Thursday, September 13, 2007

லம்போதர லகுமிகரா.சரணம்...சரணம்.ஓம் ஓம் சக்தி விநாயகா ஓங்காரமூர்த்தமே ஆங்காரம் தவிர்ப்பாய் ஆராதாரம் அமர்ந்தாய் மூலாதாரம் முகிழ்த்தாய் முக்கண் தேவே மூலப்பரம்பொருளே பிரணவத் திருவுருவே
பிறைசூடிப்பிள்ளையே பராசக்தி மைந்தனே ஆதிசக்திஅருமைந்தா முக்தி விநாயகா சித்திவிநாயகா புத்திவிநாயகா பத்திவிநாயகா பாறைவிநாயகா வல்லபைவிநாயகா வல்லமைவிநாயகா வினையறுக்கும்விநாயகா வினையழிக்கும்விநாயகா

வினைதீர்க்கும்விநாயகா மதுரவிநாயகா மதுரைவிநாயகா ஆலடிப்பிள்ளையாரே ஆலங்குளம் அமர்ந்தவனே பொல்லாப்பிள்ளையாரே பிணிதீர்க்கும் அரசே உச்சிப்பிள்ளையாரே ஊர்த்துவகணபதியே நம்புவார்நாயகனே நடனகணபதியே பூதகணத்தானே பொன்னொளிவண்ணனே எருக்கம்பூ மாலையனே அருகம்புல் உவந்தவனே சுழிமுனைஅரசே சுடர்விழிவேந்தே முருகனின்மூத்தவனே முத்தமிழ்முதல்வா
ஒளவைக்கருளியவா


ஆனந்தம்தருவாய் நீதிதேவே ஆதிமூலமே இருவினைதவிர்ப்பாய் இருள்வினை அறுப்பாய்
ஊழ்வினை ஒழிப்பாய் ஓங்காரம்புணர்வாய் ஐங்கரவிநாயகா ஐயங்கள்தீர்ப்பாய் சங்கத்துத்தமிழே சக்தியிந்துருவருளே அங்குசபாசத்தாய் அநுபவமளிப்பாய் பாரதம்வரைந்தாய் பன்மலர் உவந்தாய் பாமலர்வேட்பாய் பேழைநல்வயிறா பெருச்சாளிவாகனா வேழமுகத்தாய் வேட்கைதணிப்பாய்


வேள்விமுதலே வேதாந்தசுடரே வலம்புரிவிநாயகா சோதிவிநாயகா சுந்தரவிநாயகா மந்திரவிநாயகா தந்திரவிநாயகா அமிழ்தகணேசா அருந்தமிழ்நாயகா பாசமறுப்பாய் பாவப்பிணிஅழிப்பாய் பலனெல்லாந்தருவாய் ஐந்தொழில் உடையாய் ஆன்மகணபதியே மூலஎழுத்தானாய் முழுமுதற்பொருளானாய் ஆணவம் அழிப்பாய் அங்சலென்றணைப்பாய்
அகத்தியவிநாயகா பரிபூரணமூர்த்தியே

பண்பொலாந்தருவாய் பரந்தாமன்மருகா ஆதிவிநாயகா அச்சிறுத்தவிநாயகா அடைக்கலவிநாயகா வேள்விவிநாயகா ஆன்மப்பொருளே முக்குறுணிவிநாயகா முக்கனிவிநாயகா கயமுகவிநாயகா செங்கழுநீர்விநாயகா மருவூர்விநாயகா சிறைமீட்டவிநாயகா சிந்தூரவிநாயகா செந்தூரவிநாயகா வித்தைக்குவந்தவனே விளையாட்டுநாயகனே அத்திமுகத்தவனே அம்பிகைபாலனே அண்டினோர்துயர்களைவாய்

சத்தே சித்தே வித்தேவிளைவே புத்திமுதலே பக்தர்கொழுந்தே சித்தர் உறவே மாவடிதவத்தாய் கமலவிநாயகனே கருணை அருள்வாய்

போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி கூட்டு வழிபாட்டுப் பாடல்கள் தொகுப்பில் விநாயகர்
108 போற்றி மந்திரம்.

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்
வெற்றி முகத்துத் திருவேலவனைத் தொழ வீரம் மிகுத்து வரும்
வெள்ளிக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே
வெள்ளைத் தாமரை வீற்றவளை தொழ வித்தை மிகுத்து வரும்

இந்தப் பிள்ளை யாரையும் அள்ளிக் கொஞ்சச் சொல்லுமல்லவா....?


விநாயகர் சதுர்த்தி நன்நாளில் எளிமையான அருகம்புல்லும் எருக்கம்பூவும் இருகரங்களால்
சமர்ப்பித்து ஐந்துகரத்தனிடம் எல்லா நலங்களையும் வேண்டி வண்ங்குவோம்.

14 comments:

Anonymous said...

vanna vinayagar vandhaar,ennamellaam niraindhaar ,.aingaranai vananguvom,avan arul petru agamagilvom.
gomathinatarajan

Anonymous said...

illam thedi vandhaar,
ennamellaam niraindhaar
bhakthiyudan poojippom
avan thiru uruvai,
sindhaiyil niruththi
sidhithanai yaasippom.
aingaran tharuvaan arulathanai,
niththam paaduvom avan pugalai.
bhakthiyudan gomathi natarajan

Ramalakshmi said...

தீர்க்கமாய் அருள் பாலிக்கும் விநாயகர்கள், திருத்தமாய் வரையப் பட்ட புதுமைச் சித்திர (modern art) விநாயகர்கள், மனதை அள்ளும் பால விநாயகர் என தேர்ந்தெடுத்து அளித்துள்ள அத்தனை படங்களுக்கும் முதல் நன்றி! 108 முறை விநாயகரை வலம் வந்த உணர்வை-நிறைவை- ஏற்படுத்திய பக்தி பரவசப் பாடலுக்கு அடுத்த நன்றி!

said...

ஹைய்யோ............ படங்கள் ஒவ்வொண்ணும் அருமை.

புள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து(க்)கள்.

said...

Ella fotovum super o super,,,,
slogam sonnathiku nandri,,,

said...

வாங்க, கோமதி!எல்லோர் இல்லங்களிலும் எண்ணங்களிலும் நிறையவேண்டுமென்பதே என் பிரார்த்தனை.நன்றி!

said...

ராமலஷ்மி!அருமையாக சொல்லிவிட்டீர்கள்!

said...

ராமலஷ்மி! அருமையாக சொல்லிவிட்டீர்கள்!எல்லா நலன்களும் அருள விநாயகரைப் பிரார்த்திக்கிறேன்.

said...

நன்றி! துள்சிம்மா!

said...

திவ்யா!
'தயா'வு கூர்ந்து என் ப்ளாக்குக்கு வருகை தந்ததற்கு நன்றி!

said...

//விநாயகர் சதுர்த்தி நன்நாளில் எளிமையான அருகம்புல்லும் எருக்கம்பூவும் இருகரங்களால்
சமர்ப்பித்து ஐந்துகரத்தனிடம் எல்லா நலங்களையும் வேண்டி வண்ங்குவோம்.//

நல்லதொரு பதிவு. ஸ்லோகங்களும் படங்களூம் அருமை. பிள்ளையார்தான் கட்வுள்களிலேயே சாது. எப்பட் வேண்டுமானாலும் அவரை வணங்கலாம். அர்ச்சிக்க்லாம். எளிய முறையில் படைக்கலாம். புடிச்சு வைச்சா புள்ளேயாரு. குழந்தை முதல் பெரியவர் வரை வணங்கும் விநாயகரை பற்றிய பதிவு பாராட்டத்தக்கது

said...

சீனா!
'புடிச்சு வெச்சா புள்ளையாரு'
சரியாகச்சொன்னீர்கள். தன் பக்தர்களுக்கு
சிரமம் கொடுக்காத எளிமையான தெய்வம். ஆனால் தோப்புக்கரணம் மட்டும் போடவைப்பார்.

Anonymous said...

அருமையான ஆனைமுகத்தார்களின் அழகுப் படங்களுக்கு நன்றி.

//தன் பக்தர்களுக்கு
சிரமம் கொடுக்காத எளிமையான தெய்வம். ஆனால் தோப்புக்கரணம் மட்டும் போடவைப்பார்.//

அதுவும்கூட நமது உடல், மன சிரமம் போக்கவன்றோ!..

said...

நன்றே சொன்னீர் அனானி!