Thursday, July 3, 2008

யானை தோசை...பூனை தோசை!!படங்கள்!!

ராமலஷ்மி கேட்டிருந்தார்....உங்க யானை தோசை, பூனை தோசைகளையும் படமெடுத்துப் போட்டிருக்கலாமே! என்று. நேயர் விருப்பம் போல் பதிவர் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படும் வாரம் போலும்!

இது யானை தோசை ஊத்த சொல்லோ சுட்டது....கேமராவில்தான்...தோசைக்கல்லில் அல்ல.


இது அதையே திருப்பிப் போட சொல்லோ சுட்டது. மறுபுறம் திரும்பி எப்படி மொறைக்குது!!

பூனை தோசை, மாவை கல்லில் ஊத்தியவுடன் சுட்டது

அதே பூனை நம்மைத் திரும்பிப் பாக்க சொல்லோ சுட்டது.

தோசைகள் ஊத்தி முடிந்ததும்....மகள் கொடுத்த அசத்தல் பின்னோட்டம்!!
"அம்மா! உனக்கு டச் விட்டுப்போச்சு! முன்னே ஊத்தியது எல்லாம் நிஜம்மா யானை மாதிரி, பூனை மாதிரியே இருக்கும்."

ராமலஷ்மி நீங்கதான் சொல்லோணும்.

அது உண்மைதான் என்று எனக்கும் தோன்றியது. உள்ளதை ஒத்துக்க வேண்டியதுதானே!

14 comments:

said...

இருந்தாலும் ரொம்ப தன்னடக்கம் தான் உங்க குடும்பதுக்கு.. :))

said...

முதலில் கல்லில் மாவை ஊற்றி வேண்டிய டிசைனில் படமாக்கிக் கொண்டு, பிறகு தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றினீர்கள் - இல்லையா சகோதரி?

said...

நானானி, இப்பவும் யானையும் பூனையும் அதே போலத்தான் வந்திருக்கின்றன. சூப்பரப்போ.
சென்னை வந்து சாப்பிட்டுட்டுத் திருப்பிப் போறேன்:0)

பிள்ளைங்களுக்குச் சின்ன வயசில எல்லாமே அற்புதம். வளந்த பின்னே
உலகமே மாறித் தெரியும் இல்லையா.

said...

Naanani
I think this Yaanai dosai poonai dosai has a Tirunelveli origin (after all adu dosaland illaya?) becos' I know a lady from Toothukudi who used to do it for her children. I picked it up & ippo yen pethi varaikkum suttu kudukkaren- car bus dosai yellam kooda undu. :)
Shobha

said...

ஆகா, இந்தப் பதிவரின் பசி(விருப்பத்து)க்காக தாயுள்ளத்துடன் சிரமமேற்கொண்டு தோசைகளை அழகாக ஊற்றிக் கொடுத்திருக்கிறீர்கள். மிக மிக நன்றி!வல்லிம்மா சொல்லியிருக்கிற மாதிரி இரண்டும் ஆனையாகவும் பூனையாகவும்தான் தெரிகின்றன. மகளிடம் சொல்லவும்.


SP.VR. SUBBIAH said...
//முதலில் கல்லில் மாவை ஊற்றி வேண்டிய டிசைனில் படமாக்கிக் கொண்டு, பிறகு தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றினீர்கள் - இல்லையா சகோதரி?//

அய்யா, அப்படிச் செய்தால் தோசை திருப்பிப் போட வராது. கல் சூடாக இருக்கும் போதுதான் ஊற்றுவார்கள். நானானி வெகு கவனமாக மாவை அந்த வடிவத்திற்கு சூடான கல்லிலேயேதான் வரைந்திருக்கிறார்கள்!

Anonymous said...

super. enga veetil mickey mouse poduvadhundu ini yaana poonayum sethudalam

yaanai looks really good
aathirai

said...

கயல்விழி!
அப்ப நான் அலட்டிக்கலையா?
நான் அப்படியல்லவா நினைத்தேன்?

said...

இல்லை! வாத்தியாரய்யா!
சூடான கல்லில் வார்த்தால்தான் டிசைன்
சொன்னபடி வரும். வாத்தியாரின்
சந்தேகத்தை தீர்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன்

said...

ஏதோ உங்களுக்கு அடையாளம் தெரியும்படி வந்திருக்கிறது. கட்டாயம் வாருங்கள். வருமுன் என்ன தோசைகள்
என்று ஆர்டர் கொடுத்துவிடுங்கள். சேரியாப்பா?

கடைசியில் நீங்க சொன்னது ரொம்ப சரி. இப்போது நாம் என்ன செய்தாலும்
பிரமாதமாகத் தெரிவதில்லை.

said...

ஷோபா!
யாரந்த தூத்துக்குடி பெண்மணி?
கார்தோசை, பஸ்தோசை? சூப்பர்!
கற்பனைக்கு எல்லையேயில்லைதானே?
ஷோபா!!

said...

தோசை ஓகேவா? ராமலஷ்மி?

இதனால் எல்லோருக்கும் அறிவிப்பதென்னவென்றால்.....
இன்று முதல் என் பதிவுகளுக்கு வரும்
பின்னோட்டங்களுக்கு என் சார்பாக பதில் பின்னோட்டங்கள் போட பதிவர் ராமலஷ்மியை அதிகார பூர்வமாக
நியமிக்கிறேன். எனக்கொரு சிரமம் குறையுமல்லவா? ஹீ..ஹீ...!!

said...

அனானி!!!
மிக்கியா? ஆஹா!!இனிமேல் டொனால்ட் டக், டாம், செர்ரி, வினிதபு
எல்லோரும் சூடான தோசைக்கல் மேலே குத்தாட்டம் போடுவார்கள்
போலிருக்கே!!! அபாரம்!

said...

சுப்பையா சாருக்கு தோசை சாப்பிட மட்டும் தான் தெரியும் சுடத்தெரியாது ன்னு நிரூபிக்கிறார்.. :))

said...

சுப்பையா சாருக்கு தெரிந்த வேறு பல விஷயங்கள் நமக்குத் தெரியாதே! கயல்விழி?