Wednesday, July 15, 2009

ஜூலை பிட்- நினைவிடங்கள்.

உலகெங்கினும் நினைவிடங்களுக்காப் பஞ்சம்? எனக்கேத்த எள்ளுருண்டையாக என்னிடம் இருப்பவைகளை தந்திருக்கிறேன். பாத்துட்டு தெரிவு செய்து சொல்லுங்கோ.
அம்மையிலிருந்தே ஆரம்பிக்கலாம்..

மதுராபுரி ஆளும் மகராணி, எண்ணும் வரமெல்லாம் கடைக் கண்ணால் தரும் மீனாட்சி அம்மையின் திருக்கோயில் கோபுரமும் பொற்றாமரைக் குளமும். எட்டு அதிசயங்களுக்குள் ஒன்பதாவதாக இணைய முடியாமல் போனது. இழப்பு அதிசயங்களுக்கல்ல.


அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள 'மில்வாக்கி மியூசியம்'. அற்புதமான கட்டிடக்கலைக்கொரு எடுத்துக்காட்டு.
அதன் இன்னுமொரு கோணம். பலமான காற்று வீசினால் பறவையின் ரெக்கைகள் போல் இவைகள் ஆடுமாம்.மிசோரி மாநிலத்தில் செயிண்ட் லூயிஸ் நகரில் எழுப்பப்பட்டுள்ள வளைவு. ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அமெரிக்காவுக்குள் நுழைந்தது இந்நகர் வழியாகத்தான். அந்த நினைவாக வளைந்ததுதான்.


சொல்லவே வேண்டாம் சுதந்திரதேவியின் சிலை. கையும் தோளும் வலிக்காதோ?

வலிக்கும்தான். அவள் தேவியல்லவா? 33% கிடைக்கும் வரை இப்படித்தான் நிற்பாள் போலும்.


அமெரிக்காவின் பெருமை மிகும் நினைவுச் சின்னம். மிக அருகில் சென்ற போது பிடித்தது.


கலிபோர்னியாவில் பசிபிக் பெருங்கடல் மேல் அமைந்துள்ள "தங்கப்பாலம்"

14 comments:

said...

எனக்கு வளைவு பிடிச்சிருக்கு...அப்ப உங்களுக்கு?

said...

எனக்கு ‘சிவ சிவ சிவ’ மீனாட்சி அம்மைதான் பிடித்திருக்கிறது. கம்பீரமாய் கோபுரம், பொற்றாமரை எல்லாம் அழகோ அழகு.

//இழப்பு அதிசயங்களுக்கல்ல.//

நல்லாச் சொன்னீங்க!

செயிண்ட் லூயி படம்.. தேதி இருக்குதுங்களே, கவனியுங்க.

நயகரா நீர்வீழ்ச்சியும், சுதந்திர தேவி படங்களும் அருமை.

மீனாட்சி க்ருபையில் பரிசு கிடைத்திட வாழ்த்துக்கள்!

said...

என்னன்னாலும் நம்மூர் அம்மா அல்லவா?
சரிதான்.

said...

எல்லா படங்களும் அருமை,அதில் நயகரா நீர்வீழ்ச்சி மிக மிக அருமை.

said...

எனக்கு பொங்கும் அருவி பிடிச்சிருக்கு... :)

said...

வளைவு அப்படியே ஒரு பூக்கூடையின் கைப் பிடிபோல் அமைந்திருக்கிறது ....அலாக்கா தூக்ற மாதிரி...

said...

மதுரையில் இந்த தெற்கு கோபுரம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அழகாக வளைந்து பாரபாலிக் என்பார்களே அதுபோல.
சுதந்திர தேவியின் க்ளோஸ் அப் நன்றாக இருக்கிறது.
இந்த இரண்டு அம்மன்களில் யாராவது ஒருவர் உங்களுக்கு பரிசு வாங்கி தருவார்.
சகாதேவன்

said...

//எனக்கு வளைவு பிடிச்சிருக்கு...அப்ப உங்களுக்கு?//

சிவனேன்னு அனுப்புங்க மீனாட்சி அம்மன் அருள் புரிவாள் !! :))

Vardhini said...

Mam, I vote for Statue of liberty...both the pictures are WOW!! so u r a damn good photgrapher too.... sagala kala valli...

said...

நானானி
உங்கள் பதிவுகளைப் பார்த்தபின் ,கோமாவின் சாய்ஸ் சரி என்பதைப் புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் அவார்டு பெற்றதற்கு

said...

அன்பு நானானி,
நம்ம மீனாட்சி தான் என் சாய்ஸ்.:)


செயிண்ட் லூயிஸ் வளவு எத்தனை படம் பிடிசாலும் எனக்குத் திருப்தி கொடுக்கவில்லை.
அப்புறம்தான் நம் முழுமை நமக்கே சொந்தம் என்றே , மீனாட்சியிப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்:))

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

said...

என் தேர்வு, அம்மன்தான்.

said...

வெற்றியும் உனக்கே
பரிசும் உனக்கே
பாராட்டும் உனக்கே
என்றபடி, படிப் படியாய்,[நக்கீரன் மாதிரி] பிட் தேர்வுக்குழுவினர் ஏறி வருவது போல் இருக்கிறது.