Sunday, March 1, 2009

பரமேசனின் நுதல்தனில் திறக்கும் மூன்றாவது விழி!!விஞ்ஞானிகள் விண்வெளியை ஆய்ந்த போது கிடைத்த இப்படம் சொல்வது என்ன?
மெய்ஞானிகளாலும் விளக்கமுடியாத, பிரம்மாவும் பெருமாளும் கூட காண முடியாத அடிமுடி உடையோன், அடியார்க்கு அடியனான சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்தது போல் அல்லவா இக்காட்சி!

இது நமக்கு உணர்த்துவதுதான் என்ன?

"பூலோக வாசிகளே! உங்களுக்காகவே நான் படைத்த இயற்கை வளங்களையும் செல்வங்களையும் கொஞ்சங்கொஞ்சமாக உங்கள் சுயநலத்துக்காகவும் பணப்பசிக்காகவும் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வைப் பற்றி சிந்தனையேதுமில்லாமல் கரையான்களைப் போல் அரித்து அரித்து, உங்கள் பாதுகாப்புக்காக, யாம்..யாம் அமைத்த ஓசோன் மண்டலத்தை ஓட்டை போட்டு உங்களுக்கு நீங்களே வேட்டு வைத்துக் கொள்கிறீர்களே!!!
பொறுத்தது போதும் என்று நான் என் நெற்றிக்கண்ணை திறந்தாலென்ன?"

பின்னாளில் உங்கள் சந்ததிகள் அழியப் போவதைக் காண நீங்கள் இருக்க மாட்டீர்கள்! ஆகவே இப்போதே...இன்றே...இக்கணமே யாம் நெற்றிக்கண்ணைத் திறந்து, என்றோ ஒரு பாவமும் அறியாத வரும் தலை முறைகள் அழிவதைக் காட்டிலும், இக்கேட்டிற்கு காரணமான நீங்களே அழிந்து போகக் கடவீர்!!

இதை குற்றம் குற்றமே என்று யாரும் வாயைத்திறந்து சொல்ல முடியாது.

இன்றைய முதிய தலைமுறை: ஐயனே! ஆழியும் நீயே! ஊழியும் நீயே! அடியார்கள் விளைவு அறியாமல் செய்த இப்பெரும் பிழை பொறுத்து அருளுக!

வளர்ந்துவரும் தலைமுறை: ஓ! காட்! எங்கள் முன்னோர்கள் செய்த தவறை மன்னித்து இந்த பூமியில் நாங்கள் நல்வாழ்வு வாழ வரம் தர வேண்டும்!

தத்தித் தவழ்ந்து வரும் தலைமுறை: நா...நா..நா...சாமீ..காப்பாத்து!

தாயின் கருவில் வளரும் தலைமுறை: தாயின் வயிற்றில் தன் தலையை இருபுறமும் அசைத்து முட்டி மோதி, "வேண்டாம்!" என்கிறது.

கடைசி இரு தலைமுறைகளின் செல்ல அபயக் குரலுக்கு செவி சாய்த்து இறைவன் தன்
நுதல் விழியை மெதுவாக மூடி அவர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

நேற்றைய(28/2/09)Times of India பத்திரிக்கையில் வெளியான இப்படத்தையும் தகவலையும் படித்தபின் என் மனதில் பொங்கியதுதான் இப்பதிவு!

படித்துவிட்டு யாரும் நெற்றிக்கண்ணை...அல்ல...அல்ல...நுதல்விழியை திறந்து என்னைப் பார்க்க வேண்டாம்!!!!

9 comments:

said...
This comment has been removed by the author.
said...

நானானி எல்லோரும் பொசுங்கிப் போய் நிற்கிறோம் சீக்கிரமே பொற்றாமரைக் குளத்திலிருந்து நாங்கள் முழுசாய் வெளி வர அந்த பரமேசனிடம் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்களேன்.

said...

பாவம் அந்த தவழும் குழந்தைகளின் வேண்டுதளுக்காகவும், அந்த கரு குழந்தக்காகவேணும் நாம திருந்தியே ஆக வேண்டும்!

said...

பின்னாளில் உங்கள் சந்ததிகள் அழியப் போவதைக் காண நீங்கள் இருக்க மாட்டீர்கள்! ஆகவே இப்போதே...இன்றே...இக்கணமே யாம் நெற்றிக்கண்ணைத் திறந்து, என்றோ ஒரு பாவமும் அறியாத வரும் தலை முறைகள் அழிவதைக் காட்டிலும், இக்கேட்டிற்கு காரணமான நீங்களே அழிந்து போகக் கடவீர்!!
//
நல்லபதிவு. கடவுள் நேரில் வந்தால் இந்த கேள்விகளை அவர் கேட்க தான் செய்வார்.

said...

இப்பதிவில் கூட ஏ.பி.நாகராஜனின் பாதிப்பு தெரியுமே! தமிழ்பிரியன்!

said...

பரமந்தான் நெற்றிக்கண்ணைத் திறக்கவேயில்லையே, கோமா?

பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து கிடக்கும் நீங்கள் எல்லோரும் நலமுடன் எழுந்து வருக!!!!!!
இல்லை...இந்த வெயிலுக்கு இதமாக இருக்கிறதென்றால் அங்கேயே வீழ்ந்து கிடக்க!!!!

said...

சரியாகச் சொன்னீர்கள், அபி அப்பா!

பாவமறியா அச்சந்ததியர் நலமுடன் வாழ நாம் இப்போதைய தவறுகளை சரிசெய்து பரிசுத்தமான சுற்றுப்புறத்தை அவர்களுக்கு வழங்கி நலமுடன் வாழ வழி செய்வோம்!!!!

said...

கேட்பதா? இங்கு நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துப் பொங்கி கேள்விக்கே இடமில்லாமல் மூன்றாவது கண்ணைத் திறந்து பொசுக்கிவிடுவார். பிறகு வருங்கால சந்ததிகளுக்காக புத்தம் புது உலகத்தைப் படைப்பார்.
சரிதானே...கடையம் ஆனந்த்?

கடையம் பக்கத்திலிருக்கும் ஆழ்வார்குறிச்சி என் அம்மா பிறந்த ஊர்!!!

said...

வருங்கால சந்ததிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக வேண்டியதின் அவசியத்தைக் கூறியிருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் இதை உணர்ந்திடவும் அந்த பரமனே அருள் பாலிக்க வேண்டிக் கொள்வோம்.