Friday, June 29, 2007

அவசர...அவசர...அவசர சமையல் குறிப்புகள்

இந்த அவசர யுகத்தில் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய

இரண்டு குறிப்புகள் இங்கே தர ஆஆஆசைப்படுகிறேன். சீக்கிரம்...வாங்க.

சமையலறையை புதிதாக எட்டிப்பார்ப்பவர்களுக்கும் கடோத்கஜன்

போன்று சுயசமையல் செய்பவர்களுக்கும் ஏற்றது.

முட்டை குழம்பு: நான்கு பேருக்கு. நாலு
பல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கவும். நாலைந்து தக்காளி, அதையும்
பொடியாக நறுக்கவும் அல்லது அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்
இஞ்சி பூண்டு நசுக்கிக் கொள்ளவும். நாலு பச்சை மிளகாய் சாப்பிக்கொள்ளவும். கடாய் அல்லது குழம்புப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி தேவையான அளவு
எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,
இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். அதோடு கையில் கிடைத்த பொடிகள் எல்லாம் போடவும்.....பயப்படவேண்டாம்,,, மிளகாய்தூள் காரத்துக்கு ஏற்ப.
மஞ்சள்தூள் ஒரு கரண்டி, தனியாதூள் ஐந்து தே.கரண்டி, ஜீராத்தூள் ஒரு
தே.கரண்டி, விரும்பினால் கரம் மசாலாத்தூள் ஒரு தே.கரண்டி, தேவையயன
உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் மூன்று கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும். வேகவைத்த காரட், காலிப்பூ, மஷ்ரூம் இவையும் சேர்க்கலாம். இறுதியாக நான்கு முட்டைகளையும் ஒன்றன்பின்
ஒன்றாக மெதுவாக உடைத்து நான்கு பக்கங்களிலும் ஊற்றவும். கலக்காமல்
அப்படியே வேகவிடவும். கொத்தமல்லி, புதினா தூவி ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து பாத்திரத்தை மூடி அடுப்பை அணைக்கவும். முட்டைகள் உடையாமல் கலக்கி பரிமாறவும்.
குழப்பு நீர்த்து இருந்தால் பொட்டுக்கடலை மாவு கரைத்து ஊற்றலாம்.
தேங்காய் பாலும் விடலாம். சூடான சாதத்தோடு சந்தோஷமாக சேரும்.
என்ன இப்படி மூச்சு விடாமல், SPB மாதிரி சொல்லிவிடீகள்? என்கிறீர்களா?
பின்ன அவசர சமையல் குறிப்பு அல்வா?

8 comments:

said...

அவசர சமையல் குறிப்பு பார்க்க அவகாசம் இல்லையா?

said...

குறிப்பு நல்லா இருக்கு.

நாங்களும் குறிப்பு அனுப்பலாமா?

said...

தாரளமா..புதுகைத்தென்றல்!ஆனால் புயலாக..அதாவது சீக்கிரமாக அனுப்புங்கள்.

said...

பல்லாரி என்றால் என்ன?

said...

தூயா!
என்னோட சமையற்கட்டு வித்தியாசமாயிருக்கா?
பல்லாரின்னா...ஆந்திரமாநிலத்தில் உள்ள ஓர் ஊர். அங்கு விளையும்
வெங்காயத்துக்கு ஊர் பேரே வைத்துவிட்டார்கள். சின்னவெங்காயம் என்றால் சாம்பார்வெங்காயம், பல்லாரிவெங்காயம் என்றால் பெரியவெங்காயம். இப்ப மனசிலாயோ?

said...

தூயா!
சமையல் குறிப்பு எப்படி இருந்தது?
ஓகேயா?

said...

very nice

said...

very nice