Tuesday, February 3, 2009

கணநேர க்ளிக்! பிப். பிட். இரண்டாவது

டாட்டா..!!பைபை..!!சீரியோ..!!போய்ச் சேர்ந்து தந்தியடி...இல்லையில்லை...போன் பண்ணு, ஈ-மெயில் பண்ணு...அட! ஒரு SMS -ஆவது பண்ணு!!!!!!!!
நீரில் ஒரு குளியல், ஒரு விளையாட்டு, ஒரு சுகம்!!!

பாய்ந்து வருகுது ஜல்லிக்கட்டு காளை...பயந்து ஓடுது சின்னஞ்சிறு கன்னுக்குட்டி!!!

"வாழ்க்கை ஒரு வட்டம்டா! அதில் மேலிருப்பவன் கீழே வருவான்! கீழிருப்பவன் மேலே போவான்!!!"

ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு...ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு...ஊதும் ஓடும் ரயில்...உங்க ஊரில் நிக்காது மெயில்!!!!

சினிமா மோகம் தீர்ந்துவிடும் இம்மாதிரி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்தால்....!!

18 comments:

said...

டாட்டா பைபையும் ஜிகுஜிகுவும்
ஜிகுஜிகு எனப் போட்டிக்குப் புறப்படலாம்!
அப்போ எதைக் கொடுக்கலாம்?
சிந்தனை செய் மனமே...

said...

இதில் டாட்டா படமும் ஜிகுஜிகு ரயிலும் அருமை.
எப்படியெல்லாம் கேட்பார்கள் என்று தெரிந்து முன்பே படமெடுத்து வைத்திருக்கிறீர்களே. இந்த மாதம் உங்களுக்குத்தான் பரிசு. வாழ்த்துக்கள்.
'உங்கள் ஊரில் நிற்காது ரயில்'... நல்ல பாட்டு எந்த படம்? நினைவில்லை. சொல்லுங்களேன்.
சகாதேவன்

said...

படுத்திருந்த யானை பட்டத்து யானை போல் பவனி வருகிறது.பராக் பராக்...
வாழ்த்துக்கள்

இந்த செட்டில் என் மனம் கவர்ந்த படம் ஜல்லிக்கட்டு கன்னுக் குட்டி

said...

ஒரே குழப்பாமாயிருக்கு ராமலக்ஷ்மி! அதான் உங்களையெல்லாம் கேப்போமுணுதான்....

said...

யாருக்குத்தெரியும்? இப்படியெல்லாம் வருமுணு? ஏதோ அப்பப்ப கிளிக்கியது. இதில் வேடிக்கை என்னான்னா...ஷேக்காயிடுச்சுன்னு விட்டதெல்லாம் இப்ப மேடையேறி கொக்கரிக்குதுங்க. இதுதான் 'வாழ்க்கை ஒரு வட்டமுன்னு' சொன்னாங்க

said...

குவிஸ் மாஸ்டருக்கே தெரியலையா?
அடடா...! அது ஜெமினியின் 'வள்ளியின் செல்வன்' படத்தில்வரும் பாடல். குழந்தைகளாக சேர்ந்து ரயில் விளையாட்டு விளையாடுவார்களே? இதன் இந்திப்பதிப்பில் அசோக்குமார் நடித்திருப்பார். ஆனால் தமிழில்தான் அது சூப்பர்!!!

said...

கோமா! அப்ப நாந்தான் யானையா?
குழம்பிட்டிருந்தேன். துள்சி கேக்கணும் இதை...'இந்தப் பொல்லாத வயதிலும் புலியெனப் பாய்ந்துவிடுவார். அல்லது அவர் வீட்டில் கொண்டு போய் வச்சுக்குவார்.
பார்ப்போம் யார் வருவார் என்று. இன்னும் நாளிருக்கே!!

said...

இரண்டாவது கலெக்‌ஷனும் அருமை!
ஜிகு ஜிகு ரயில் படம் தான் செம செம செம!! கன்னுக்குட்டி படமும் நல்லாருக்கு!:-) ஆல் தி பெஸ்ட்!

said...

டிரெய்ன் ட்ராக்'ஐ போட்டிக்கு அனுப்பி வைங்க..... சான்ஸே இல்லை... Awesome... :)

Nice perspective pic......

said...

ஆகா ஆகா - நானானி - எதச் சொல்லறது .....

ம்ம் - ஜல்லிக்கட்டு காளை - முதல்
ம்ம் - சிகு சிகு சிகு சிகு சிகு - இரண்டாவது
ம்ம் - வாழ்க்கை வட்டம் - எனக்குப் பிடிச்சிருக்கு

ஒண்ணே ஒண்ணு தான் அனுப்பனுமாம் - ம்ம்ம்ம்ம்ம்

வெற்றி பெற நல்வாழ்த்துகள்

said...

உங்கள் தேர்வுக்கு நன்றி! சந்தனமுல்லை!!

said...

நீங்கள் தரும் ஊக்கம் உற்சாகமளிக்கிறது ராம்!!!

said...

சந்தோஷம்! சீனா! முதலாவதையும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்!!

said...

ஜிகுஜிகுவ பிடிஐ போட்டிக்கு அனுப்புங்களேன்.

said...

முதல் படம் சூப்பர்... வெற்றி பெற வாழுத்துக்கள்...

said...

//டாட்டா பைபையும் ஜிகுஜிகுவும்
ஜிகுஜிகு எனப் போட்டிக்குப் புறப்படலாம்!//

அதே ! அதே !!

படங்களோடு பயணித்து வருகையில்
என் எண்ணமும் இதுவே !!!!!

said...

tata byebye, asaththal!!!!

train shot is cool too, but tata bye bye has an 'emotional' power blended in it ;)

Anonymous said...

அருமையான படங்கள் வாழ்த்துக்கள்
உங்களது சில சமையல் குறிப்புகளை மீள் பிரசுரிக்க உரிமை கிடைக்குமா?
தொடர்புகளுக்கு admin@shabtham.com