Sunday, August 3, 2008

எனக்குப் பிடித்த பாடல்கள் வரிசையில் முதலாவது

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியிலோடி ஆடுவீரே
ஜில்லெனவே வந்துலாவும் தென்றல் தன்னை பாடுவீரே

இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
பூங்காவாம் உந்தன் மனம்
உள்ளன்பே தெய்வ மனம்
இவ்வுண்மை நீ மறவேல்

பூலோகம் தனில் நீயே சொர்க்கபோகம் அடைவாயே
புண்ணியத்தில் மானிடப் பிறப்படைந்ததெண்ணுவையே

நெறி தவறி நீ வீழ்ந்தால்
பாழடைந்ததுன் வாழ்நாள்
கை தவறிய கண்ணாடி
தூள் போலாம்
பயனிலை வாடி

கொடிய பாதை நடவாதே
மனவமைதி கிடையாதே
இருள் சூழ்ந்திடும் வாழ்வு
அன்பிலார்க்கு இன்பமில்லை
இவ்வுண்மை நீ மறவேல்

'என் வீடு' ! மறைந்த பழம் பெரும் நடிகர் வி.நாகைய்யா தயாரித்து இசையமைத்த படத்தில்
பாபநாசம் சிவன் எழுதிய இப்பாடல், 'யாதோன் கி பாராத்' மாதிரி அந்தக் காலத்திலேயே பிரிந்த குடும்பம் ஒன்று சேர உதவும் ஒரு குடும்பப்பாட்டு. சின்னச்சின்ன எளிமையான வார்த்தைகளில் பாடல் கூறும் அறிவுரைகள் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது.

பட ஆரம்பத்தில் தந்தை தன் மூன்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் போது மூன்றாவது சிறுவன் நழுவும் தன் ட்ரவுசர் ஸ்ட்ராப்பை தூக்கி தூக்கி விட்டுக்கொண்டே
பாடும் காட்சி ஒரு அருமையான கவிதை!!

க்ளைமாக்ஸில் பிரிந்தவர் கூடும் காட்சியில் இதே பாடலை எம்.எல்.வசந்தகுமாரியும்
டி.ஏ.மோதியும் அருமையாகப் பாடியிருப்பார்கள்.

8 comments:

said...

பழம்பாடல்களின் இனிமையை ரசிப்பது நமது தலைமுறையினர்தான் நானானி.

வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

said...

அந்த நாளிலேயே குடும்பப் பாட்டு உண்டா?
சமீபத்தில் படம் பார்த்தீர்களா, இல்லை பாட்டுப்புத்தகம் வைத்திருக்கிறீர்களா? என்ன ஞாபகம்!
சகாதேவன்

said...

அது எனக்கும் பிடிக்கும் சீனா!
நமதி தலைமுறைதான்...பழசையும் ரசிக்கும்....இப்போதைய, 'கத்தழ கண்ணால..'யையும் ரசிக்கும். சரிதானே?

said...

சகா!!!!!!
அடுத்த கொசுவத்தி....பத்தவெச்சிட்டீங்களே!
என்னோட 'பாட்டுப்புத்தகம் கலெக்க்ஷன்!!!' தனிப்பதிவாப் போடலாமே!!!
மறந்தாலல்லவோ ஞாபகம் வர.

said...

//நெறி தவறி நீ வீழ்ந்தால்
பாழடைந்ததுன் வாழ்நாள்
கை தவறிய கண்ணாடி
தூள் போலாம்
பயனிலை வாடி

கொடிய பாதை நடவாதே
மனவமைதி கிடையாதே
இருள் சூழ்ந்திடும் வாழ்வு//

அருமையான அறிவுரை தரும் கவிஞரின் வரிகள்

old is gold

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

உங்கள் தலைமுறையினர் ரசித்த அருமையான பாடல்களை அடுத்த தலைமுறையினர் அறிய எடுத்துத் தருகிறீர்கள் மரகதக் கேசரியை தட்டில் வைத்து பரிமாறிய மாதிரி.

விஜய், நீங்கள் எடுத்துக் காட்டிய வரிகள் எனக்கும் பிடித்திருந்தன.

said...

கோவை விஜய்!
பாபநாசம் சிவன் அவர்கள் திரைப்படங்களுக்குத் தந்த பாடல்கள் எல்லாமே அரு..அரு..அருமையானவை!!

said...

ராமலஷ்மி! இவையெல்லாம் இன்றும் மறக்க முடியாத....பாட்டு புத்தகம் தேவையில்லாத பாடல்கள்.