Tuesday, August 19, 2008

தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அது
தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?

நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.
என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.
ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று. அதுதான்...தக்காளியோதரை!!

நன்கு பழுத்த தக்காளி....நாட்டுத்தக்காளியும்(புளிப்புக்கு) பெங்களூர் தக்காளியுமாக கால் கிலோ.வேகவைத்து தோலுறித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்

2-ஸ்பூன் விதை தனியா
1 1/2 ஸ்பூன் வெந்தயம் இரண்டும் வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்

காரத்துக்கேற்ப 8 அல்லது 10 காய்ந்த மிளகாய்...2 அல்லது 3-ஆக ஒடித்து வைத்துக்கொள்ளவும்

தாளிக்க - நல்லெண்ணை, வெந்தயம், கடுகு, உளுத்தப்பருப்பு, பெருங்காயம், ஜீரகம், பொட்டுக்கடலை,வேர்கடலை
கறிவேப்பிலை,உப்பு, வெல்லம்

அடுப்பில் கடாய் வைத்து அரைக்கப் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், அரை ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் ஜீகரம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, வேர்கடலை, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். நன்கு வறு பட்டதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மல்லி வெந்தயப் பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.இடையிடையே நல்லெண்ணை விட்டுக்கொள்ளவும். நன்கு கொதித்து நீர் வற்றி எண்ணை வெளிவிடும்போது சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். தக்காளியோதரை மிக்ஸ் தயார்!!!!

பொலபொலவென வேகவைத்து ஆறவைத்த சாதத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மிக்ஸை சேர்த்து கிளறி அதோடு மறுபடியும் கடுகு, உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை வேர்கடலை, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி கலந்தபொடியாக அரிந்த பச்சைக் கொத்தமல்லி தூவினால் சுவையான மணமான தக்காளியோதரை தயார்!!

நல்லாருந்துதுங்க.....நிஜம்மா...சும்மா ஒரே ரூட்டில் போகிறோமே என்று, 'நாட்டாமை!!
ரூட்ட மாத்து!' ன்னு சொன்னா மாதிரி நான் மாத்தின ரூட்டில் கிடைத்ததுதான் இந்த
தக்காளியோதரை!!

25 comments:

said...

ரொம்ப நல்லாருக்கே இந்தப்புளியோதரை!! புளியைவிட தக்காளிக்கு ருசி இன்னமும் அதிகம்.நன்றிங்க இந்த சமையல்குறிப்புக்கு

said...

today thakkaazhiyootharai will be added in my kitchens menu card .[cardil mattumthaanaa? endru kEttuvitAthIrkaL...sattiyilum varum]

said...

சாப்பாடுன்னா நான் 'டான்'ன்னு ஆஜராயிருவேன்.

இங்கே டின் டொமட்டோ ஏற்கெனவே தோலுரிச்சு வருது. செஞ்சுருவோம்:-)

(வாழைப்பழம்தான் இன்னும் தோலோட வருதுப்பா. அதைவேற உரிச்சுத் திங்க வேண்டி இருக்கு)

said...

நாட்டாமை நானானியம்மா மாத்தின ரூட்டில நல்ல குறிப்பு வந்து குதித்திருக்கிறது அவங்க ஐடியா கோடவுனிலிருந்து...
"தக்காளியோதரை" பெயரும் பொருத்தமா இருக்கு...

செய்து பார்த்திடறோம். நன்றி நானானி!

said...

ஏனம்மா! தக்காளி சாதம் செய்ய சொல்லிக் குடுத்துட்டு வேற பெயர் வைக்கிறீங்களா?.... நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுங்ங்ங்கககககககககக

said...

ஓக்கே..செஞ்சிடறேன்...இல்ல அம்மாகிட்ட பிரிண்டவுட்கொடுத்து செய்ய சொல்லிடறேன்..:-)

said...

நம்ம நாட்டாமை நானானியின் தீர்ப்பு நல்ல தீர்ப்பு :)

said...

சீக்கிரம் செய்யக்கூடிய உணவுவகைகளின் குறிப்புகள் தான் எனக்குத் தேவை. அந்த வகையில் நல்ல சமையல் குறிப்பு :)

said...

செய்து பாத்து 'ஷை' இல்லாம சொல்லுங்க, ஷைலஜா!
நான் செய்து பாத்துட்டுத்தான் சொல்றேன். உடனடி வருகைக்கு வந்தனம்!!!

said...

செய்து பாத்து 'ஷை' இல்லாம சொல்லுங்க, ஷைலஜா!
நான் செய்து பாத்துட்டுத்தான் சொல்றேன். உடனடி வருகைக்கு வந்தனம்!!!

said...

நான் என்ன கேட்பேன்னு தெரிஞ்சுருக்கே? பரவாயில்லை.

said...

அதே டின்னிலே தக்காளியோதரை மிக்ஸும் செஞ்சு அனுப்பிட்டாப் போச்சு. டின்னை ஒடச்சிருவீங்கல்ல?

'பட்டன தட்டிவிட்டா ரெண்டு வாழப்பழம் தோலுரித்து, துள்சி வாயில ஊட்டிவிட ஒரு மிசினு' கண்டுபிடிச்சிருவோம். அதுவரை...வாழப்பழத்தையும் ஆரஞ்சுப்பழத்தையும் தோலை உ...றிச்சுத்தான் சாப்பிடணும்!!!!

said...

எனக்கும் ஒரு பார்சல்....ராமலஷ்மி!!!
சொந்தக்காரங்க பங்களூரு வராங்க. கொடுத்தனுப்பீருங்க. சேரியா?

said...

இந்த நாட்டாமை தீர்ப்பு சொன்னா...சொன்னதுதான்!!தமிழ்பிரியன்!!
நீங்க சொன்னது வெறும் தக்காளிசாதம்,
வெங்காயம் தக்காளி வதக்கி ஜிஜி பேஸ்ட் போட்டு சாதத்தை போட்டு கிளறி செய்வது. ஆனால் எந்து, புளியோதரை மிக்ஸ் மாதிரி தக்காளியோதரை மிக்ஸ். 'மொத்தமா வேறு மாதிரி'.

said...

சந்தனமுல்லை! ரெண்டாவது சொன்னது ஈஸி வழி!!ஒங்க வழியே தனி வழியா?

said...

அப்படி போடுங்க அறுவாள!
கயல்விழி முத்துலெட்சுமி!!!

said...

உங்களுக்கு உபயோகமாயிருப்பது பற்றி சந்தோஷம்...பொன்வண்டு!!
சுலபமாய் செய்வது இன்னும் தரலாம்!!

Anonymous said...

டொமடோதரை
பேர் சின்னதா, நல்லா இருக்கா?
தாமரை

said...

டொமடோதரை!!! தாமரை வெச்ச பேரு...ஊரையெல்லாம் கூட்டி சொல்லிடுவோம்! அது சரி...செஞ்சு பாப்பீங்கதானே?

Anonymous said...

today thakkaliyodharai samaiyal simply very super & super keep it up your samaiyal ideas

tamil said...

hai very supe in thakkaliyodharai

tamil said...

hai very supe in thakkaliyodharai

tamil said...

hai very super this samaiyal

said...

hi,i saw this recipe. i ll try this in my home. thank u

said...

hi,i saw this recipe. i ll try this in my home. thank u