படம் பிடிக்கும்னு எழுதியிருக்கீங்க. அப்படீன்னா, நான் எடுத்த படங்களை கொஞ்சம் http://picasaweb.google.fr/maariamman பார்த்து கருத்து சொல்லுங்களேன்!

நன்றி.
 
நானானி!
எங்கள் நாட்டு வானொலியை நீங்கள் நினைவு கூர்வது; மிகச் சந்தோசமாக உள்ளது. இசைவிழாக் காலங்களில் ;உங்கள் வானொலிக்கு யாழ்ப்பாணத்தில் நாம் தவம் கிடப்போம்.
சொல்ல வேண்டியதை நல்லாச் சொன்னீங்க...!!!புரிபவர்கள் புரிந்தால் சரி!!
old is gold.
 
நான் சிலோன் வானொலி கேட்க ஆரம்பித்தது 70 களில்.
சூசகமாக சொல்லிட்டேன் என் வயதை!!! :-))
எதை வேண்டுமானால் எழுதலாம் என்றால் இப்படியும் பின்னூட்டம் இடலாம் என்று தானே அர்த்தம்??
முக்கியமான ஒருவரின் பின்னூட்டம் காணவில்லையே!!! மறைத்துவிட்டீர்களா?
 
நன்றி சயந்தன்!
வலைப்பதிவுகளில் கட்டாயம் அவற்றைக் கேட்கிறேன்.
 
இது வியர்டு பதிவில்லை மாசிலா அவர்களே! மனதின் ஆதங்கம் அவ்வளவே! வருகைக்கு நன்றி!
நீங்கள் குறிப்பிட்ட பதிவில் சென்று
பார்க்கிறேன்.
 
வாங்க யோகன் பாரிஸ்!
உங்கள் வானொலியின் ரசிகை நான்
எப்போதும் பழசு தங்கம்தான்!
 
வாங்க யோகன் பாரிஸ்!
உங்கள் வானொலியின் ரசிகை நான்
எப்போதும் பழசு தங்கம்தான்!
 
வடூவூர் குமார்!
வயதில் என்னைவிட சிறியவராகத்தான் இருப்பீர்கள்!
அந்த முக்கியமானவர் யார்? யாரையும் நான் தவிர்க்கவில்லையே!
யாரென்று நீங்கள்தான் சொல்லுங்களேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]