Tuesday, March 6, 2007

ஊருக்கு ஊர்

திருநெல்வேலி அல்வா (கொடுப்பது அல்ல சாப்பிடுவது) என்பது உலகறிந்தது. ஏன் இருட்டுக்கடை அல்வா கூட வெளிச்சத்துக்கு
வந்து விட்டது. இனி அந்த ஊரைச்சுற்றியுள்ள ஊர்களின் பிரசித்தங்களை
பார்க்கலாமா? வேறொன்றுமில்லிங்க.....திங்கிற சமாச்சாரங்க...!
நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு தயாராகுங்க...சேரியா?
கோவில்பட்டி..தீப்பெட்டி தயாரிப்பு இங்கே.... அதை எப்படி திங்கிற்து
என்கிறீர்களா...? தீப்பெட்டியில்லாமல் எப்படிங்க அடுப்பு பற்றவைத்து
இவ்வளவு சமாச்சாரங்கள் செய்வதாம்! தீப்பெட்டிக்கு அடுத்து இங்கே
கடலைமிட்டாய் மிகவும் பிரபலம்..அதுவும் broken piceses என்று தனியாக
பாக்கெட் போட்டு விற்பார்கள், அள்ளிக்கொண்டுபோகும். இது தவிர
இனிப்பு சேவு என்று சாய்ந்த கோபுரம் போல் அடுக்கி வைத்திருப்பார்கள்.
வேண்டிய அளவு பிச்சுப்பிச்சு வாங்கிக்கொள்ளலாம்.
இங்கிருந்து சிறிது தூரத்தில் சாத்தூர்!! வெள்ளரிக்கா..பிஞ்சுவெள்ளரிக்கா
இத வாங்காம போனாக்கா நல்லாருக்கா...? கூடைகூடையாக கொண்டுவந்து
நீட்டுவார்கள். வேண்டாமென்று சொல்லாதீர்கள்.
அப்படிக்கா...வந்தாக்கா.. ரயிலில்தான், கடம்பூரில் போளி வாங்கிக்கிங்க.

"மார்கழித்திங்கள் மதிநிறைந்த..." ஓ! நீங்கள் திருவில்லிப்புத்தூர் வந்துவிட்டீர்களா? பால்கோவா வாங்க போதுவீர்! பாக்கெட் பாக்கெட்டாக
அள்ளுவீர்.
சங்கரன்கோவில்-கோமதி அம்மனை தரிசித்து விட்டு ......பார்சல்களில்
சுத்துப்பட்டு ஊர்களுக்கெல்லாம் செல்லும் மட்டன் பிரியாணி ஒரு பிடிபிடித்துவிட்டு....ஹும் மூச்சு வாங்குதா? விடமாட்டேனே!
அலைகடலோரத்தில் ஆட்சிசெய்யும் திருச்செந்தூர் செந்திலாண்டவனை
தரிசனம் செய்து இலை விபூதிப்பிரசாதம் (இப்போது இலையில் தருகிறார்களா? தெரியவில்லை)வாங்கிக்கொண்டு அப்படியே வந்தால் கோவில் வாசல்கடைகளில் புட்டுக்கருப்பட்டி பனையோலை
பாக்கெட்டுகளில் கிடைக்கும். வாயில்போட்டால் இனிக்கும்! அஹங் அப்டீஈஈஈஈஈஈஈஈஈங்களா!
'முத்துக்குளிக்க வாரியளா...?'அடடே! தூத்துக்குடி! அந்தக்காலத்தில் முத்துக்குளிக்க இருவராகப்போவார்களாம் அதுவும் மச்சானும் மச்சானுமாக.
ஒருவர் கயிற்றின் ஒரு முனையைப்பிடித்துக்கொண்டு படகிலிருக்க
மற்றவர் மறுமுனையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் மூழ்குவர்.
முத்துச்சிப்பிகளை சேகரித்தவுடன் கயிறை ஆட்டுவார் ,படகிலிருப்பவர்
கயிறை மேலே இழுப்பார். கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக.....முழ்கியிருப்பவர் தன் தங்கை புருஷனாக இருந்தால்,
அண்ணன் கவனமாகயிருப்பார் அல்லவா? உறவுகள் அப்போது அவ்வள்வு
இறுக்கமாக இருந்தன!!

சரி..சரி.. முத்துக்குளித்தது போதும். வெளியுலகுக்கு இன்னும் பிரபலமாகாத
ஒரு முத்தை நாம் குளிக்காமலே எடுப்போமா?
முத்துமுத்தாக அடுக்கிவைத்திருக்கும் தூத்துக்குடி 'மெக்ரூன்ஸ்!!'
விலைதான் கொஞ்சம் அதிகம் ஆனால் வாயில்போட்டால் நம் பர்ஸைப்போல் கரையும். எல்லாக்கடை மெக்ரூன்ஸ்ஸும் மெக்ரூன்ஸ் அல்ல தனலட்சுமி பேக்கரி மெக்ரூன்ஸ்ஸே மெக்ரூன்ஸ்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
அப்பாடா! எனக்கே முத்துக்குளித்து மூச்சு வாங்கிவிட்டது. என்ன...?எல்லோரும் தலைதெறிக்க
எங்கே ஓடுகிறீர்கள் ? கோவில்பட்டிக்கா?...சாத்தூருக்கா?..கடம்பூருக்கா?..
திருவில்லிப்புத்தூருக்கா?..சங்கரன்கோவிலுக்கா?..திருச்செந்தூருக்கா?..அல்லது
தூத்துக்குடிக்கா?.. அப்படியே எனக்கும் ஒரு பார்சல்!!!!!!!!!!!

27 comments:

Anonymous said...

puliangudikku train vitta akka antha oor famous paal guavavaiyum listley add pannikkalaam,laluvukku oru letter thattunga.anony-8

said...

அனானி!
புளியங்குடியில் சொந்தக்காரங்கோ
நெறைய பேர் இருக்கிறாங்கோ!!
இதுவரை பால்கோவா பத்தி வாயே
தொறக்கல. ஒரு வேளை அதுவே
வாயில் இருந்திருக்குமோ?
நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.எதுக்கும் லல்லுவுக்கும் தட்டிடுறேன்.ஓகேயா?

said...

தகவலுக்கு நன்றி! அனானி!

Ramalakshmi said...

ருசித்து ருசித்துச்
சாப்பிடுவார் உண்டு;
அந்த ருசியையே
ரசித்து ரசித்து
எழுதுவாரில் முதலிடம்
உமக்கே!

திருநெல்வேலி அல்வாவில்
பிள்ளையார் சுழியிட்டு-
கோவில்பட்டிக் கடலை மிட்டாய்,
கூடவே கொசுறாய் பிச்சுக்க
இனிப்புச் சேவு-
சாத்தூரு வெள்ளரிப் பிஞ்சு
கடம்பூரு போளியோ பஞ்சு
என்று நீள்கின்ற பட்டியலே
மணக்கே!!

வாசிக்க வாசிக்கத்
திகட்டகவே திகட்டாதபடி-
திருவில்லிப்புத்தூரு பால்கோவா
திருச்செந்தூரு புட்டுக் கருப்பட்டி
தூத்துக்குடி மெக்ரூன்சு- என
அத்தனை ஊரு
அருஞ்சுவைகளையும்
விலாவாரியாய் விவரித்து
நாவிலே நீர் ஊறச்
செய்து விட்டீர்
எமக்கே!!!
-Ramalakshmi

Anonymous said...

andhakkaalaththu uravu murai irukkamaayi irundhana endru angaalaayippathaip paarththaal indhak kaalaththil athu loosaaga irukkirathu endru naanaani solgiraar poolirukkuthey!
kannammaa

Anonymous said...

enga oor kaarangalai anaavasiyamaayi pottu kuduththiteynonnu visanamaa pochchu
nanany .from anony

said...

இந்தக்கால உறவுகள் சிறிது தளர்வாகத்தானே இருக்கிறது
கண்ணம்மா?

said...

அனானி!
புளியங்குடி பால்கோவா பற்றி இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.
அதைதான் பால்கோவாவின் சுவை
போல் சொல்லியிருக்கிறேன்.

said...

கல்லிடைக்குறிச்சி அப்பளத்தைப் பற்றி சொல்லாத நானானிக்கு என் வன்முறையான கண்டனங்கள்.

Ramalakshmi said...

ருசித்து ருசித்துச்
சாப்பிடுவார் உண்டு;
அந்த ருசியையே
ரசித்து ரசித்து எழுதி-
வாசிப்பவர் நாவில் நீர்
கசிய வைத்து விட்டீர்!

திருநெல்வேலி அல்வாவில்
பிள்ளையார் சுழியிட்டுக்
கோவில்பட்டி கடலைமிட்டாய்
சங்கரன்கோவில் பிரியாணி
சாத்தூரு வெள்ளரிக்காப் பிஞ்சு
கடம்பூரு போளியோ பஞ்சு-என
நீள்கின்ற பட்டியலையே
எட்டு ஊருக்கு மணமணக்க
வைத்து விட்டீர்!

திருவில்லிப்புத்தூர் பால்கோவா
திருச்செந்தூர் புட்டுக்கருப்பட்டி
தூத்துக்குடி மெக்ரூன்ஸ் எனத்
திகட்ட திகட்ட நீர் படைத்த
விருந்திலும்
மருந்தாக ஒரு
கருத்துச் சொல்லி எம்மைக்
கவர்ந்து விட்டீர்!

வேறென்ன?
தூத்துக்குடியில்
முத்துக் குளிக்கச்
செல்லும் மச்சான்மாரின்
இடுப்புக் கயிற்றை விட-
இறுக்கமான அவரது
பாசப் பிணைப்பையும்
பேசி இதுதான்
"நானானி பஞ்ச்" எனக்
காட்டி விட்டீர்!

said...

அக்கா,

ஓசியில ஊரு சுத்தி காட்டினதுக்கு நன்றி!!

said...

கல்லிடைக்குறிச்சி அப்பளம் பிரசித்தி பெற்றதுதான் கொத்ஸ்! ஆனால் நான் கடைகளில் அப்டியே வாங்கி அப்டியே
சாப்டும் (ஹார்லிக்ஸ் போல) பதார்த்தங்களைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். கல்லிடைக்குறிச்சி உங்கள் ஊரா? மண்வாசமோ? புளியங்குடியிலிருந்து
பால்வாசம் வீசியது...இன்னும் என்ன
என்ன வாசங்கள் வீசுமோ...?

said...

ராமலக்ஷ்மி!
'பஞ்ச்' எல்லாம் வைத்திருக்கிறேன் என்றீர்! ரஜினி படத்துக்கு வசனம் எழுதப்போகலாமோ..?ஹி..ஹி...
நன்றிம்மா!

said...

தம்பி!
ஓசியில் சுத்துப்பாத்தாச்சு...சரி..
பண்டங்கள் விலைக்கு வாங்கினீர்களா?

said...

ultimate kalakkal!!

said...

நன்றி தீட்ஷண்யா!!

Anonymous said...

Sankarankovil, puliangudi vantheenga..
Shenkottah Parotta vittuteengalae..

said...

அனானி!
மெதுவா..மெதுவா ஒவ்வொரு ஊரின் பிரசித்தங்களும் பூனைக்குட்டி மாதிரி குதித்தோடி வெளிவருகிறது! செங்கோட்டை பரோட்டா நான் கேள்விப்படாதது. அடுத்தமுறை தி-லி போகும் போது செங்கோட்டையையும் ஒரு பிடி பிடித்து விட வேண்டியதுதான். தகவலுக்கு நன்றி!!

said...

நானானி, தி.வேலி அல்வாவில் ஆரம்பித்து ........ தூ.குடி மக்ரோணி வரை ..... சொன்ன வகைகளில் மிகுதி சாப்பிட்டு இருக்கிறேன். மீதத்தையும் பார்த்து விடுகிறேன்.நல்லதொரு நகைச்சுவை கலந்த குறிப்புகள் நிறைந்த பதிவு.

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்

said...

வெள்ளரிப்பிஞ்சு, கருப்பட்டி, மெக்ரூன்
பால்கோவா எல்லாம் அங்கங்கேயே தின்னு பார்த்தாச்சுப்ப்பா.

இருட்டுக்கடை அல்வா, போளி, நன்னாரி பால், ஜிகர்தண்டாதான் பாக்கி.


வேளை வரட்டுமுன்னு பொறுமை காக்கின்றேன்:-)

said...

கடம்பூர் போளி, சங்கரன் கோவில் மட்டன் பிரியாணி - பாக்கி இருக்கு

said...

வேளை...குருபார்வை...வியாழநோக்கு எல்லாம் சீக்கிரம் கிட்ட வாழ்த்துக்கள்!!துள்சி!

said...

இதிலெல்லாம் பாக்கியே வெக்கக்கூடாது, சீனா!

said...

வேளை...குருபார்வை...வியாழநோக்கு எல்லாம் சீக்கிரம் கிட்ட வாழ்த்துக்கள்!!துள்சி!

said...

இதிலெல்லாம் பாக்கியெ வெக்கக் கூடாது, சீனா! உடனுக்குடன் தின்னு தீத்திரணும்.

said...

அருப்புக்கோட்டை நெய் மிட்டாய்ன்னு ஒன்னு சாப்புட்டு இருக்கேன் அதுவும் கூட நல்லாதான் இருக்கும்.
இனி அடிக்கடி வரேன்.

said...

நல்லகாலம் பொறக்குது.. நைன் வெஸ்டுக்கு நல்லகாலம் பொறக்குது..தேவி ஜக்கம்மா நல்வாக்கு சொல்றா..குடுகுடுப்பை இனி அடிக்கடி நைன் வெஸ்டுக்கு வரப் போறார். நல்லகாலம் பொறக்குது!
முதல் வருகைக்கு மிக்க நன்றி!