Saturday, December 11, 2010

நூத்துக்கு நூறு

எங்கள் அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய மதர் அலெக்ஸ் அவர்கள் நூறு வயதைக் கடந்து
அந்த வயதுக்கே உரிய தளர்ச்சியோடு, வழக்கம் போல் எங்களை உற்சாகமாக வரவேற்றார்.


ஆசிரியரல்லவா? அதுவும் தலைமை ஆசிரியர் அல்லவா? இவ்வுலக வாழ்கையில் நூற்றுக்கு நூறு வாங்கி விட்டார்!!!! ஆம்! அவர் இன்று (10-12-10) நூறு வயதைக் கடந்து நிற்கிறார்.

வழக்கம் போல் நாங்கள் பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் பள்ளி, பழைய மாணவிகள்
அவரை வாழ்த்தி ஆசி பெறச் சென்றோம், கேக்குகள், இனிப்புகளோடு. எங்களையெல்லாம் அடையாளம் தெரிந்தாலும், திரும்பத் திரும்ப, ”நீ யார்...நீ யார்?” கேட்டுக் கொண்டேயிருந்தார். நாங்களும் சளைக்காமல் சொல்லிக் கொண்டேயிருந்தோம்.

முன்னெல்லாம் என்னைப் பார்த்ததும், “ஹே...யூ நாட்டி கல்யாணி!” என்பவர், இம்முறை அதை சொல்லவில்லை. கொஞ்சம் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது.


நான் பதிவுகளில் போட்ட அவர் படங்களை, 1964, 2008, 2009- ஆகிய வருடங்களில் எடுத்து, பிரிண்ட் போட்டு அதை ப்ரேம் செய்து அவருக்கு அன்போடு பிறந்தநாள் பரிசாக எடுத்துப் போயிருந்தேன். பின் புறம், ‘ப்ரம் நாட்டி கல்யாணி’ என்று எழுதி.

அதைப் பார்த்ததும் நாம் எல்லோரும் இதில் கையெழுத்துப் போடலாமே என்றாள் தங்கை.
’லாமே’ என்றேன். வந்திருந்த தோழிகள் அனைவரும் கையெழுத்திட, வர இயலாத மற்றவர் பெயர்களையும் ஆளுக்கு ஒன்றாக எழுதி எடுத்துக்கொண்டு மாடியேறினோம்.

நான் எடுத்துச் சென்ற படம்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

படத்தை அவரிடம் சேர்ப்பித்தபோது. “You know mother the black&white photo was taken by my annaachi" என்றவுடன் நூல் பிடித்து என்னையும் தங்கையையும் சரியாக தெரிந்து கொண்டார். “Your father and mother like me very much. Convey my enquiries to them." என்றார். நானும் சரி சரி என்று சொன்னேன். இன்னும் நாங்கள் மாணவிகள் என்ற நினைப்பிலேயே. இன்னொருத்தியிடம், ‘உனக்கு கல்யாணமாச்சா? எத்தனை குழந்தைகள்?’ பேரன் பேத்திகள் பார்த்தவர்களைப் பார்த்து. ஒரு நிலையிலில்லா நினைவுகள்!!!!!


படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னது.....”நான் போட்டோவில் இருப்பது முக்கியமில்லை உங்கள் எல்லோரது மனங்களிலும்தான் நான் இருக்கவேண்டும் அதுவே என் விருப்பம் என்றார்.

பிறகு என்ன தோன்றியதோ, “படிக்கும் போது நான் உங்களிடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தேன், அதனால் உங்களுக்கெல்லாம் என்னைப் பிடிக்காதுதானே?” என்றதும் மனசெல்லாம் பதறியது.


ஐயோ! மதர் அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் அப்படி இருந்ததால்தான் நாங்கள் வாழ்கையை எதிர்கொண்டு வாழ தைரியம் கிடைத்தது. வசந்தா சொன்னாள், ‘மதர் அப்போது பிடிக்காதுதான், ஆனால் இப்போ வீ லவ் யூ சோ மச்!’ என்று.


இப்படி ஒரு குழந்தையிடம் பேசுவதுபோல் பேசி விட்டு நாங்கள் உங்கள் அடுத்த பிறந்தநாளுக்கும் வருவோம் என்று அங்கே உள்ள மதர் நாங்கள் உறவாடியதையெல்லாம் பார்த்துக்கொண்டு, ரசித்துக்கொண்டு அவர்கள் அன்போடு கொடுத்து உபசரித்த கேக், இனிப்பு, காரம். காபி எல்லாம் மொசுக்கிவிட்டு திரும்பினோம். இடையில் ஒரு நாள் போகவேண்டுமென்ற தீர்மானத்தோடுபோன வருடம் பார்த்ததுக்கு இந்த வருடம் கொஞ்சம் தெளிவாக பேசிக்கொண்டிருந்தார். கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தெம்பையும் தருமாறு வேண்டிக் கொள்வோம்.
14 comments:

said...

அருமையான பதிவு

said...

உங்கள் குரு பக்தி வாழ்க!

//நான் போட்டோவில் இருப்பது முக்கியமில்லை உங்கள் எல்லோரது மனங்களிலும் தான் இருக்க வேண்டும் அதுவே என் விருப்பம்.//

நிச்சியம் இருப்பார்.

கடவுள் அவருக்கு நல்ல தெம்பையும் ஆரோக்கியத்தையும் நிச்சியம் தருவார்.

அவருக்கு எங்கள் வணக்கங்கள்

வாழ்க பல்லாண்டு.

said...

இத்தனை வருடங்கள் கழித்தும் ஆசிரியையை மறக்காமல் இருப்பது என்பது அந்த ஆசிரியரின் மேல் நீங்க வெச்சிருக்கற மதிப்பைக் காட்டுது.

அருமையான பகிர்வு நானானி.

said...

"நூத்துக்கு நூறு" வாழ்த்துவோம்.

said...

சரோஜினி பார்க்கில் கேந்திப்பூ பறித்து மாட்டிக்கொண்டானே முருகன் என்று நினைவு படுத்தியிருந்தால் கடகட என சிரித்திருப்பார். அடுத்த முறை நான் சென்னை வரும்போது மதரைப் பார்க்க என்னை கூட்டிச் செல்வீர்களா?

சகாதேவன்

said...

கோமா,
நன்றி!

said...

கோமதி அரசு,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

said...

புதுகைதென்றல்,
//அந்த ஆசிரியரின் மேல் நீங்க வெச்சிருக்கற மதிப்பைக் காட்டுது. //

உண்மைதான்.

said...

நல்லதொரு பகிர்வு. மதருக்கு என் வணக்கங்கள்.

said...

அருமையான நெகிழவைக்கிற பதிவு.

மதர் இன்னும் பலவருடங்கள் நலமோடிருக்க வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

said...

மாதேவி,

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

said...

சகாதேவன்,
சரோஜினிப் பார்க்கையும் முருகனையும் மத்ர் மறக்கவே மாட்டார்கள்...நிச்சயம். முதுமை...ஆஹா! வெறும் முதுமையா? முது முது முதுமையல்லவா? நினைவுகள் அல்லாடுகின்றன.

நீங்கள் சென்னை வரும் போது அவசியம் மதரைப் பார்க்கப் போவோம். சேரியா?

said...

ராமலக்ஷ்மி,

உங்கள் வணக்கங்கள் மதருக்குப் போய் சேரட்டும்.

said...

சுந்தரா,

உணமைதான்...நெகிழத்தான் வைத்தது அந்த சந்திப்பு.