Friday, October 22, 2010

இருட்டுக்கடை......ஒரிஜினலும் டுப்ளிக்கேட்டும்

நெல்லைக்கே புகழ் சேர்ப்பது அல்வாதான்! அதுவும் ”இருட்டுக்கடை அல்வா” இன்னமும் ஸ்பெஷல். மாலை ஆறுமணிக்கு போட்டு ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடுவதுதான் அதன் சிறப்பு.


பாக்கெட்டாக வாங்க மாட்டார்கள். அப்போதே அங்கேயே சுடச்சுட வாழையிலையில் ஐம்பது, நூறு கிராம் என்று தருவார்கள். அப்படியேச் சாப்பிடலாம்!! ருசியோ ருசி!! தொண்டையில் வழுக்கிக் கொண்டு இறங்கும். பார்சல் வேண்டுமென்றாலும் அதே வாழையிலையில் சுத்தி அதை துண்டு பேப்பரில் மடக்கித் தருவார்கள். இப்போது ஆயில் பேப்பரில் தருகிறார்கள். பெயர் பிரிண்ட் அடித்த கவர்கள் எல்லாம் கிடையாது.

எவ்வளவு அப்பிராணியாக இருந்திருக்கிறார்கள்!!!


மேலே வெள்ளையடித்துக்கொண்டிருப்பதுதான் இருட்டுக்கடை. கடைக்குப் பெயர் பலகை கிடையாது. ‘இருட்டுக்கடை’ என்ற பேரை காப்பி ரைட் வாங்கி பதிவும் செய்து கொள்ளவில்லை.சும்மா விடுவார்களா? ”திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” என்று பேர் போட்டுக் கொண்டு கனஜோராக வியாபாரம் நடக்கிறது, நெல்லை ஜங்ஷனில்.விஜாரித்ததில் ஒண்ணும் செய்ய முடியாதாம். கோர்ட்டுக்குப் போனாலும் நிக்காதாம்.

கோர்ட்டில் நிக்காட்டால் என்ன? மக்களுக்குத்தெரியும் எது அசல் எது நகல் என்று. ஒரிஜினலின் ருசி மக்கள் மனதில் என்றும் “நிக்கும்!”

19 comments:

said...

என்ன செய்தும் தமிழ்மணத்தில் நிக்க மாட்டேங்குதே! இப்ப நான் என்ன செய்ய?

said...

iruttu kadainnuuu CFL light matti vachi irukkan antha vennai....

said...

ஒரிஜனல் கடையைத் தேடிப்பிடிச்சு வாங்கிட்டோம்லெ:-))))கிலோ 100 ரூ.என்பது ரொம்பவே மலிவு!!!!

said...

டூப்ளிகேட்டை, ஜங்க்ஷன் போற வழியில நானும் பார்த்தேன்..

காளான் மாதிரி முளைச்சுக்கிடக்கிற சாந்தி ஸ்வீட்ஸ் கடைகளையே ஒன்னும் பண்ணமுடியலை. இனிமே, இருட்டுக்கடைகளும் பெருகிடுமோ என்னவோ :-(((((

said...

sila neram appadi andha pattai work aharathilla ..enakkum appadi ahi irukku..

post unmai than.. perasai padadha atkala irukkanga.. ippa courier la oor oora pothu halwa..pothum endra manase nnu irupanga pola avanga..
sorry tamil font work ahala..innikku..

said...

கோவில்பட்டி ஆனந்தன்,

நான் பார்த்து பெயர் பலகை இல்லை. ஒரு வேளை வெள்ளையடித்துக் கொண்டிருந்ததால் தெரியவில்லையோ?

said...

துள்சி,

நீங்க எப்பவுமே சமத்துல்ல!!!!

said...

சென்னையை விட திருநெல்வேலியில் இனிப்பு கார வகைகள் மிகவும் மலிவு.

said...

அமைதிச்சாரல்,

ஹையோ!!!மதுரை பஸ் ஸ்டாண்டில் திரும்பிய பக்கமெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ்தான்!!

said...

கயல்,
கஷ்...டப் பட்டு படித்து புரிந்து கொண்டேன். நன்றி!

பேராசை ஒரு பக்கம், இப்படி பிற்காலத்தில் சைக்கிள் கேப்பில் நுழையும் வழி ஒன்றிருக்கும் என்பதையே அறியாத வெள்ளந்தியாய் இருந்திருக்கிறார்களே!!என்னாத்த சொல்ல?

said...

மக்களுக்குத்தெரியும் எது அசல் எது நகல் என்று. ஒரிஜினலின் ருசி மக்கள் மனதில் என்றும் “நிக்கும்!”


ஆமாம் நானானி
நெல்லையில் இருப்பது ஒரே ஒரு இருட்டுக்கடை அல்வாதான்
மற்றதெல்லாம் திருட்டுக் கடை அல்வா.....

said...

// திருட்டுக் கடை அல்வா.....//

ச..பாஷ்!!!கோமா!
இதுதான் கோமா பன்ச்.

said...

அசல் என்றால் நகலும் முளைச்சிடும்.:))

இருட்டுக்கடை பெயர் நல்லா இருக்கு.

நெல்லை லக்ஷ்மணன் said...

நீங்கள் சொல்வது original இருட்டு கடை அல்ல என்று நினைக்கிறேன்.ஏனென்றால் இருட்டு கடை அல்வா பொதுவாக சூடாக இருப்பதில்லை.

said...

Dr.M.K.முருகாநந்தன்,

முதன்முதலாக வருகிறீகள்...வருக.
நகலொன்று இருப்பதாலேதான் நகலின் அருமை தெரிகிறது.

‘இருட்டுக்கடை’ ஆம்! பெயருக்கேற்றாற்போல் ஒரு நாற்பது வாட்ஸ் பல்ப்தான் அழுது வடியும். மாலையில் ஆரம்பித்து மாலையிலேயே முடிவதாலே அந்தப் பெயர் என்று அறிகிறேன்.
வருகைக்கு நன்றி!!

said...

நெல்லை லஷ்மணன்,
நீங்களும் முதல் வருகையா? நன்று..நன்று.

//இருட்டு கடை அல்வா பொதுவாக சூடாக இருப்பதில்லை.

நானே சுடச்சுட வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.

வருகைக்கு நன்றி!

said...

தமிழ்மணத்தில் போட்டாச்சா...

said...

"இருட்டுக்கடை அல்வா" என்பதால்தான் அல்வா நல்லா வெளிச்சத்துக்கு வந்திருக்குப் போல :))

said...

எனக்கும் நண்பர்கள் நெல்லையில் இருந்து இ(தி)ருட்டுக்கட அல்வா வாங்கி அனுப்புறாங்க இப்பவும் - இருந்து எனக்குப் பிடிக்கல - மதுரை பிரேம விலாஸ் அல்வா - சுடச்சுட வழுக்கிக்கிட்டிப் போற அல்வா தான் பிடிக்குது . நீங்க் அந்தக் கால நெல்லை இ(தி)கடை அல்வா பத்திப் பேசறீங்களா - சரி சரி - அடுத்த தடவ நெல்லைக்கு வந்து போகும் போது மதுரையில் ஒரு சின்ன பிரேக் நெல்லை இ.கடை அல்வாவோட - சரியா - இனிய தீப்த் திரு நாள் நல்வாழ்த்துகள் நானானி - நட்புடன் சீனா