Tuesday, February 8, 2011

நாங்களெல்லாம் பைத்தியக்காரர்களா

குடியரசு தின விழா முடிந்து முப்படைகளும் தத்தம் இடங்களுக்குத் திரும்பும் ரிட்ரீட் என்ற விழா டிவி-யில் பார்த்து மனதில் தோன்றிய ஆதங்கம்.

என்ன ஒழுங்கு, என்ன கட்டுப்பாடு, என்ன நேர்த்தி!
பீடு நடையில் எத்தனை வகை...அத்தனையும் அழகு

பாருங்கள்.....நாட்டைப் பாதுகாக்கும் எங்களின் கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும், எங்களின் நடையில் இருக்கிறது. உங்களுக்கோ பேச்சில் மட்டுமே இருக்கிறது.
ஒரு நிமிடம் எண்ணிப்பாருங்கள் நாட்டை ஆளும் தலைவர்களே, அதிகாரிகளே!
கடமைகளை காற்றில் பறக்க விட்டீர்கள், விழாக்களில் விடும் பலூன்களைப்போல.
பதவியேற்கும் போது எடுத்த உறுதி மொழி, அன்றே இறுதி மொழியானது.
நம்பி வாக்களித்த மக்களுக்கான நன்மைகளெல்லாம் உங்களுக்கே என்றானது.
இயற்கையின் சீற்றத்தைக் கூட தாங்கலாம், உங்களின் ஆட்டங்கள் தாங்கலையே.
அந்நியர்கள் நுழையாமல் அல்லும் பகலும் வெயிலிலும் மழையிலும் பனியிலும்
வட கோடி எல்லையில் நாட்டைப்பாதுகாக்கிறோம் - நீங்களோ அலைக்கற்றை வழியே அதே பாதுகாப்பை
பல கோடிகளுக்கு கூசாமல் விற்கிறீர்கள்.
உங்களைப்போல் நாங்களும் ஆரம்பித்தால்.....ஆனால் நாங்கள் செய்யமாட்டோம்.
சுயநலமில்லா தேச சேவைக்கு வந்தவர்கள் நாங்கள்.
சுயநலமே மொத்த உருவாய் சொந்த சேவைக்கு மக்களை ஏமாற்றி வந்தவர்கள் நீங்கள்.

ரிட்ரீட் முடிந்து தேசீயக் கொடியிறக்கி அழகாக மடித்து பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டோம். நாட்டின் பாதுகாப்பை நீங்கள் எப்படி, எப்போது மக்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்????!!!!

நாட்டின் இறந்த, நிகழ் காலங்கள் நீரில் தெரியும் தெளிவில்லா கலங்கலான சித்திரம்.
எதிர்காலமாவது தெளிவான, ஒளிமயமான சித்திரமாகும் காலமெப்போது?

பி.கு. என் எண்ணத்தை பிரதிபலிக்கிற மாதிரி இவ்வார விகடனில் கேள்வி ஒன்றிற்கு பதில் வெளியாகியிருக்கிறது.
கேள்வி:
குடியரசுதின நிகழ்ச்சியை டிவி-யில் பார்த்து என்னைப்போலவே நீங்களும் பரவசப்படுவது உண்டா?

பதில்:
உண்டு. தூய்மையான தலைவர்களௌம் தியாகிகளும் பார்வையாளர்களாக உட்கார, அணிவகுப்பு நிகழ்வது பெருமிதமான விஷயம்தான். ஆனால் பல கொள்ளக்காரர்களும் ஊழல் பேர்வழிகளும் மோசடி உயரதிகாரிகளும் மக்கள் பணத்தை சுருட்டுபவர்களும் ஊழல் அக்கிரமங்களை கண்டு கொள்ளாதவர்களும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு சொகுசான உருக்கைகளில் வரிசையாக அமர்ந்திருக்க உன்னதமான ராணுவ வீரர்கள் சல்யூட் அடித்தவாறு அவர்களை முன்னே அணிவகுத்து செல்வதைப் பார்க்கும்போது இப்போதெல்லாம் ரொம்பவே நெருடுகிறது.

13 comments:

said...

ஒவ்வொரு குடிமகனும் கேட்கவேண்டிய கேள்வி இது.
அழகாக,கேள்வியும் பதிலுமாகப் பதிவிட்டுப் பதியவைத்து விட்டீர்கள்

said...

எல்லோருடைய ஊணர்ச்சிகளையும் வடித்து எழுதி இருக்கிறீர்கள் நானானி.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று ஓங்கிக் கதற ஆசைதான். ஊமைகளாகவும் செவிடுகளாகவும்,குருடர்களாகவும்தலைவர்களே இருக்கும் வரை ,
பாரதம் என்னும் பேச்சுக்கு என்ன பொருள். மாரத வீர்ர் மலிந்த நன்னாடுதான். அவர்கள் வெளீயே ராட்சசர்களைக் காப்பார்கள். உள்ளே இருப்பவர்களை என்ன செய்வது.

said...

//நாங்களெல்லாம் பைத்தியக்காரர்களா//

ரொம்ப வருஷமாகவே அப்படித்தான் ஆக்கிட்டாங்க நம்மளை!!

ராணுவத்தினரை மட்டுமல்ல, ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ் களைப் பார்க்கும்போதுகூட அப்படித்தான் தோன்றுகிறது!!

said...

நல்லா யோசிச்சிருக்கீங்க..

said...

கோமா,
நன்றி.

said...

கோமா,
நன்றி.

said...

வல்லி,
நெஞ்சு பொறுக்கத்தான் இல்லை.
தலைவர்கள், செவிடர்களாகவும் குருடர்களாகவும் மட்டும் இல்லை..
வெ.ம.சு.சொ. இல்லாதவர்களாகவுமிருக்கிறார்கள்.

நாமெல்லாம் எப்போது பொங்கியெழப்போகிறோம்? ம்ம்?

said...

ஹுஸைனம்மா,

நாம் ஏன் அப்படி ஆகணும்?
பொறுத்தது போதாதா?
பொங்கியெழ வேணாமா?

உசுப்பி விட ஒரு கண்ணாம்மா வேணுமா..என்ன?

said...

முத்துலெட்சுமி,
//நல்லா யோசிச்சிருக்கீங்க..//

இது ஒண்ணைத்தான் நம்மால் செய்ய முடியும்.

said...

அன்பின் நானானி

ரொம்பக் கோபமா இருக்கீங்க - சாந்தமா இருங்க - நாடு எங்கே போகிறது - நாமெல்லாம் என்ன செய்கிறோம் என்ற ஆதங்கமும் கோபமும் நியாயமாக வருகிறது. என்ன செய்ய இயலும் நம்மால் - பொங்கி எழலாம் - போராடலாம் - அரசியல் வாதிகளைத் திருத்த இயலுமா என்ன ? - நம்மால் மக்கள் சக்தியைத் திரட்ட இயலுமா ? ம்ம்ம்ம் - காலம் மாறும் - பொறுத்திருப்போம்

said...

வெ.ம.சு.சொ = வெ.மா.சூ.சொ என இருக்க வேண்டாமா

said...

ayokkiyarkal arasiyalil ellaam sakajam... nallavarkal arasiyalil nulaya naam anaivarum thairiyam kodukka vendum.

said...

//உசுப்பி விட ஒரு கண்ணாம்மா வேணுமா..என்ன?//

உசுப்பி விட ஒரு கண்ணாம்பா!!!!
நானே திருத்திட்டேனே1