Thursday, December 3, 2009

வாழையடி வாழையாக வந்த வாழைக் கன்று...இதுவும் நன்று!!

அப்பா, தாத்தா, பூட்டன் இது ஒரு பரம்பரையின் சங்கிலி. இது போல் உறவே அல்லாத ஏழு ஸ்வரங்களால் இணைந்த ஒரு சங்கீதப் பரம்பரையின் இளம் கன்று ஒன்று சப்தஸ்வரங்களையும் பந்தாடிய அழகைப் பார்த்தேன் 19/07/09 ஞாயற்றுக்கிழமையன்று மாலை
தி-நகர் YGP அரங்கில். அந்த சங்கீதப் பரம்பரை...?

கூடலூர் நாரயணசாமி பாலசுப்ரமணியம். The one and only G.N.பாலசுப்ரமணியம்.
மதுரை லலிதாங்கி வசந்தகுமாரி. எம்.எல்.வி.
சுதா ரகுநாதன்

இதில் புதிதாக இணைந்தவர் செல்வி தீபிகா. சுதா ரகுநாதனின் சிஷ்யை. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சுதாவின் டீன் ஏஜ் பிஞ்சு குரல் போலிருக்கிறது. அப்படியே ஸெராக்ஸ் காபி!

ஞாயறன்று இவர், ஜி.என்.பியின் நூற்றாண்டையும் எம்.எல்.வியின் எண்பதாவது ஆண்டையும் கொண்டாடும் விதமாக, "நினைக்காத நேரமில்லை" என்னும் தலைப்பில்
அந்தக்கால லெஜெண்ட்ஸ், ஜி.என்.பி.- எம்.எல்.வி. - எம்.எஸ்.சுப்புலஷ்மி - டி.கே.பட்டம்மாள் - மதுரை சோமு - ராதா ஜெயலஷ்மி - எம்.எஸ்.ராஜேஸ்வரி -பி.லீலா -எஸ்.ஜானகி ஆகியோரது மறக்க முடியாத என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்களை தன் இனிய குரலால் தொகுத்துப் பாடி அவையோரை மகிழ்வித்தார்.

கச்சேரி ஆரம்பிக்குமுன் தூர்தர்ஷன் முன்னாள் டைரக்டர் திரு.நடராஜன் அவர்கள் தீபிகாவின் வெப்-சைட்டை திறந்து வைத்தார். www.deepikav.com இந்த சைட்டில் தீபிகாவின் முழு விபரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சில வருடங்கள் முன்பு கே.பாலச்சந்தரின் "கையளவு மனசு" சீரியலில் கீதாவின் கடைக் குட்டி சுட்டிப் பெண்ணாக வந்து(சுமார் நாலைந்து வயதுதானிருக்கும்) அழகாப் பாடி நம் மனதைக் கொள்ளை கொண்டவள்தான் இந்த தீபிகா!

முன் வரிசை விஐபி-களில் முதலில் வொயிட்&வொயிட்டில் அமர்ந்திருப்பவர் மறைந்தும்,மறையாமல் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.எல்.வி. அவர்களின் புதல்வர். மற்றும் திருமதி சுதா மகேந்திரன், திருமதி வொய்.ஜி.பி., குமாரி சச்சு ஆகியோர்.

மிகமிக தாமதமான பதிவுதான். என் கணினிக்கும் அபஸ்வரம் தட்ட, குடும்ப சூழ்நிலையிலும்
கொஞ்சம் சுருதி கலைந்து போன சமையமாதலால்(ரங்கமணியின் ஆப்பரேஷன் சமயம்) சுருதி சுத்தமாக பதிவிட இப்போதுதான் நேரம் வாய்த்தது. இதுதான் சரியான நேரம்!!

டிசம்பர் மாதம் முழுதும் சென்னையில் இயற்கை வழங்கும் மழையோடு சேர்த்து எங்கும் இசை மழை இடி முழக்கத்தோடு பொழியும் நேரமில்லையா.....!!!!!

வெளியூர்வாசிகளின் கடுகடுப்பும் சிடுசிடுப்பும்தான் இங்கு இடியாய் இறங்குகிறதோ?

7 comments:

said...

இசை விழா தொடங்க இருக்கிறது, இன்னும் நானானியின் பதிவை காணுமே என்று க்ளிக்கினால் சிஷ்ய வம்சத்தின் இசையை விமர்சித்து எழுதி விட்டீர்கள். இன்றைக்கு சங்கீத சபாவில் ஒரு கச்சேரி. நாளை எழுதலாமென்றிருக்கிறேன். இனி உங்களை தினம் பார்க்கலாமா?

said...

அன்பு சகாதேவன்,
இன்று சபாவில் யாரோட கச்சேரி?
கட்டாயம் எழுதுங்கள்.
//இனி உங்களை தினம்பார்க்கலாமா?//
தினம் வர ஆசைதான். பார்ப்போம். முயற்சிக்கிறேன். சேரியா?

said...

ஆமாம். ரொம்ப அழகான குரல்.

நானும் சில மாதங்கள் முன்னே இவுங்களைக் 'கேட்க'ப் போயிருந்தேன்.

http://thulasidhalam.blogspot.com/2009/10/blog-post_06.html

said...

ஆஹா!!!துள்சி, உங்க பதிவப் பாத்தேன்.
சுடச்சுடப் பரிமாறியிருக்கிறீர்கள்.
ஜூலையில் பாத்ததை டிசம்பரில் தந்திருக்கிறேன். என்ன....தீபிகா பிரபலமாகுமுன் கொடுத்திட்டேன். அம்புடுத்தான்.

said...

அன்பின் நானானி

ரங்க்ஸ் நலமா

ஜூலையில் நடந்ததை டிசம்பரில் எழுதினால் என்ன- நினைவாற்றல் - எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்

ம்ம்ம்ம் - தீபிகா பிரபலமாக நல்வாழ்த்துகள்

said...

அன்பு சீனா,
எல்லோரும் நலமே. தீபிகா நிச்சயம் பிரபலமாவாள்.

said...

நன்று! நன்று!
எல்லாரும் நலம் என்பதும் நன்று!