Wednesday, July 8, 2009

சரியாக கேட்கப் பட்ட கேள்வி! இப்ப பதில் சொல்லலாமா?

போன பதிவில் விளக்கமாக கேட்கப் படாமல் நான் சொதப்பியதின் விளைவு......பலர் பலவிதமாக புரிந்து கொண்டு பலவிதமான பதில்களை பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.


கேள்வி இதுதான்:


சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட, இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.இதுதான் சரியான கேள்வி. இப்போது புரிகிறதா?


இன்னும் உங்களை குழப்ப மனமில்லை.


சரி, நான் மூன்று பெயர்களை சொல்கிறேன். அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்கள், என்றாவது சொல்ல முடியுமா?


T.S. ரங்கசாமி


J.J. மாணிக்கம்


சுந்தரலிங்கம்


எனக்குத் தெரிந்தவரை இம்மூவரும் ஐம்பது வருடங்களாக அவர்தம் சார்ந்த துறைகளில் இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்க்கப் போனால் டைட்டிலிலிருந்தே பார்க்கப் பிடிக்கும். டைட்டிலை கவனமாகப் பார்ப்பேன். இதை வைத்து எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டலாமே என்று எண்ணியதன் விளைவுதான் இப்பதிவு.10 comments:

said...

திரைக்குப்பின்னால் உழைக்கும் பலரைப்பற்றி ஏதும் தெரியாமலேயே இருந்துவிடுகிறோம்.

தகவலுக்கு நன்றி நானானி

said...

டி.எஸ்.ரங்கசாமி - ரீ ரிகார்டிங்
ஜே.ஜே.மாணிக்கம் - மேக் அப்(யூகம்)
சுந்தரலிங்கம் - எடிட்டிங்(யூகம்)

சகாதேவன் - சினிமாவை தியேட்டரில் பார்ப்பது

said...

//திரைக்குப்பின்னால் உழைக்கும் பலரைப்பற்றி ஏதும் தெரியாமலேயே இருந்துவிடுகிறோம்.
//

திரைத்துறை என்றில்லை. இன்றைக்கு எல்லாத் துறைகளிலுமே இந்நிலை தான் !!!!!

said...

உண்மைதான், தென்றல்!

said...

சகாதேவன் வரிசைகள் மாறிவிட்டது

said...

சதங்கா!
ரெகக்னிஷன் என்பது அரிதாகிவிட்டது. விட்டால் நமக்கு மேல் ஏறிப் போய்விடுவானோ? என்ற அச்சம்தான் காரணம்.

said...

சரி நானே விடைகளைச் சொல்லி விடுகிறேன்.

T.S.ரங்கசாமி --எடிடிங்
J.J.மாணிக்கம் --ரீ-ரெக்கார்டிங்
சுந்தரலிங்கம் ---மேக்கப்

பழைய படங்களிலிருந்து இன்றைய படங்கள் வரை செக் செய்து பார்த்தால் புரியும் தெரியும்
இதில் சுந்தரலிங்கம் சிவாஜி, எம்.ஆர்.ராதா முதல் ராதாரவி வரை
இவர்தான் மேக்கப்மேன்.

இன்னும் எத்தனையோ பேர்கள் இருக்கலாம். நான் கவனித்ததில் இவர்கள்தான் நிற்கிறார்கள் நினைவில்.

said...

நுணுக்கமாய் பார்த்திருக்கீங்க அதுவும் வருஷக் கணக்கா:)!

திரைக்கும் பின்னால் உள்ளவர்களுக்கு இப்பதிவில் செய்து விட்டீர்கள் மரியாதை.

க்ரூப் டான்ஸ்களில் பார்த்தால் ஹீரோ அல்லது ஹீரோயின் பக்கத்தில் இருப்பவர்கள் எப்போதும் அருமையாக ஹீ-க்களை விட திறமையாய் ஆடுவார்கள். கவனித்திருக்கிறீர்களா?

said...

ஏதோ அதில் ஓர் ஆர்வம்! ராமலக்ஷ்மி!

ஹீரோ, ஹிரோயின்களை விட அழகாகவும், நன்றாகவும் ஆடினால் அடுத்தடுத்து பின்னுக்குத் தள்ளப் படுவார்க்ள். இது ஊரறிந்த ரகசியம்தானே!

said...

பார்த்திபன் கனவு படத்தில் சரோஜாதேவியும், ஜோடி படத்தில் திரிஷாவும் ஹிரோயினுக்கு சேடியாக வந்தவர்கள்தானே!!!